(Reading time: 6 - 12 minutes)

07. ஊனமறு நல்லழகே - ப்ரியா

oonamaru-nalazhage

ன் கைகளை பற்றி கேள்வி கேட்பவனை தவிர்ப்பது எப்படி என்ற யோசனை கூட தோன்றவில்லை ஸ்ரவந்திக்கு. என்ன பதில் கூறுவாள்??!!!

மெல்ல தன் கையை விடுவிக்க முயற்சி அவளிடம். பிடியின் தாக்கம் இறுகியது அவனிடம். அவள் கண்கள் மெல்ல அலைபாய்ந்து முன்னே நான்கு எட்டுகள் சென்றிருந்த ருத்ராவை நோக்கின.. அவள் பார்க்கவில்லை!!

சிறு நிம்மதி பெருமூச்சின் நடுவே மீண்டும் தயங்கி இவன் முகம் பார்த்தாள். 'கையை விடுங்க' சொல்ல வேண்டும் குரல் எலும்பினால் தானே சொல்ல முடியும்? ஹ்ம்ம் ஹும்ம்ம்.. முடியவில்லை. ஊடுருவும் அவன் பார்வை ஆயிரத்திற்கும் மேலான கேள்விகள் கேட்கின்றனவே.. ஆனால் கேள்வியின் சாராம்சம் ஒன்றே ஒன்று இவளுக்கு தெரிந்தது தான்..!!

அவள் படும் அவஸ்தையை தெளிவாக காண முடிந்தது அவனால்!! குனிந்த தலை அவன் கைக்குள் அகப்பட்டு நெளியும் அவள் கை.. விடுவித்துக் கொண்ட ஓட தயாராக இருக்கும் கால்கள்..!! உடல்  மொழி அவனுக்கு புரிகிறது தான்.. ஆனால் அவள் மனம்??!! அதன் மொழி சுத்தமாய் விளங்கவில்லை..

"ஸ்ராவனி???!!!"

"...."

"என் கேள்வி..."

"ப்ளீஸ் கையை விடுங்க" ஒரு வழியாய் சொல்லி விட்டு வேகமாய் அவள் கைகளை இழுத்து கொண்டு விட்டாள். ஆனால் அவளை பிடித்திருந்த கையை கீழே போடாமல் விரித்தபடி அதே இடத்தில அப்படியே வைத்து ஒரு முறை கையையும் அவளையும் மாறி மாறி பார்த்து விட்டு விரல்களை மெதுவாக மடக்கி கீழிறக்கி கொண்டான்.

இவன் பேச மீண்டும் வாய் திறக்கும் முன் அவள் திரும்பியிருக்க, அவசரமாய் ஒரு எட்டு எடுத்து  வைப்பதற்குள் கிட்டத்தட்ட ஓடி சென்று ருத்ராவின் கைகளை பற்றிக்கொண்டாள் ஸ்ரவந்தி. முகத்தில் அறைந்திருந்தால் கூட சிரித்து விட்டு போயிருப்பான். அவளது செய்கை இந்த மௌனம்??!! சிலையென நின்றவன் சுதாரித்து ஓடி சென்று பார்க்க, வெளியே வந்து காரில் ஏறிக் கொண்டிருந்தாள் அவள்.

காரின் பின்னே மருத்துவமனைகளில் போடா பட்டிருக்கும் '+' குறியீடும் ஒரு ஓரத்தில் மிதுர்வன் என்ற பெயரும் அவன் கண்களில் பட அவசரமாய் மனதில் குறித்து கொண்டான். கார் கிளம்பி விட்டது தூரத்தில் சென்று கண் விட்டு மறையும் வரை பார்த்திருந்தவன் கைபேசியை எடுத்தான்.

"ஹலோ??"

"........"

"டேய் கணேஷ்"

"......."

"சொன்ன மாதிரியே சென்னை வந்துட்டேன்.. உன் அட்ரஸ் இருக்கு வந்துடறேன்.."

"........"

"பரவாயில்லை டா.. நீ அம்மாவை பார்த்துக் நானே வந்துடறேன்"

"......."

"ச்சீ தப்பா எல்லாம் இல்லைடா நீ எனக்கு இந்த ஹெல்ப் பண்ணாதே போதும்டா மச்சான்"

"......."

"ம்ம்ம் உன்கிட்ட நிறைய பேசணும்.. அதுக்கு முன்னாடி நீ ஒரே ஒரு ஹெல்ப் எனக்கு பண்ணனும் நேர்ல வந்து சொல்றேன்"

"......."

"பத்திரமா வந்துடுவேன் டா நான் என்ன சின்ன பிள்ளையா? வெச்சுடறேன் பை"

போனை அனைத்தவன் யோசனைகள் நடுவே கடந்த காலத்தையும் நினைத்து கொண்டே ஒரு ஆட்டோ பிடித்து தன் நண்பன் வீட்டிற்கு சென்றான்.

டிரைவர் ருத்ரா வருவதை கண்ட உடனேயே அதிர்ச்சியுடன் காரை செலுத்த ஆரம்பிக்க, அதை கவனித்தாலும் கவனிக்காதது போல அவரிடம் நலம் விசாரித்து விட்டு ஸ்ரவந்தியுடன் பேசிக் கொண்டே வந்து கொண்டிருந்தாள். அவள் பேசுவதை கேட்டுக் கொண்டும் ரயில் நிலையத்தில் சந்தித்தவனை பற்றி நினைத்துக் கொண்டும் மிதுர்வனுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதை மறந்து போயிருந்தாள்.

வீட்டை அடைந்து காரை நிறுத்தியதும் ருத்ரா தயங்க ஸ்ரவந்தி இறங்கி இயல்பாய் உள்ளே நுழையவும்,

"வந்துட்டியா மா?" என தொட்டது பக்கமிருந்து மலர் கூடையுடன் மதுமதி வரவும் சரியாய் இருந்தது. அவள் பதில் சொல்லும் முன்னே காரில் இருந்து இறங்கிய ருத்ராவை பார்த்தவர் ஒரு கணம் ஸ்தம்பித்து அப்படியே உறைந்து நின்றார்..!!

சில வருடங்களுக்கு முன் நடந்தவை எல்லாம் கண் முன் வந்து செல்ல, ருத்ராவின் கை பற்றி அழைத்து சென்ற மருமகளை கண்டவர்,

"ஸ்ரவந்தி நில்லு அங்கேயே!!" என்று கோபமாய் சொல்ல, அதிர்ந்து நின்றாள் ஸ்ரவந்தி.

"எதுக்கு இவளை இங்க கூட்டிட்டு வந்த?"

"அத்தை"

"ம்ம்ம்ம் சொல்லு யார் இவளை இங்கே கூட்டிட்டு வர சொன்னது? துருவனா?"

"இல்லங்க அத்த"

"பின்னே?"

"அது அவ" ஸ்ரவந்தி என்ன நடக்கிறது என்று தெரியாமல் திணற,

"அம்மா அண்ணியை ஒன்னும் சொல்லாதீங்க.. நான் தான்"

"ச்சீ வாயை மூடு.. அம்மாவா?? உன்னையும் இந்த வயித்துல தான் பெத்தேனான்னு சந்தேகமா இருக்கு?"

"அம்மா"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.