(Reading time: 11 - 22 minutes)

"த்தரவு!"-என்ற விடைப்பெற்ற தாதி சென்ற சில நிமிடங்களில் பிரவேசித்தார் ஆதித்யர்.

"சக்கரவர்த்தினி மற்றும் மகாராணியை சிரம் தாழ்த்தி பணிகின்றேன்!"

"மகனே!"-என்று ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டார் காத்யாயினி.

"யுத்தக்களம் பிரவேசித்ததும் தாயான இருவரையும் மறந்தாயா?நான்கு திங்களாய் வாடுகிறேன்!ஓலை ஏதும் அனுப்பும் மனம் இல்லையா உனக்கு?"

"பணி ஆற்றுவது என்பது ஒரு மனிதனின் கடமை மட்டுமன்றி கர்மமும் ஆகும் மாதா!தமது எங்கள் பல தினங்கள் என்னை வாட்டின!ஓலை அனுப்பாததன் காரணமும் அதுவே!மனதினில் கவலை வியாபித்தால்,அரசரின் ஆணையை என்னால் எவ்வாறு நிறைவேற்ற இயலும்?"

"குறை ஏதுமில்லையே!"

"தம்முடன் இல்லாத நாட்கள் யாவும் குறைக்கொண்ட நாட்களே மாதா!"-அவர் கண்கள் கசிந்தன.

"எனது மனதின் வேதனைகளில் தலையாயது இதுவே மகனே!இனிமையாக பேசும் உன்னை போன்ற புண்ணிய ஆத்மாவை ஏன் இறைவன் எனது கருவில் விதைக்க மறந்தான்!"-கலங்கி நின்றவரை தேற்றினார் அரது சகோதரி.

"நீ எப்போதெல்லாம் ஒரு தாயிடம் உரையாடுகிறாயோ!அப்போதெல்லாம் இதே சிந்தனையை அனைவரது மனதிலும் விதைக்கிறாய்.பார்!இன்று என் தமக்கையை கண்ணீர் சிந்த வைத்தாய்!"

"இதில்,என் தவறு என்ன தாயே!மாதா தான் இன்னும் என்னை வேறு ஒருவனாக பாவிக்கிறார்.அதன் வெளிப்பாடே இந்தச்சொற்கள் என்றே எண்ணம் கொள்கிறேன்!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"அவ்வாறு கூறாதே!நீ எனது புதல்வனாவாய்!என்றும் எனது புதல்வன் நீயே!"-அவனது மனம் நெகிழ்ந்து போனது.பேச்சை திசை திருப்ப வேண்டி,

"செய்தி ஏதேனும் கொணர்ந்தாயா மகனே!"என்றார் இளைய மகாராணி.ஆதித்யாவின் முகம் வாட்டம் கண்டது.

"என்ன?"

"தமை..தமையனார் அவர்கள்...காளிங்க தேசத்து இளவரசியை கவர்ந்து வந்தார் மாதா."-திடுக்கிட்டனர் இருவரும்!!

"என்ன?"

"போர்களத்தில் பிரவேசித்தவரை தோல்வியுற செய்து,அவரை கட்டாயப்படுத்தி பைரவம் அழைத்து வந்தார்!"

"குருக்ஷேத்திரன் ஒரு ஸ்திரியை கட்டாயம் செய்தானா?"

"ஆம்..!!என்னை மன்னியுங்கள்!நான் அவரிடம் எடுத்துக் கூறினேன்.எனினும்,அவர் என் வார்த்தைகளை கேட்க மறுத்தார்.சக்கரவர்த்தினிக்கு உலகமே சுழல்வதாக இருந்தது.

"அஞ்ச வேண்டாம் மாதா!எனது எண்ணம் சரியென்றால் தமையனார் அவரை விவாஹம் புரியவே அழைத்து வந்திருப்பார்!தாம் அவரிடம் விவாதியுங்கள்!நன் முடிவு கிட்டும்!"

"இல்லை..உண்மையை கூறு ஆதித்யனே!அவன் விவாஹ பந்தத்திற்காய் இளவரசியை கவர்ந்தானா!இல்லை..இளவரசியை கவர்ந்து யுத்தத்தை முடித்தானா!"

"இல்லை...மாதா!"

"என் மீது ஆணை!மெய் உரை!"-இளவரசர் தலைக்குனிந்தார்.

"ஏன் இக்காரியம் புரிந்தான் அவன்?ஒரு பெண்ணின் சாபத்தை பெற்று கேடு விளைவிக்க எவ்வாறு மனம் வந்தது அவனுக்கு!இது குல நாசமல்லவா!"

"கவலை வேண்டாம்!ராஜகுமாரி நன்மனம் படைத்தவராய் தெரிகின்றார்!அவரிடம் நான் சென்று மன்னிப்பு வேண்டுகிறேன்!யாதும் நன்முறையில் நிகழும்!"

"அவரிடம் நான் விவாதிக்கிறேன்!இதுக்குறித்து நீ விவாதிப்பது தவறாகும்!நீ சென்று ஓய்வெடு!"

"உத்தரவு!"-இருவரிடமும் விடைப்பெற்று புறப்பட்டார் அவர்.

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:969}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.