(Reading time: 6 - 12 minutes)

"ன்னொரு தடவை அப்படி கூப்பிட்ட நான் சும்மா இருக்க மாட்டேன்"

"ஸ்ரவந்தி இவளை கூப்பிட தான் என்கிட்டே பொய் சொல்லிட்டு போனியா??!!"

"இல்ல அத்த அது வந்து ருத்ரா தான் சொல்ல வேண்டாம்னு"

"அவ சொன்ன??!!"

"அவ ஏதோ உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தான் சொல்றான்னு நினைச்சு... வந்து அது" அவள் மேலும் குழம்பி தவிக்க அவள் விழியோரம் நீரை கண்டவர் கோபம் கொஞ்சம் மட்டுபட்டது.

"உனக்கு தெரியாதுல்ல.. சரி விடு இப்போ உள்ளே போ"

"ம்ம்ம்ம் ஆனால்"

"உள்ளே போன்னு சொன்னேன் நீ மட்டும் !!"

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அவள் விறு விறுவென உள்ளே சென்று படிகளில் ஏற, எதிரே மிதுர்வன் இறங்கி வந்தான் அவனை கண்டதும் இன்னும் பயமும் அழுகையும் அதிகரித்தது.

அவள் முகத்திலிருந்து எதுவோ சரியில்லை என்று கண்டு கொண்டவன், அவசரமாக அவளிடம் நெருங்கி,

"ஸ்ரவந்தி என்னடா என்ன ஆச்சு?"

'....."

"ஸ்ஸ்ஸ் இங்கே பாரு சொல்லு என்ன?"

"......" அவள் சொல்லாமல் கண்கள் கரிக்க நிற்க, வெளியே மதுமதியின் குரல் கேட்டு சென்றான். வாசலில் கண்ணீருடன் ருத்ரா!!

"ஹே ருத்ரா... எப்பிடி டா வந்த? என்கிட்டே கூட சொல்லல.." என்றவாறு  அவளை கண்ட திகைப்பில் ஆனந்தத்தில் அவளை நெருங்கியவனை இடைமறித்து  நின்றார் மதுமதி.

"அம்மா???!!!"

"உள்ளே போ"

"அம்மா ப்ளீஸ்... அவ இவ்வளவு தூரம் ட்ரேவல் பண்ணி வந்திருக்கா, அவ முகத்தை பாருங்க, எதுவா இருந்தாலும் அப்பறம் பேசலாம்"

"முடியாது.. என்னைக்கு நான் சொல்ல சொல்ல கேட்காம போனாலோ அதுக்கு அப்புறம் அவளுக்கு இங்க இடம் இல்ல"

"அம்மா ப்ளீஸ் மா எனக்காக"

"முடியாது டா"

"மதுமதி அவளை விடு" என்று மிதுர்வனின் அப்பா வந்து செல்ல அமைதியாய் உள்ளே சென்று விட்டார். அவரும் மதுமதியின் பின்னே அவர்களின் அறைக்கு சென்று விட்டார்.

"அண்ணா" என்று அழுகையினூடே ருத்ரா ஓடி வந்து மார்பில் சாயவும் அவளை தேற்றி உள்ளே கூடி சென்றவன், அவள் பேச முயல்வதை உணர்ந்து,

"எதுவும் பேசாதே, குளிச்சு சாப்பிட்டு ரெஸ்ட் எடு எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்" என்று அவள் கன்னம் தட்டி கூற 'சரி' என தலையாட்டியவள்.

அங்கே நின்ற ஸ்ரவந்தியை கட்டிக் கொண்டு மன்னிப்பு கேட்டாள்.

எதுவும் புரியாத போதிலும் அவளை மேலும் வறுத்த மனமின்றி உடனே சிரித்த ஸ்ரவந்தி அவளுக்கு உணவை எடுத்து வைக்க குளித்து விட்டு வந்தவள் உண்டு விட்டு மீண்டும் தனதறைக்கு சென்று விட்டாள்.

அதுவரையிலும் மதுமதி வெளியே வரவே இல்லை.. ருத்ராவை பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு மிதுர்வனும் சென்று விட, ஸ்ரவந்திக்கு தன் வாழ்வில் இந்த வீட்டில் நடப்பவற்றை நினைத்து பெரும்குழப்பமாய் இருந்தது.

ன் நண்பன் வீட்டிற்கு வந்து அவன் மனைவி அவனுக்காக செய்திருந்த உணவை சாப்பிட்டு விட்டு தனக்காக ஒதுக்க பட்ட அறையில் நண்பனுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தான் அவன்.

"என்னடா சொல்ற? ஸ்ரவந்தியை பார்த்தியா?"

"ஹ்ம்ம் ஆமாம் கணேஷ்"

"அப்புறம் ஏண்டா கூட்டிட்டு வரலை? அவளை தேடி தான வந்த?"

"....."

"ஒரு வேலை தூரத்தில் இருந்து பார்த்தியா? நீ போறதுக்குள்ள போய்ட்டாளா?"

ஆமாம் தூரமாக தான்

சென்று விட்டாள்..!!!

கைக்கெட்டும் தூரத்தில் கண்டு

கை வளைவிற்குள் அவள்

கையை வைத்திருந்த போதும்

அந்நிய பார்வை ஒன்றை செலுத்தி

அன்பு அனைத்தையும் ஒதுக்கி...

பதிலற்ற கேள்விகள்

பலவற்றை என் மனதின்

பாறைகளில் அழுத்தமாய்

செதுக்கி விட்டு...

அலைபாய்ந்த விழிகள் தாழ்த்தி

தன் விருப்பமின்மையையும்

சொல்லி விட்டு போய்விட்டாள்..!!!

நான் நெருங்க முடியா

வேலிக்குள் புகுந்து விட்டாள்..!!

மனதிற்குள் அவளுக்காக எழுதி வைக்க பட்டிருந்த கவிதை தொகுப்புகளில் அழகாக இடம் பிடித்தது இன்னமொரு கவிதை..!!

தொடரும்…

Episode # 06

Episode # 08

{kunena_discuss:804}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.