(Reading time: 11 - 22 minutes)

"னது தாய் என்னிடத்தில் அரச குடும்பத்தவர் பிரஜைகளிடத்தில் சிநேகம் பாராட்ட மாட்டார் என்றார்!மேலும் அவர்,ராஜ குடும்பத்தவர் அகங்காரம் கொண்டவர் என்றார்!"-மெய் உரைத்த குழந்தையின் கூற்று அவரது நெஞ்சத்தை கிழித்தது.

"அது உண்மையென்றால்,இனி,நான் இளவரசன் அல்ல!உனது மித்திரன்!சரியா?"

"உண்மையாகவா?"

"இறைவனின் சாட்சியாக!"

"உனது பெயர் என்ன?"

"ஆதித்யா!"

"நான் வணங்கும் சூரிய நாராயணரின் பெயர்!உனக்கு பொருத்தமாக உள்ளது!"-அவன் அச்சிறுமியை அணைத்துக் கொண்டான்.

"மன்னித்தருளுங்கள் இளவரசே!அறியாத பேதை தெரியாமல் பேசினாள்!"

"நிதர்சனம் கூறினாள்!தங்கள் புதல்வி சீரிய ஞானம் பெற்றவள்!தவறிழைத்த தமையனுக்காய் மன்னிப்பு வேண்டுகிறேன் தாயே!"

"அவசியமில்லை..இளவரசே!தமது அன்னையை போலவே அன்புமிக்கவர் தாம்!எங்களது பாக்கியம் தாம்!"-என்று கொண்டு வந்த நீரினை தந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"நன்றி!"-வாங்கிய ஜலத்தினை முதலில் தனது அஸ்வத்தின் தாகம் தீர தாரை வார்த்தான் அவன்.

"நெடுந்தூரம் பயணம் செய்துள்ளாய் தாகம் தீர்ப்பாயாக!"-அவனது பிரியத்திற்குரிய அஸ்வம் அவனது ஆணையை நிறைவேற்றியது.

ராஜமண்டபத்தில்...

"குருக்ஷேத்திரன் வருகை தந்தும்,ஆதித்யன் இன்னும் வருகை தராததன் காரணம் என்ன?"-கவலை தோய்ந்த முகத்துடன் வினவினார் மன்னர்.

"அரசர் புகழ் ஓங்குக!இளவரசர் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்!ஆதலால்,தாமதம் குறித்து தம்மிடம் எடுத்துரைக்க கூறினார்."

"என்ன?அவனது அஸ்வத்திற்கு நேர்ந்தது யாது?"

"அவர் அஸ்வத்தின் களைப்பு குறித்து ஆலோசித்த காரணத்தால் தான் நடைப்பயணம் மேற்கொண்டார்."-இதைக் கேட்டதும் நகையாடினான்மூத்த இளவரசன்.

"அஸ்வத்தின் ஆயுள் குறித்து ஆலோசிக்கின்றானா என் அநுஜன்!"-அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில்.

"இளைய ராஜகுமாரர் வருகின்றார்!"-என்ற பறையொலி கேட்டது..

கம்பீர நடையுடன்,எதைக்குறித்தும் கவலை கொள்ளாத பார்வையுடன் வந்தார்இளவரசர்..

"பணிவான வணக்கங்கள் அரசே!"

"நலமோடு வாழ்வாய்!"

".............."

"உடல் நலனில் குறையேதும் இல்லையே!யுத்தக்களம் புகுந்து நெடுநாள் கழித்து திரும்பி இருக்கிறாய்!"

"இல்லை...குறையேதுமில்லை அரசே!தாமததிற்கு மன்னிப்பு வேண்டுகிறேன்!"

"அவசியமில்லை மகனே!சேனாதிபதி மூலம் விவரம் அறிந்தேன்!உனை எண்ணி பெருமை கொள்கிறேன்!"-ஏனோ அதில் பொறாமை கொண்ஞது அங்கிருந்த ஒரு மனம்.

"ஏதேனும் கூற விரும்புகிறாயா?"

"வேண்டுதல் ஒன்று உள்ளது!"

"தயங்காமல் கூறு!"

"யுத்தம் நடந்த காளிங்க இடத்தில் பாதிக்கப்பட்ட அத்தேசத்து பிரஜைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்!"-அங்கிருந்தோர் திடுக்கிட்டனர்.

"அரசர் சாலமனை சிறையில் அடைக்காமல்,ஒரு பிரஜையாக வாழ சுதந்திரம் வழங்க வேண்டும்!!"

"தாம் அத்தேசத்திற்கு சென்று அனைவரது குறைகளையும் கேட்டருள வேண்டும்!"

"என்ன வேண்டுதல் இது?தோற்ற தேசத்தை நம்மோடு சமப்படுத்துவதா?"

"மன்னியுங்கள் இளவரசர் குருக்ஷேத்திரரே!தோல்வி என்ற அடையாளம் இங்கு யவருக்கு உரிதானது அல்ல!!போரில் வஞ்சகமே தோல்வியாகிறது!இயலாமை என்றும் தோல்வியாகாது! பிறரின் கண்ணீருக்கு அரசரானர் மதிப்பு அளிப்பது அவசியமே!!காளிங்கா தேசத்து பிரஜைகளின் சார்பாக ஆதித்யவர்மன் கொணர்ந்த தூது இது!"-திடமாக உரைத்தார் இளவரசர்.

அனைவரும் வாயடைத்து நின்றனர்.

"இதுக்குறித்து சில தினங்களில் ஆலோசனை செய்கிறோம் இளவரசே!"-இளவரசர் தனது இடக்கரத்தை வலது நெஞ்சினில் வைத்து பணிந்து அங்கிருந்து புறப்பட்டார்.

நல்மனம் படைத்த சிலரது இதயங்களில் அவரது கீர்த்தி ஓங்கி நின்றது.

ந்தப்புரம்...

"மஹாராணியர் புகழ் ஓங்குக!!இளவரசர் ஆதித்யர் தம்மிருவரையும் காண வேண்டி காத்திருக்கிறார்!"-தூது வந்தாள் தாதி ஒருத்தி.

"அனுமதி வேண்டி நிற்பதன் காரணம் என்ன?அழைத்ததாக கூறு!"-சற்றே கோபத்துடன் உரைத்தார் காத்யாயினி தேவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.