"காதுல விழலை!மறுபடியும் சொல்லுங்க!"-அவள் பதில் தந்த தோரணை பல்லவியின் மனதினை காயமாக்கியது.சேலை தலைப்பால் வாயை மூடி,அழுதப்படி அவர் சென்றார்.அடுத்ததாக,லட்சுமி மீது அவள் பார்வை விழுந்தது.
"உனக்கென்ன?கிளம்ப வேண்டியது தானே!"-திடுக்கிட்டு போனவர் பயந்தப்படி காரை நோக்கி விரைந்தார்.
"ஹலோ!"-திரும்பாமலே அழைத்தாள் நிர்பயா.
"................"
"உங்கண்ணனை ஜாக்கிரதையா பார்த்துக்கோ!அடிக்கடி என் கண்ணுல படணும் சொல்லு!இல்லைன்னா,மன்னித்து விட்டுவிட போறேன்!முக்கியமா சங்கர் இன்ஸ்டியூட்ஸ் ஜாக்கிரதையா இருக்கும்னு சொல்லிடு!"-என்றாள்.
லட்சுமி அதற்கு மேலும் தாமதிக்காமல் காரை கிளப்ப உத்தரவிட்டார்.அவர் மட்டுமே அறிவார்,நிர்பயாவின் கூற்று யாவும் எதிர் அர்த்தம் கொண்டது என்பதை!!!
அவர்கள் சென்ற சில நிமிடங்களில் வைத்தியநாதனின் கார் வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கியவரின் முகத்தை கண்டதும் இயல்பானாள் நிர்பயா.
"பாரு சொன்னா மாதிரி மழையில நிற்கிற!இன்னிக்கு நான் செத்தேன்.என்ன பிரேக் டவுனா?"
"ஆமா தாத்தா!"
"டிரைவருக்கு போன் பண்ணி சொல்லிட்டு வா!"-அவர் பரிந்துரைப்படி ஓட்டுநருக்கு தகவல் கூறிவிட்டு கிளம்பினாள் நிர்பயா.சிறிது தூரம் வரை இருவரும் ஒன்றும் பேசவில்லை.
"ஹனி!ஒண்ணு சொல்லட்டா?"-மௌனத்தை கலைத்தார் வைத்தியநாதன்.
"என்ன தாத்தா?"
"உன் காதுக்கு மட்டும் தான் வெறும் ஹெட்செட் மாட்டினாலே பாட்டு கேட்குமா?"-என்றார்.நிர்பயா அதிர்ச்சியாக அவரை பார்த்தாள்.ஆம்..!உண்மையில் வெறும் ஹெட்செட்டை மட்டுமே அவள் செவிகளில் பொருத்தி இருந்தாள்.ஆனால்,அதிலிருந்து எவ்வித ஒலியும் அவள் செவிகளில் பாயவில்லை.பல்லவியின் கூற்றுகளுக்கு அவ்வளவு நேரமும் அவள் செவி சாய்த்திருந்தாள் என்பது அச்சமயம் அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று!!
நிர்பயா கேள்வியாக அவரை பார்த்தாள்.
"நிர்பயாவை முழுதாக தெரிந்தவன் நான்!"-என்ற பதிலே அவளது அனைத்து கேள்விகளையும் முறியடித்தது.
"அவ என்ன சொன்னா?"-மீண்டும் ஒருமுறை கேட்டார் சங்கரன்.
மீண்டும் முதலில் இருந்து விளக்கம் தந்தார் லட்சுமி.
"இன்னியோட அவளுக்கு சமாதி கட்டுறேன்!"-என் தனது துப்பாக்கியை எடுத்தவரை பார்த்து அலறிவிட்டார் பல்லவி.
"மாமா!"-அவரது செய்கையை தடுக்க முயன்றான் கார்த்திக்.லட்சுமியின் மூத்தக் குமாரன்!!
"விடுடா!இன்னிக்கு அவளை முடிச்சிடுறேன்!"
"அண்ணா!விடுண்ணா!அவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்?அவ எல்லாம் நல்லா அனுபவிப்பா பாரு!"-நிர்பயாவை சபித்தாள் லட்சுமியின் இறுதி புதல்வி ஸ்வேதா.
பல்லவியின் முகம் வெளிறிப் போனது.
"டேய் கார்த்திக்!அவனை விடு!"-என்ற விசாலாட்சியின் கூற்று அனைவரையும் திடுக்கிட வைத்தது.
மூச்சுக்கு முந்நூறு முறை நிர்பயாவை பற்றி புகழும் இவரா இப்படி கூறுகிறார்??
"என்னடா பார்க்கிற?நீ போய் என் பேத்தியோட நெற்றிப் பொட்டுல துப்பாக்கியை வைத்தாலும் அவ பயப்பட மாட்டா!முடிந்தால் அவளை இப்போவே கொன்னுடு!இல்லை..அவ உங்க எல்லாருக்கும் துடிக்க துடிக்க தண்டனை கொடுப்பா!"
"தண்டனையா?எனக்கா?அவளால என்ன செய்திட முடியும்?அவ கேவலம் ஒரு பொண்ணு!"
"ச்சீ நிறுத்து..நீ கேவலம்னு சொல்றீயே!அந்த பொண்ணு நினைக்கலைன்னா,இந்நேரம் கருவிலே நீ செத்துருப்ப!என் பேத்தி என்ன பண்ணிடுவாளா?செய்ய போறா பாரு...!பெரிதா எதையாவது இழக்க போறீங்க பாருங்க!"-என்று கூறிவிட்டு உள்ளே சென்றார் அவர்.
"மாமா!பாட்டி சொல்றதுல நியாயம் இருக்கு!சங்கர் இன்ஸ்டியூட்ஸ் அப்ரூவலுக்கு அவ சைன் முக்கியம்!"-என்றான் கார்த்திக்.
விஸ்வரூப தரிசனம் என்னும் கூற்றை எங்காவது நிச்சயம் அனைவரும் கேள்வியுற்றிருப்பீர்கள்...!!
அதைப் பற்றி தெரிந்த நிகழ்வுகளை நினைவு கூறுங்கள்..
பரமாத்மாவின் முழு சொரூபம் தான் விஸ்வரூபமா???
இல்லை....வாழ்வியலில் அனைவரும் சந்தித்தே தீர வேண்டிய ஒரு கட்டம் உண்டு!அதுவே,அவமானம்!!ஆம்..!அவமானம் என்னும் கட்டத்தை மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் சந்தித்தே தீர வேண்டும்.அக்கட்டத்தை சந்திக்கும் சமயம் நிமிர்ந்த நமது சிரமானது நிலம் நோக்கலாம்!பெரும் வேதனை இருதயத்தை வியாபிக்கலாம்.இக்கட்டான அச்சூழலில் தனித்து விடப்பட்டதாய் தோன்றும்.சிலருக்கு வாழ்வை விடுக்கும் எண்ணமும் வரலாம்!அத்தகு சந்தர்பங்களிலும்,மனவுறுதியை இழக்காமல்,இதுவும் கடந்து போகும் என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு வாழ்பவரை,நிச்சயம் சீரும்,சிறப்பும் ஒருநாள் வந்தடையும்!அச்சமயத்தில் தன்னை ஏளனப்படுத்தியவரை தண்டிக்காமல்,முகத்தில் ஏளன புன்னகையோடு கடந்து செல்பவர்கள் தங்களின் விஸ்வரூப தரிசனத்தை உலகிற்கு காட்டுக்கின்றனர்.அந்த ஒரு புன்னகை போது,அதை விட கொடிய தண்டனை மாற்றாருக்கு வேறு இராது!!
இன்று அதைப்போல,பெண்ணொருத்தி தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தி இருக்கிறாள்.அவள் சொடுக்கிட்டால் பல மாற்றங்கள் நிகழும்!தனது அதிகாரத்தை அவள் சுயநலத்திற்காக பயன்படுத்தி இருக்கலாம்!ஆனால்,அவள் அப்பணி ஆற்றாமல்,தன்னை இகழ்பவரை மதிக்காமல் செல்வதே அவளது புகழை பறைச்சாற்றுகிறது....!!!
தொடரும்
{kunena_discuss:1030}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.