(Reading time: 55 - 110 minutes)

தோடு பொதுவாக இரண்டாம் தாரத்திற்கும், அவளின் பிள்ளைகளூக்கும் கிடைக்கும் சொத்து பாகமோ….குடும்ப அங்கீகாரமோ மூத்த தார பிள்ளைகளுக்கு கிடைப்பது இல்லை நமது சமூகத்தில்……சித்தி கொடுமைக்கு ஆளாகி வதைந்து அழிவது தான் மூத்த தாரபிள்ளைகள் பெரும்பாலோனரின் பங்கு…….அதை அறிந்தவர் என்பதால்…… மித்ரன் மீது கடும் காழ்புணர்ச்சியும் அவனை தன் மகள் வீட்டிற்குள் விட்டுவிடக் கூடாது என்ற கொடும் முயற்சியும் உண்டு இவருக்கு….

ஆக அவன் செய்த உதவி எல்லாம் விஷயமாக படவில்லை அதுவரையுமே….. ஆனால் இங்கு வரவும் வர்ஷன் பேசிய இந்த விதமும் விஷயமும் அவரை  அசைத்தது….. மித்ரன் வர்ஷன் கூட இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் என முதன் முறையாக ஒரு சிந்தனை அவரை சுட்டுப் போகிறது…… ஆம் அவரை மீறி எழுந்த நினைவு அது…..செந்தீயாய் சுடுகிறதும்தான்….

இதில் முதலில் வர்ஷனிடம் நடந்தவைகளைப் பற்றி சீரியஸ் விஷயங்களை உணர்வுப் பூர்வமாக களஞ்சியமும் இன்பாவும் இவருமாக பேசிக் கொண்டிருக்க….. அடுத்து சற்று நிதானபடவும் பேச்சு மனோ மித்ரன் புறமாக திரும்புகிறது….. வர்ஷன்தான் அவர்களை பத்தி பேச தொடங்கியது….. அதில் இன்பா இணைந்து கொண்டாள்….அப்போது இன்பா கிட்நாப் விஷயத்தை பற்றி வர்ஷனுக்கு சொல்லப் படுகிறது….

பாட்டிக்கு இதுவரையுமே இந்த விஷயம் தெரியாது……இப்போது கேட்க கேட்க….”தம்பின்னு வீட்ல இருக்கவன் இது கூட செய்யமாட்டானா….”என மட்டம் தட்டும் விதமாகதான் இவர் சொல்லி வைத்தது…..ஆனால் சொன்ன பின் அந்த வார்த்தைகளே அவரை சுட்டது…..தம்பின்னு மித்ரன் மாதிரி ஒருத்தன் இருந்தா இவங்களுக்கு நல்லதுதானோ???

அதன் பின் அங்கு உரையாடல் எங்கெங்கோ சுத்த இவருக்கு இரண்டு விதமான மன குடைச்சல்….. இந்த மித்ரனைப் போய் இவ்ளவு பிடிக்குது இவங்களுக்கு….. என்று ஒரு எரிச்சல்….இன்னொரு புறம் அவன் இவங்க கூட இருக்றது நல்லதோ என அவருக்கே பிடிக்காத நமச்சல். 

மெல்லமாக எழுந்து அறையைவிட்டு வெளியே வந்தார்….அடுத்த அறைதான் வெயிட்டிங் ரூமாய் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறை. அங்குதான் மித்ரனும் மனோவும் இருக்கின்றனர் என இவருக்கு தெரியும்…

எதோ ஒரு உந்துதல்…..போய் அதன் வாசலில் நின்றார்…. உள்ளே பேசும் சத்தம் காதில் விழுகிறது….

அகதன் வந்திருந்தான்….அவனிடம் மனோ பேசிக் கொண்டிருந்தாள்…….

இன்பா அண்ட் கோ இங்கே இருப்பதால் யாரும் எப்போதும் இந்த அறைக்கு வர முடியும் என்ற நோக்கில் கதவை உள்ளே தாழிடாமல் சாத்தி மட்டும் வைத்திருந்தாள் மனோ. ஆக பட்டி மெல்ல தள்ளவும் அது சற்றாய் திறக்கிறது…

உள்ளே நடப்பதும் சற்றாய் கண்ணில் தெரிகிறது இவருக்கு…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“இருந்த டென்ஷன்ல…நான் நைட் முழுக்க உட்காரவே இல்ல அகி…அதான் ரொம்ப வலிக்குது….” மனோ அங்கிருந்த கவுச்சில் கால் நீட்டி உட்கார்ந்திருக்க….. அவளுக்கு ஸ்பூனால் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த அகதன் சாப்பாடை அருகில் வைத்துவிட்டு அவள் கால்களை சற்று உருவி விட்டான்….….

“ வீட்டுக்குப் போனதும் அம்மா சொன்ன மாதிரி கண்டிப்பா செய்திடு மகி….” என்றவன் பின் “இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்ல ஸ்டே பண்ணலாம்….சொன்னா கேட்டாதான…” என சற்றாய் கடிந்தான்.

அதற்கு பதிலாய் “ இல்ல அகி…..” மெல்லமாய் முனங்கியபடி அருகிலிருந்த பெட்டில் தூங்கிக் கொண்டிருந்த மித்ரனை திரும்பிப் பார்த்தாள் அவள்.

பின் அகதனைப் பார்த்து “இன்னொரு நாள் வர்றோம் அகி….” என்றாள் சற்று கெஞ்சலாய்…. ஆனால் உடனேயே…. “சாப்பாட தா அகி…..எவ்ளவு ஸ்லோவா தார நீ….பசிக்குது…” என்று என அதிகாரமாய் தன் அண்ணனை குறையும் சொன்னாள்.

அகதனோ இப்போதும் இறங்கித்தான் போனான்…..“லேப்ல வர்க் பண்ணா கைட்ட சாப்ட மாட்டேன்னு சொல்றது ஓகே……ஆனா ஸ்பூன்ட்ட கூட அடுத்தவங்கதான் கொடுக்கனும்னு சொல்றது ரொம்ப ஓவர் மகி……. அதுவும் இனிமே லேப்க்கு வேற அடிக்கடி போக வேண்டி இருக்கும் உனக்கு…..” இப்படி சொன்னாலும் அருகிலிருந்த சாப்பாடை எடுத்து ஸ்பூனில் கொடுத்துக் கொண்டுதான் இருந்தான் அவன்….

“ஆன்…அது நீ இப்ப இங்க இருக்கல்ல அதனால….இல்லனா நான் யார கேட்க …?” என்று நொடித்துக் கொண்ட மனோவின் பார்வை மீண்டுமாய் மித்ரன் புறமாக ஒரு முறை போய் வருகிறது…..

“மாப்ள ஜாப் ப்ரொஃபைலுக்கு அவர் இந்த வேலையும் வந்து செய்யனும்னு சொல்லிடாத….பாவம் அவர்…” என்று அகதன் இப்போது தங்கையை வாரினான்.

“ஆமா….அவங்க வந்தாதான் நான் சாப்டனும்னு இருந்தா நான் சாப்ட்ட மாதிரிதான்….” என அதற்கு மீண்டுமாய் நொடித்த மனோ…..

உடனேயே “ஆனா நீ நினைக்கிற மாதிரிலாம் அவங்க டைமிங் கிடையாது அகி….எல்லா நாளும் நேத்து மாதிரியே இருக்காதாம்….சில நாள் இப்டின்னா…..சில நாள் ஃப்ரீயாவும் இருக்குமாம்…..அவங்களுக்கு ரெகுலர் போலீஸ் மாதிரி ரோல் கிடையாதே….” என அகதனுக்கு திருப்தி உண்டாக்கும் படி ஒரு விளக்கம் கொடுத்தாள்….. அதாவது அவங்க என்னை நல்லா பார்த்துப்பாங்க…..என்பது இன்டைரக்ட் மெசேஜ்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.