(Reading time: 55 - 110 minutes)

ருவுற்ற நாளிலிருந்து எத்தனை சின்ன விஷயங்களுக்கும் பதறி இவனும் விஜியும் ஹாஸ்பிட்டல் ஓடி இருப்பார்கள்……? அப்படி ஒரு அக்கறையும் அன்பும் அந்த சிசுவுக்கு தேவைப் படுகிறது தானே….பிறந்த பின் இன்னும் எத்தனையாய் தேவைப் படும்….

அப்படி இருக்க மித்ரனுக்கு அப்படிபட்ட அன்பை கிடைக்காமல் செய்துவிட்டதில் இவனுக்கும் பங்கு இருக்கிறதோ என்ற ஒரு உறுத்தல்…..

இதில் இப்படி நோய் என இவன் போய் ஒழிந்து கொள்ள நேரிட்ட போது….மித்ரனுக்காக தன் அப்பா ஏங்கிய காலத்தில் தான் அப்பாவுக்கு துணை நிக்காது போனதால்தான்….கடைசி கடைசியாய் அப்பா முகம் பார்க்க கூட தம்பிக்கு வழி செய்யாமல் போனதால்தான், இன்று இப்படி என் குழந்தைக்கு நான் இல்லாமல் போகிறேனோ..…என் முகம் பார்க்க கூட பிள்ளைக்கு வழி இன்றி சாகிறேனோ என்ற வரை யோசித்து துடித்துவிட்டான்….

என்னதான் அதுவரை உறுத்தல் இருந்தாலும், மித்ரன் தானாக தேடி வரும் வரை இவன் அவனை தேட முயற்சி கூட எடுக்கவில்லைதானே என்பது இப்போது பூதகர தப்பாக தோன்றியது…..

இப்படி ஆயிரமாயிரமாய் அவன் உழன்று கொண்டிருக்க….

இப்போது சட்டென அவை அனைத்தும் பொய்…..இனி அவன் விஜியோடு நொடி நேரம் கூட பிரியாது வாழப் போகிறான்….அவன் குழந்தையை தோளோடும் மார்போடும் சுமந்து பேணப் போகிறான்…. இன்பாவின் திருமணத்தை காணப் போகிறான்….அம்மாவுக்கும் பாட்டிக்கும் செய்ய வேண்டியதை செய்யப் போகிறான்….மித்ரனுக்கு இனி உண்மையான அண்ணனாய் இருக்கப் போகிறான்….என காலம் கதவை திறந்து கொடுக்க….

அதீத உணர்ச்சி கலவையில் இருந்தான் அவன்.

அதுவும் அத்தனை பேரிலும் அவனை தேடி வந்தது மித்ரன் எனும் போது ஆழமாய் ஒரு குற்ற உணர்வு…..

கூடவே இத்தனை தவிப்பிற்கும் காரணம் இவன் ஏமாந்தது என்ற அந்த புரிதல் அவன் மனதை ஆசிட்டில் முக்கி பஸ்பமாக்கிக் கொண்டிருக்கும் அந்த ஒரு உணர்வு….

ஆக  மித்ரனும் மனோவும் அவன் இருந்த அறையிலேயே இருந்து அவன் மனதிற்கு எது நல்லதோ…. எது அவனை இலகுவாக உணர வைக்குமோ…அதை செய்து கொண்டிருந்தனர்…. மருத்துவரின் ஆலோசனைப்படி, வாக்கு மூலம் என்ற பெயரில் நடந்தவைகளை ஒன்றுவிடாமல் பேச சொல்லி கேட்டுக் கொண்டிருந்தனர்…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

வர்ஷன் பொதுவாக குடும்பத்திற்குள் உம்மனா மூஞ்சி எல்லாம் கிடையாதுதான்…...கல கலப்பவன்தான். ஆனால்  எல்லா ஆண்களைப் போலவே அவனுக்கும் ப்ரச்சனைகளை பெரிதாக வீட்டில் விவரிக்க வராது…..எத்தனை பெரிய விஷயமென்றாலும் நாலு வார்த்தைகளில் அதை சொல்லி முடித்துவிடுவான்…. ஆனால் இன்று இருந்த மனநிலையில்…..அதோடு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை கருதி பேசிக் கொண்டிருந்தான்….

அப்போதுதான் இன்பா மற்ற இரு பெரியவர்களுடன் வந்து நின்றாள்…. வர்ஷன் தன் மனதை கொட்டிக் கொண்டிருக்க…. மூன்று பேர் காதிலும் விழுகிறது அது….. அவனுக்காக துடிக்க துடிக்க ஓடி வந்தவர்கள்தான்…..ஆனால் வர்ஷனின் பேச்சை கலைத்து உள்ளே வர ஏனோ மூன்று பேருக்குமே தொன்றவில்லை…. அவன் பேசிக் கொண்டிருந்த விஷயம் அப்படி….

“இல்ல மித்ரா அந்த நேரத்துல எனக்கு எதையும் இப்டிலாம் யோசிக்க தெரியலை….எனக்கு பேசிக்கா பயாலஜிகல் நாலட்ஜ் கிடையாது….மனேஜ்மென்ட்தான் என் லைன்…பயோஸி வந்த பிறகுதான் ஓரளவு எனக்கு இதைப் பத்தி தெரியும்….இதுல நான், அந்த லக்க்ஷணா, அந்த பாசுரன் மூனு பேரும்  என் ரூம்ல வச்சு பேசிட்டு இருந்தப்ப எனக்கு டிஸ்ஸி ஃபீல் அண்ட் நவ்சியா….நான் தரையில விழுந்தேன்னு ஞாபகம் இருக்கு….. அடுத்து திரும்ப நான் விழிக்கிறப்ப…. என் ரூம்க்கு பின்னால இருக்குற பெர்சனல் ரூம் பெட்ல நான்…….தரையில அந்த பாசுரன் டெட்பாடி….அவன் உடம்பெல்லாம் அங்கங்க கடிச்சு குதறின அடையாளம்…. அதுவும் கழுத்துல பெருசா ரத்தம்…

என் ட்ரெஸ்லலாம் ரத்தம்…என்  கை கால கட்டி  வேற வச்சுறுக்கு….அந்த லக்க்ஷணா அப்டியே மிரண்டு போய் ரூம்  ஓரத்துல….. இதுல இதை செய்தே நான்தான்னு அவ ஃஸ்டெப் பை ஃஸ்டெப்பா சொல்ல….எனக்கு உடம்புக்கு வேற அந்த டைம் நார்மலா ஃபீல் இல்லையா…..எதோ அனெஸ்தெடிக் கொடுத்துறுப்பாங்கன்னு இப்ப தோணுது….. அப்ப எனக்கு எதையும் சந்தேகப் பட முடியலை…..

அதோட அதுக்கு முன்ன ரெண்டு நாளா எதோ ஒரு அன்கம்ஃபர்ட் ஃபீல் உடம்புக்கு…...இப்ப யோசிச்சா ரொம்ப யோசிச்சு ப்ளான் செய்துறுக்காங்கன்னு தெரியுது…..ஏன்னா அந்த டேஸ்ல நான் லன்ச் பெரும்பாலும் பாசுரன் இல்லைனா லக்க்ஷணா கூட சாப்டுறுக்கேன்….. எதாவது சாப்பாட்டுல மிக்ஸ்‌ செய்துறுப்பாங்களா இருக்கலாம்…..ஆனா அப்ப சந்தேக பட காரணமே இல்லை….

அதோட பாசுரன் என்னால டெத்ன்ற அளவு வந்த பிறகு, எனக்கு யார்ட்டயும் அதை டிஸ்கஸ் செய்யவும் வழி இல்ல……பொதுவா எதுனாலும் ரொம்ப பெர்சனல்னா நான் விஜிட்டயோ இன்பாட்டயோதான் பேச முடியும்….. வீட்ல என்னை தவிர நாலு பேருமே லேடீஸ்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.