(Reading time: 6 - 11 minutes)

06. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

சுபத்ரா, நிஷா இருவரையும் நினைத்துக் கொண்டு இருக்கும் வேறு இரு ஜீவன்களை பற்றி எண்ணமில்லாமல், அவர்கள் இருவரும் தங்கள் கிண்டல், கேலி இவைகளோடு வலம் வந்தனர்.

இத்தனை நாட்கள் சுப்த்ரவை அர்ஜுன் நோட்டம் விட்டு கொண்டிருக்க, முந்தைய இரவில் இருந்து ராகுலின் பார்வை நிஷாவை வட்டமிட்டது.

அந்த வார முடிவில் , என்றைக்கும் போல் ஆடிடோரியத்தில் நடக்கும் செமினார் வகுப்புகள் முடியும் போது, அர்ஜுன்

“கமாண்டோஸ் , நாளைக்கு சண்டே.. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. நீங்க எல்லோரும் உங்க வீட்டில் உள்ளவங்களோட பேசலாம்.. ஆனால் டைம் லிமிட் இருக்கும். அப்புறம் ... நாளைக்கு மதியம் ஒரு மணியில் இருந்து மாலை ஆறு மணி வரைக்கும் campus விட்டு வெளியே போகலாம்..

இங்கேயே நகரத்தில் உங்களுக்கு எதாவது ஷாப்பிங் வேலை இருந்தால் முடிச்சுட்டு வாங்க. பட் .. ஆறு மணிக்குள்ள வரலை என்றால் நிச்சயம் punishment உண்டு.

அடுத்த வாரத்தில் இருந்து உங்களோட ட்ரைனிங் schedule இதோ ..

காலை ஐந்து மணிக்கு – எல்லோரும் கிரௌண்ட் வந்து அசெம்பிள் ஆகணும்..

5 டு 7 ஜாக்கிங்... +  basic உடற்பயிற்சிகள்

7 டு 8 பிரேக் பாஸ்ட்

8 டு 1 pm ட்ரைனிங் ...

1 டு 2 லஞ்ச்

2 டு 4 pm ஸ்பெஷல் ட்ரைனிங்

4 டு 6 pm செமினார்

6 – 7 pm க்ளோசிங்

7 – 8 pm ரெப்ரெஷ்

8 – 9 pm டின்னெர்

10 pm கோயங் டு பெட்

இந்த schedule உங்க டோர்மிடேரி வாசலில் இருக்கிற நோட்டீஸ் போர்டு லே ஓட்டிடுவோம். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எல்லாரும் டைம் கீப் up பண்ணனும் ..

இனிமேல் உங்களின் ட்ரைனிங் மிக கடுமையாக இருக்கும். ட்ரெக்கிங், கன் ஆபரேஷன், இது எல்லாம் ஸ்டார்ட் பண்ணனும்..

அதுக்கு முன்னாடி நீங்க உங்களோட தனிப்பட்ட விளையாட்டு திறமை இருந்தா அத இன்னிக்கு வந்து என்ரோல் பண்ணிக்குங்க..

அடுத்த வாரத்தில் இருந்து லஞ்ச் முடிச்சதுக்கு அப்புறம் அந்த கேம் இரண்டு மணி நேரம் பயிற்சி எடுக்கணும். நான்கு மணிலேர்ந்து ஆறு மணி வரை உங்களுக்கு இதை போல் செமினார் நடக்கும்... வேற எதுவும் டவுட் இருந்தா கேட்கலாம் .. “ என்று ஆங்கிலத்தில் நீளமாக பேசி முடித்தான்.

யாரும் இல்லை என, அந்த கேம் பற்றிய விவரங்கள் சொல்ல பட்டது.

சுபத்ரா பாட்மிட்டன் மற்றும் ஷூட்டிங் தனி பிரிவில் பதிந்து வந்தாள்.

நிஷாவோ டென்னிஸ் மற்றும் throw பால் பிரிவில் பேர் கொடுத்தாள்.

சண்டே என்றாலும் காலையில் பிரேக் பாஸ்ட் வரை வாரநாட்கள் போல் பயிற்சி முடித்து வரவேண்டும்.

பிறகு அவரவர் பர்சனல் வேலைகள் பார்க்க, ஒவ்வொரு பிரிவிலும் பத்து இணைப்புகள் கொடுக்கப்பட்டு , சிறு சிறு குழுக்களாக சென்று தங்கள் சொந்தங்களோடு பேசி வந்தனர்.

சுபத்ராவும், நிஷாவும் ஒன்றாக சென்றனர்.

சுபத்ரா வீட்டிற்கு டயல் செய்து விட்டு காத்து இருக்க , அங்கே எடுக்கப்பட்டதும் “ஹலோ.. சுபிம்மா, சுறா .. “ என்று ஆறேழு குரல்கள் போனில் கேட்டது. ஒரு நிமிடம் ரிசிவரை காதிலிருந்து நகர்த்தி விட்டு, பிறகு வைத்தாள்..

“ஹலோ .. மை டாடி.. வீட்டில் என்ன மாநாடு நடத்துறீங்களா? இவ்ளோ குரல் கேட்குது.. ?”

“ஹேய்.. சுறா.. எருமை, பிசாசு... நீ அங்கே போய் நிம்மதியா உட்கார்ந்துட்டு இருக்க.. நாங்க உன்கிட்ட பேசாமல் படுற அவஸ்தை பத்தி நினைச்சியா... நீ?”

“ஹேய்.. கைமா... நீ என் வீட்டில் என்ன பண்ணிட்டு இருக்க ?”

“உங்க அம்மா சண்டே ஆனால் செய்யற vegtable பிரியாணி ..வித் கோபி dry மஞ்சூரியன் மொக்க வந்துட்டேன்..?”

“மம்மி... நோஓஒ ... .அந்த சோடாபுட்டியும் அங்கே தானே இருக்கான்... அவங்களுக்கு எதாவது செஞ்சு கொடுத்த... உன் புருஷன் தூக்கி தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்த சொல்லி மை favourite அழகன் god கிட்ட recomendation வச்சுருவேன் பார்த்துக்கோ... அப்புறம் நீ டிஷ் connection கொடுத்து பார்த்துட்டு இருக்கிற ஆல் ஹிந்தி serials , அதோட டப்பிங் எல்லாம் கட்... அப்புறம் நீ பொழுது போகாமல் சண்டை போட சொர்கத்திலே இருக்கிற உங்க அம்மாவிற்கு காஞ்சனா மூலமா instagram லே சொல்லிடுவேன் .. ஆமாம்...”

“என்ன ஒரு உயிர் தோழி... நாமதான் சாப்பிட முடியல நம்ம நண்பர்கள் சாப்பிடட்டும் நினைப்பு இருக்கா... ? நீ உங்க டாடி அ தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்தினா, நான் எங்க ஆண்டி எங்க வீட்டிற்கு தள்ளிட்டு போய்டுவேனே..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.