Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 11 - 22 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It
Author: saki

09. பைராகி - சகி

bhairagi

நாம் சில நேரம் மாயை என்று எண்ணம் கொள்ளும் நிகழ்வானது,நமது அறிவினை சோதிக்கும் பொருட்டு காலத்தின் கட்டாயத்தினால் மெய் ஆகலாம்!!

கணநேரம் கண்முன் விஸ்வரூபம் எடுக்கும் அந்த மாயை நமது வாழ்வின் பல திருப்புமுனைகளுக்கு விதை விதைக்கலாம்!!மாயைகள் மனிதனுக்கு அச்சமூட்ட உருவாக்கப்பட்டவை அல்ல!அவை அவனது ஞானத்தை சோதிக்க பிறந்தவை!!

அடர்ந்தவனம் அது!!நிசப்தம் குடிக்கொண்டிருந்த வனம்!!சர்வமும் அமைதி!!அவ்வபோது காற்றின் சலசலப்பு கேட்டது!!நிர்மூலமான அந்த இடத்தினில் திடீரென ஒரு பெண்ணின் அலறல் சத்தம்!!பதறியப்படி எழுந்தான் ஆதித்யா!!

மீண்டும் பதற வைக்கும் சொப்பனம்!!

கடந்த சில காலங்களாக அவன் மனமானது எண்ணற்ற துர்சொப்பனங்களால் அவதிப்படுகின்றதை அவன் உணராமல் இல்லை.ஏன் இப்படி நிகழ்கிறது??இதன் பின்னணி யாது??எதையும் அவன் அறிந்திருக்கவில்லை..ஒன்றை தவிர!!அந்தப் புத்தகம் கரம் வந்தப்பிறகே இவ்வாறான நிகழ்வுகளை அதிகமாக அவன் சந்திக்கிறான்!!மணி இரவு பத்து!!உறக்கமும் வந்து சேரவில்லை.

அமானுஷ்யமாய் இருந்தது அவனுக்கு!!என்ன நிகழ்கிறது என்னும் கேள்வி அவன் மனதினை தௌவாய் குழப்பியது!!மெத்தையைவிட்டு எழுந்தான்.அன்று சித்திரை மாத பௌர்ணமி!!அந்நாளில் நிகழும் உற்சவத்திற்காய் சிதம்பரம் வரை சென்றிருந்தார் ஜானகி!!இன்னும் இரு தினங்கள் அவர் திரும்ப ஆகலாம்!!

அன்று சித்திராபௌர்ணமி என்பதால்,யாத்ராவும் இறைவனைவிட்டு அகலவில்லை.

கண்களை கசக்கியப்படி நாற்காலியில் அமர்ந்தான் அவன்.மேசையிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்தான்.எப்படி திறப்பது என்று சிந்திக்கலானான்.புத்தகத்தை வியாபித்திருந்த ஆதவனின் சின்னம் அவனது கவனத்தை ஈர்த்தது.ரம்யமான ஆதவனை சுற்றிய கிரணங்கள் வெறும் ஐந்தாகவே இருந்தன...அவன் அவனது இடக்கரத்தை மெல்ல தூக்கி தனது ஐந்து விரல்களையும் அதில் பதித்தான்.ஒரு நவீன தானியங்கி இயந்திரத்தை போல அந்த ஆதவன் உள்ளிறங்கியது.திடுக்கிட்டு தனது கரத்தை எடுத்தான் அவன்.அது தன்னிச்சையாக திரும்பி அந்த புத்தகத்தை பக்கம் பதிக்கப்பட்டிருந்த தோல் அறுந்து விழுந்து திறந்தது...

நடந்தவற்றை இமைக்காமல் பார்த்தவனின் இதயத்தில் அச்சம் கலந்த ஆர்வம் குடிக்கொண்டது.

அவன் அந்தப் புத்தகத்தை திறந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"இனிமையான சந்திரனின் சாட்சியால்,செழுமையான ஆதவனின் உதயம்!"என்று எழுதி இருந்தது.

ஆதித்யா நிமிர்ந்து வானின் வெண்ணிலவை நோக்கினான்.

பின்,அடுத்தப் பக்கத்தை திருப்பினான்.

"யுகயுகமான தவத்தின் பலனின் கரம் சேர்ந்த காவியம்!"என்றிருந்தது.

அடுத்தப் பக்கத்தை திருப்பினான்..

"எனை நானே என்னிடம் செய்யும் அறிமுகம்!"என்றிருந்தது...

அடுத்த பக்கம்...

"வாசிப்பது யாராயினும்,திறவுகோல் நானாவேன்!"

அடுத்த பக்கம்....

இதிகாசம் ஆரம்பம்...

பல வருடங்களுக்கு முன்பு..

பைரவக்கோட்டை சமஸ்தானம்,ஓர் எழில் ஓவியம்!!கண் கவரும் வயல்கள்..

அளவான அளவினில் நெற்பயிரானது,வளர்ந்திருக்கும்!தை மாதத்தில் அது வளைந்து கொண்டு நாணம் கொண்ட பெண்ணாய் தோற்றமளிக்கும்!!அங்கு யாவரும் கலைஞர்களே!!உழவர்களின் பாட்டிற்கு ஆனந்த கும்மிக்கொட்டி பயிர்கள் அறுவடை காலத்தில் மகசூலை அதிகமாக்கும்!!

அங்கு யாவரும் மன்னரே!!ஒருவரை மற்றொருவர் இகழ்ந்தது இல்லை!பெண்களுக்கு ஆண்களின் சமத்திற்கு உரிமை இருந்தது!!பெண்களும் கல்வியில் தலைச்சிறந்து விளங்கினர்.

சிறுவர்கள்,குருகுலம் செல்ல மறுத்து ஓடிய சமயங்களில் எல்லாம் அவர்களை சமாளிக்கும் தாய்மார்களின் உக்தி அழகோ அழகு!!

சூரிய உதயத்திற்கு முன்பே பணிக்கு கிளம்பிவிடுவர் ஆண்கள்!!வீதிதோறும் மாக்கோலமிடும் நங்கைகளை ஓரக்கண்ணால் கூட கவனிக்காமல் தங்களின் கண்ணியத்தை காத்தனர் காளைகள்!!

பூமிதேவியானவர் இயற்கை வளங்களை வாரி வழங்கி இருந்தாள்.

வளங்கள் பொருந்திய பைரவக்கோட்டைக்கு மன்னராய் திகழ்ந்தவர் சக்கரவர்த்தி ராஜசேனவர்மர்!!இளம் வயதிலே முடிய சூட்டப்பெற்றவர்.அவர் திக்விஜயம் செல்லும் நாடுகள் யாவும் அவரிடம் மண்டியிட்டு தலைவணங்கும்!!

சிறந்த வீரரான அவர் யுக்தக்களத்திலே தன் ஆயுளை பாதி கழித்தவர்.காலம் யுக்தக்களத்திலே கழிய தனது நடுத்தர வயதில் தான் விவாஹ பந்தத்தை ஸ்வீகரித்தார்.

இரு தார விவாஹம்!!காசி தேசத்து சகோதரிகள் இருவரை மணம் முடித்தார்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Saki

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - பைராகி - 09 - சகிMeera S 2016-08-15 12:34
Very interesting epi saki....
Aadhitya varmanin vazhkaiyai patri melum therinthu kolla kathirukiren... :yes:
Reply | Reply with quote | Quote
# பைராகிanjana 2016-08-15 11:30
nice epi mam..adhitya varma story interestinga poguthu.. waiting for next epi...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பைராகி - 09 - சகிSubhasree 2016-08-13 23:01
Intrestinga poguthu unga story ... (y)
very nice epi ... :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பைராகி - 09 - சகிChithra V 2016-08-13 22:59
Nice update saki (y) (y)
Adhithya varman story starting nalla irukku :)
Melum terindhu kolla arvama irukku :)
Eagerly waiting next epi :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பைராகி - 09 - சகிJansi 2016-08-13 22:25
Very nice epi saki
Very interesting (y)
Reply | Reply with quote | Quote
# Super Update Saki mamChillzee Team 2016-08-13 21:14
Adhitya varma pathi sonathu romba nalla irku (y)
Unga narration Simply Superbb :clap:

Next enna nu therinchukka romba aavala irken mam :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பைராகி - 09 - சகிDevi 2016-08-13 20:59
Nice update Saki (y)
historical portions padikka aarvama irukku :-)
waiting to read more (y)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top