(Reading time: 11 - 22 minutes)

மூத்தவர் காத்யாயினி தேவி!!பெரும் வீரம் மிக்கவர்!!யுத்த உக்திகை சிறந்த முறையில் கற்றுத் தேர்ந்தவர்.தனது இல்வாழ்க்கை நடுத்தர வயது மன்னனோடு நிகழ்ந்ததை அவரால் ஏற்க இயலவில்லை.எனினும்,பாரத பண்பாடு அவரை கட்டுப்போட்டு உழல செய்தது...

அவருக்கு ஒரு மகன் பிறந்தான்!!

குருக்ஷேத்திர வர்மன்!!அவன் செல்லும் ஷேத்திரங்கள் நடுநடுங்கி ஓட வேண்டும்!இல்லையேல்,சரவ நாசமாக வேண்டும்.இரண்டாமானவர் மித்திரை!!அனைவரிடமும் பேதம் பார்க்காமல் சிநேகம் பாராட்டுபவர்!!

சீர்மையான ஞானம் கொண்டவர்!!சிறந்த சிவபக்தர்!!நற்குணங்களின் உறைவிடமாய் திகழ்பவர்.

அரசரின் பால் கொண்ட பத்தினி தர்மம் அவரை அரசர் மீது மிகுந்த பக்தி கொள்ள வைத்தது.

அவருக்கு ஒரு மகன் பிறந்தான்!!ஆதித்யவர்மன்!!அவன் பற்றிய விளக்கம் நான் அளிக்க வேண்டியதில்லை!!கதையே அளிக்கும்!!

குதிரைகளின் குளம்படி சப்தம் செவிகளை கிழித்தது...

அனைவரும் அரசமுத்திரையை கொண்ட அஸ்வங்களுக்கு கீழ்படிந்து விலகி சென்றனர்.

"இளவரசர் குருக்ஷேத்திரர் வருகிறார் வழி விடுங்கள்!"-கூவியப்படி முன் சென்றனர் பாதுகாவலர்கள்...

காற்றின் வேகத்திற்கு ஈடுக்கொடுத்து ஓடிய அஸ்வங்கள் எதிர் நின்றவர்களை குறித்து கவலைக் கொள்ளவதாக தெரியவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

விரைந்து அரண்மனை நோக்கி புறப்பட்டனர்.

அதனை கவனித்த சிறுமி தன் தாயிடம் கேட்டாள்,

"மாதா!இளவரசர் தன் பிரஜைகளின் முகம் கூட பாராது எங்கு செல்கிறார்?"

"அரச குடும்பத்தவர்,பிரஜைகளின் மித்திரர்கள் அல்ல மையூரி!அவர்களின் செவிகள் உனது வாக்கியத்தை கேட்டிருந்தாள்..நீ தண்டிக்கப்பட்டிருப்பாய்!"

"எனில்,அவர்கள் கொடுமைகாரர்களா மாதா?"

"அல்ல மகளே!!வினைப் பயனால் ராஜவம்சம் தன்னில்  ஜெனனம் எடுக்கும் அரச குடும்பத்தவர்,செல்வ செழிப்பின் காரணத்தால் தனது பிரஜைகளின் நிலை மறக்கிறார்.

தான் என்ற அகங்காரத்தினால் அவர் தன் மனம் போன போக்கினில் செல்கிறார்!"-அவர்கள் பேசிக் கொண்டிருக்க கூட்டம் சலசலத்தது.

கூட்டத்தை பிளந்துக்கொண்டு மேலும் சிலர் வந்தனர்.அஸ்வங்கள் இருந்தும்,அவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அதில் ஒருவனின் முகத்தில் ஐஸ்வர்யம் பொருந்திய தேஜஸ் மிளிர்ந்திருந்தது!!புன்னகை ததும்பிய முகத்தில் ஒரு கம்பீரம்!!தெய்வீகம்!!

"இளவரசே!சற்று தொலைவே இருக்கின்றது!அஸ்வத்தில் செல்லலாம் அல்லவா??"

"காரணம் என்ன சேனாதிபதி?"

"தமது வதனம் களைத்து காணப்படுகிறது!"

"எனில் அஸ்வத்தின் நிலை?"

".............."

"தனையும் சுமந்து எனையும் அது சுமக்க வேண்டுமா?சற்று தொலைவு தானே..நான் நடந்து வருகிறேன்!தாம் செல்லுங்கள்!நான் வருகிறேன்!"

"இல்லை...இளவரசே!"

"அஞ்ச வேண்டாம்!என்னுடன் என் மித்திரன் வருகிறான்!"-தனது அஸ்வத்தை சுட்டினார் அவர்.

"விரைந்து செல்லுங்கள்!"

"ஆகட்டும்!"-சேனாதிபதி விழியசைக்க யாவரும் குதிர மீது ஏறி சென்றனர்.

தனித்து வந்த இளவரசரின் பால் அனைவரின் கவனமும் சென்றது.மையூரியின் பார்வை உட்பட!!அவளருகே வந்தவர்,அவளது தாயிடத்தில்,

"சகோதரி!"என்றார்.

"பணிகிறேன் ராஜகுமாரரே!"

"பணிக்கின்றேன்!தம்மிடம் ஒரு வேண்டுதல்!"

"கூறுங்கள்!"

"சற்று நீர் கிட்டுமா?நெடுந்தொலைவில் இருந்து வருகிறோம்!"

"அமருங்கள்!வருகிறேன்!"-அவள் உள்ளே சென்றாள்.

சற்று தொலைவில் நின்றிருந்த இளவரசரை உற்று பார்த்தாள் மையூரி!

அவரது பார்வை அவளை அளந்தது.

அவளருகே வந்து மண்டியிட்டார் அவர்.

"உனது நாமம் என்ன?"

"மையூரி!"-என்றாள் சிறு அச்சத்தோடு!!

"அழகிய பெயர்!உன்னை போலவே!"

"தாம் இந்நாட்டின் ராஜகுமாரர் அல்லவா?"

"ஆம்!"

"தாம் என்னுடன் பேசுகிறீர்கள்?"

"ஏன்?தங்களிடம் நான் பேசுவது குற்றமாகுமா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.