(Reading time: 55 - 110 minutes)

வனோ சற்று இறுகிய முகத்துடன் இவள் பேசுவதை மறுத்து ஏதோ பேசுகிறான்.

கடைசில போயும் போயும் அவன்ட்ட போய் இவ கெஞ்சிட்டு இருக்காளே …என ஒரு பக்கம் கொதித்தாலும்….மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு பார்வையை வேறு புறம் திருப்பி அந்த இடத்தை கடந்து வந்துவிட்டார்.

 இவர் வீட்டிற்கு போய் சற்று நேரத்தில் வீடு வந்த இன்பாவுக்கு இந்த ஜோவன் பற்றிய மூடத் தனத்தை விடு என இவர் அட்வைஃஸ் செய்ய சென்றால்…அவளோ தன் ரூமை உள் புறமாக பூட்டிக் கொண்டு இருந்தாள்.

வழக்கமா தூங்கறப்ப தான் அவள் அப்படி செய்வது வழக்கம்….. சரி தூங்கி விழிக்கட்டும் என இவர் காத்திருக்க…..அன்று மாலை வரை அவள் எழுந்திரிக்கவே இல்லை எனும் போது முதல் முதலாய் பயம் வந்தது….. அதுவும் முழு பயமாகவே வந்தது……. அங்க அந்த ஜோவன்ட்ட  அப்டி அழுதுட்டு இருந்தாளே……அவன் வேற இவ பாட்டி இருக்றவரைக்கும் இவள கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொல்லி இருந்தானே…..

வர்ஷனோடு இருக்கவென அங்கு தங்கிவிட்ட களஞ்சியத்தை தான் முதலில் அழைத்தார்….. வீட்டு பொண்னு சூசைட் அட்டெம்ட்னு வேற யார்ட்ட சொல்ல முடியும்….? அவர் தன் மொபைலை ஹேண்ட் பேக்கில் வைத்திருந்தவர் அதைப் பார்க்கவே இல்லை…

அடுத்து இன்னுமாய் யோசித்துக் கொண்டிருக்கவெல்லாம் இவருக்கு நேரமில்லை…..அவரையும் மீறி அவர் கண்ணில் வந்தது மனோதான்…..வர்ஷன் இப்ப இருக்ற கண்டிஷன்ல எங்க வெளிய வர….?. கட கடவென வீட்டிலிருந்த டெலிபோன் டைரியில் தேடி  எண்ணை எடுத்து அழைத்து அவளது முதல் ஹலோவில்….

“இன்பா “ என ஆரம்பித்தவருக்கு அடுத்து பேச கூட வரவில்லை….மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது…. “இன்பா ரூமுக்குள்ள போய் பூட்டிகிட்டு…..”

இவர் என்ன சொல்ல வருகிறார் என இன்னுமா அவளுக்கு புரியாமல் இருக்கும்….

“பாட்டி அங்க ரூம்க்கு ஸ்பேர் கீ உண்டு அதை எடுத்து டோர ஓபன் செய்ய முடியுதான்னு பாருங்க…..முதல்ல அவங்கட்ட பேச்சு கொடுங்க……இங்க நாங்க அங்க வர்றோம்…….” அவள் பேசப் பேச அருகிலிருந்த மித்ரனுக்குமே புரிகிறது விஷயம்.

“யாரு மனு…?” இன்பாவா  ? இல்ல அம்மாவா? ”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" - புத்தம் புதிய தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

இப்போது கார் பார்க்கிங்கை நோக்கி ஓடிய அவனை தொடந்து போய்க் கொண்டிருந்த மனோவுக்கு, அவனது கேள்வியில்,  இவளது மாமியார் களஞ்சியம் விலகிப் போவது  வெறுப்பில் இல்லையோ என்று ஏனோ தோன்றுகிறது.

வர்கள் வீட்டை அடையும் முன்னும் அங்கு அதற்குள் பாட்டி அடுத்த சாவி வழியாய் கதவை திறந்து பார்க்க, இன்பா படுக்கையில் கிடந்தாள்…..  பாட்டி எத்தனை உலுக்கியும் அனத்தல் தவிர அவளிடமிருந்து எதுவுமில்லை….

அப்போதுதான் படுக்கை அருகில் கிடந்த அது கண்ணில் படுகிறது பாட்டிக்கு…..தூக்க மாத்திரை பாட்டில் ஒன்று காலியாய் கிடக்கிறது அங்கே…

ஐயோஓஓஓஓஓ…..ஒரு முழு பாட்டில்…… இள வயது மகளை சடலமாக பார்த்தவர் அல்லவா…அது கண்ணில் விரிய…..இன்பா பிறந்த நொடியிலிருந்து இன்றுவரை சம்பந்தபட்ட சில காட்சிகள் மனதில் ஓட….. எங்கோ போய் இருட்டுக்குள் விழுந்தார்…..

கடவுளே என் பிள்ளய நானே கொன்னுட்டேன் போலயே…..அவ எதுக்குமே எப்பவுமே பெருசா ஆசைப் பட்டது கிடையாதே…..இப்டி அவ ஒத்த ஆசைய கொன்னு அவளை இப்டியா பறிகொடுப்பேன்னு கற்பனை கூட பண்ணலையே…..எல்லாத்துக்கு பின்னாலயும் ஒரு நல்லது இருக்கும் பாட்டின்னு சொல்லிட்டு அலைவாளே……அப்படிபட்டவளுக்கு சாவு தான் சரியான முடிவுன்னு தோண வச்சுட்டனே பாவீ….. பேசுறப்ப சுத்திலும் பார்த்து பார்த்து பேசுவாளே…..அவ போய் பொது இடம்னு பாராம கண்ணெல்லாம் தண்ணியா அவன்ட்ட எப்டி கெஞ்சிட்டு நின்னா…… ஐயோ எனக்கு அப்பவே ஒறச்சுறுக்கனுமே…. நான் என் பையன் வீட்டுக்கு போறேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா என் பிள்ள இப்ப மானாட்டாம் ஓடிட்டு அலைவாளே…..ஐயோ கடவுளே…..இதிலேயே அவர் நினைவு சுற்றிக் கொண்டிருக்க……

அவர் கன்னத்தில் யாரோ தட்டுவது மெல்ல மெல்ல புரிகிறது….. கஷ்டபட்டு கண் திறக்க அவர் முயல….. ம் ஹூம்….. கண்களை எதுவோ திறக்க முடியாத படி மறைத்து கட்டி இருப்பது புரிகிறது….அதோடு அந்த பகுதியில் சுருக் சுருக் என ஊசி குத்தாய் குடைந்து எடுக்கிறது வலி…

“ பயப்படாதீங்கம்மா……உங்க கண்ணுக்கு ஒன்னுமில்ல….நீங்க மயங்கி விழுந்ததுல….பக்கதுல இருந்த கண்ணாடி ஜக் உடஞ்சு கண்ல பட்றுக்கு…ஐ சைட்டுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல……ரெண்டு வாரத்துல கட்டை பிரிக்கவும் நீங்க முன்ன மாதிரியே பார்க்கலாம்….இப்பகண்ண ஸ்ட்ரெய்ன் செய்துகாதீங்கம்மா….” யாரோ சொல்வது கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது இவருக்கு…..

கூடவே மனதில் சிரிக்கிறது இன்பாவின் முகம்……

‘ஐயோ  என் பிள்ள முகத்தை கடைசியா ஒரு தடவை பார்க்க முடியாதா…..’ இவர் மனம் ஓலமிட……”. ஐயோஓஓஓ இன்பா…..” வாய் விட்டு அரற்றினார் அவர்…

“என்ன பாட்டி…?” சோர்ந்து கேட்டது இன்பாவின் குரல்….. அதே நேரம் மெல்ல இவர் நெற்றியில் அமர்கிறது ஒரு மென் கை…..

அது யாரது கை என இவருக்கு தெரியும்… இன்பாவின் கைதான்……பாய்ந்து பதறி அந்த கையை பற்றியவர்…… என் பிள்ள …என் பிள்ள….. என வெடிக்க ஆரம்பித்தார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.