(Reading time: 5 - 10 minutes)

13. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி

Anal mele pani thuli

து இவ்வளவு கடினமாக இருக்கும் என்று மது சத்தியமாக நினைத்தது இல்லை. இந்த இரண்டு வருடங்களாக  மதியின் நினைவுகளோடு வாழ்ந்தாள் தான் . ஆனால் ஊருக்கு சென்று வந்ததில் இருந்து அவனின் விழிகளின் வழியே இவளில் ஊடுருவிய அந்த காதல் மொழிகள் அவளை நித்தமும் வந்து வதைத்தது. நின்றாள் நடந்தால் என்று அவனின் மூச்சு காற்றின் வெப்பம் அவளை சுற்றி வந்து தாக்கியது. இந்த இரண்டு நாட்களும் பல யுகங்களாக தோன்றியது. இந்த இரண்டு வருடங்களை எப்படி கடத்தினோம்...இன்னும் வரப்போகும் காலங்களை அவனின்றி எப்படி கடத்துவது... எதுவும் புரியவில்லை.

பைரவியும் இந்த இரண்டு நாட்களாக மதுவை கவனித்து கொண்டு தான் இருக்கிறாள். சரியாக சாப்பிடாமல் வேலையில் கவனமில்லாமல் தன்னுடைய உடையிலும் நடையிலும் தளர்ந்து போய் எப்போதும் ஏதோஒரு யோசனையோடு அலைபவளை.

இவளை என்னதான் செய்வது எப்படி தான் சரி பண்ணுவது என்று தனக்குள் குழம்பியபடி தன மண்டையை உடைத்து கொண்டிருந்தவள் வாசலில் அரவம் உணர்ந்து திரும்பினாள்.

முரளி அப்போது தான் உள்ளே நுழைந்தான். அவனை கண்டவள் எழுந்து நிற்க,

"ஹலோ பைரவி " என்றபடி வந்து அவளருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் அவளையும் உட்காரும்படி சொல்ல, அவளும் உட்கார்ந்தவள்

"ஹலோ முரளி சார் எப்படி இருக்கீங்க " என்று கேட்க அவளை பார்த்து முறைத்தவன்,

"உனக்கு எத்தனை தடவை சொல்றது எப்போ பாரு சார் மோர் னு சொல்லி மனுஷனை கடுப்பேத்தற. என்னை பார்த்தா என்ன உனக்கு தாத்தா மாதிரி இருக்கா" என்று கேட்க

"அப்படி தெரிஞ்சிருந்தா தாத்தானே கூப்டருப்பனே எதுக்கு சாருன்னு கூப்பிடறேன். இப்போ உங்களை முரளின்னு சொல்லணும் சார் சொல்ல கூடாது அவ்வளவு தான.. அதுக்கு எதுக்கு பா இவ்வளவு நீளமா பேசறீங்க " என்று சொன்னவளை பார்த்தவன்

"யாரு நான் நீளமா பேசறனா அம்மா தாயே காளியாத்தா அலை விடு. உங்க மது மதி மேடம் எங்க " என்று கேட்க இப்போது அவனை குறைப்பது அவளின் முறையாயிற்று.

"ஏன் மது உங்க கண்ணுக்கு பாட்டி மாதிரி தெரியறாளா, மேடம் கிடம் னு சொல்லிட்டு இருக்கீங்க" -பைரவி

"ஐயோ உன்கிட்ட ஒரு வார்த்தை தவறா சொல்லிட கூடாதே , உடனே வரிஞ்சுக்கட்டிக்கிட்டு சண்டைக்கு வந்திடு. சரி இப்போ சொல்லு மது எங்க வேலை செய்துட்டு இருக்காளா?. " -முரளி

"வேலை செய்றா ஆனா செய்யல. புக் படிக்கிறா ஆனா படிக்கலை. என்னை நிமிர்ந்து பார்த்தா ஆனா என்னை தான் பார்த்தாளானு எனக்கு தெரியல " -பைரவி

"ஏம்மா உன்கிட்ட கேள்வி கேக்கறது அவ்வளவு பெரிய தப்பா ? இப்படி மொக்க போடற..பசங்க எல்லாம் பாவம்ப்பா" -முரளி

"ஏன் சொல்ல மாட்டிங்க. இங்க ஒருத்தி மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி சுத்திட்டு இருக்கா .. நீங்க என்னடான்னா விக்ரமாதித்தன் தோளுல தொங்கற வேதாளம் மாதிரி கேள்வியா கேக்கறீங்க " -பைரவி

"அடிப்பாவி மது கோழி.அது கூட பரவால்ல ஆனா நான் வேதாளமா ... என்னை கொடுமைடா முரளி இது. " என்று அலுத்துக்கொண்டவனை பார்த்து வந்த சிரிப்பை அடக்க பைரவி படாதபாடு பட அவளின் சிரிப்பை அடக்கிய முகத்தை பார்த்து முரளியும் சிரிக்க வாய்விட்டு சிரித்தனர் இருவரும்.

"ஜோக்ஸ் அபார்ட் முரளி. எனக்கு ஒரு முக்கியமான விஷயம் பேசணும். யார்கிட்ட சொல்லி ஹெல்ப் கேட்கலாம்னு நெனைச்சப்ப நீங்களே வந்துட்டிங்க " -பைரவி

"மதுவை பத்தியா? " - முரளி

"எஸ் " -பைரவி

"நானும் மதுவை பத்தி பேசணும்னு தான் உன்னை பாக்க வந்தேன். பிரிய இருப்பியா இல்லையானு நெனச்சேன். நல்லவேளை இன்னைக்கு மேடம் தனியா தான் இருந்திங்க. இல்லைனா எப்பவும் சுத்தியும் ஒரு கூட்டத்தை கூட்டி வெச்சுக்கிட்டு இல்லையா இருப்பிங்க " -முரளி

"என்னமோ தினமும் என்னை வேவு பாக்கற மாதிரி சொல்றிங்க. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. " -பைரவி

நல்ல வேளை நான் இவளை தினமும் வாட்ச் பண்றது இந்த மக்கு செல்லத்துக்கு தெரியல தப்பிச்சண்டா சாமி என்று மனதில் எண்ணியவன் அவளிடம் " என்ன விஷயம் பேசணும் பைரவி" என்று கேட்டான்.

"எல்லாம் மதுவை பத்தி தான். ஊருக்கு போயிட்டு வந்த கவலையா இருப்பேன்னு நெனச்சேன்.ஆனா இவ்வளவு இருக்கும்னு எனக்கு தெரியல. என்ன பண்றோம் என்ன சாப்பிடறோம் எதுவுமே தெரியாம எப்பவும் ஏதோ ஒரு யோசனையிலேயே இருக்கா . எனக்கு ரொம்ப கவலைய இருக்கு.இப்படியே போன அவ ஒடம்பு என்னத்துக்கு ஆகும். " -பைரவி

"ஹ்ம்ம் அப்படியா." என்றபடி முரளி ஏதோ ஒரு யோசனையில் மூழ்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.