(Reading time: 6 - 11 minutes)

தற்குள் அவளின் அப்பா “அம்மாடி .. சுபாகுட்டி.. நோ தண்ணி இல்லாத காடு.. மீ பாவம்.. எனக்கு வெந்நீர் கூட போட தெரியாது.. அப்புறம் நான் எப்படி சமாளிப்பேன்.? போனா போகுது அவங்க சாப்பிட்டு போகட்டும்..  நீயும் நானும் தனியா டீல் போட்டுக்கலாம்.. சரியா?

அவளின் அம்மாவோ “அடிங்க.. அங்கே போய் காஞ்சும் புத்தி வருதா.. என்ன.. டெய்லி சப்பாத்தி தானே.. ?”

“அம்மா.. நீ சப்பாத்தி போட்ட கொடுமை விட, இங்கே போடற வரட்டி கொடுமை மேல்..”

“வாடி.. இங்கே வரும்போது சப்பாத்தி போட்டு தரமால் , டெய்லி பழைய சோறு போடறேன்.. அப்புறம் அடங்குவ..”

மேலும் சிறியது நேரம் எல்லோரிடமும் பேசியவள், “ஹேய்.. கீமா, சோடாபுட்டி.. ரொம்ப தேங்க்ஸ் பா.. அப்பா , அம்மா பாவம்.. நான் இல்லாமல் ரொம்ப கஷ்டபடுவாங்க.. நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி வந்துட்டு போங்க..”

“ஹேய்.. சுரா.. அவங்க மட்டும் இல்லடி.. எங்களுக்கும் நீ இல்லாமல் ரொம்ப கஷ்டமா இருக்குடி.. மொக்கையா இருந்தாலும் .. உன்னோட ஜோக்ஸ் இல்லாமல் நல்லாவே இல்லை... “

இவர்கள் பேசி வைத்த பின் நிஷாவும் தங்கள் குடும்பத்தோடு பேசிவிட்டு வந்தாள்..

ஒரு மணி அடிக்கவும், இருவரும் மெயின் கேட் சென்று நின்றார்கள்.. கேட் திறக்கவும், முதல் ஆளாக வெளியே வந்தனர் இருவரும்..

சுபா “விடுதலை... விடுதலை.. “ என்று பாடிய படி வந்தாள்

நிஷா “எதில் இருந்துடி விடுதலை.. “

“தினம் தினம் என்னை வாட்டி எடுக்கும் வரட்டியில் இருந்து விடுதலை.. நம்ம கேப்டன் பிரபாகரன் கிட்டேர்ந்து விடுதலை.. ‘

“வரட்டி ஓகே.. இப்போ எதுக்கு தேவை இல்லாமல்  கேப்டன் இழுத்த ?”

“ஆமாம்.. பெரிய கூல் கேப்டன் டோனி.. அவர இழுத்துட்டாலும்... “

“ஏன். நம்ம கேப்டன்க்கு என்ன குறைச்சல்... ?”

“ஹலோ.. என்ன சவுண்ட் விடறீங்க.. .? சம்திங்... சம்திங்.. ?”

தலையில் அடித்த நிஷா “ராட்சசி .. எத பத்தி கேட்ட.. எதோட பேசற ? உன்னை .. “

“இல்ல .. ஒரு வேளை .. அப்படி இருக்குமோன்னு கேட்டேன்.. “

“எப்படியும் இல்லமா .. கண்ணு .. யு proceed ..”

“அது.... அந்த பயம் இருக்கட்டும்.. நான் எதுக்கு சொன்னேன் நா... நம்ம வாத்யாரு நல்ல மதியானம் சாபிட்டதுக்கு அப்புறம் கிளாஸ் எடுக்கரரா ... தூக்கம் வருது.. கண்ணை திறந்து வச்சுகிட்டே தூங்கறது எப்படின்னு MR. BEAN கிட்ட ஆன்லைன் கிளாஸ் கேட்ருக்கேன்.. அத முதல்லே கத்துக்கனு,ம்... “

அடிபாவி .. அப்போ இவளோ நாள் சீரியஸ் ஆக தூங்கிட்டு தான் இருந்தியா... “

“இது என்ன கேள்வி.. ? என்னை பத்தி உனக்கு தெரியாதா... ?”

என்று வம்பளந்து கொண்டே சென்றவர்கள் பின்னாடி வந்த அர்ஜுன், ராகுல் இருவரையும் கவனிக்கவில்லை.. கவனித்தாலும் அதை பெரிதாக எண்ணியிருக்க மாட்டார்கள் இருவரும்..

ஹாய்.. friends... லாஸ்ட் வீக் பாமிலி function.. சோ ரெண்டு வாரமா கொஞ்சம் பிஸி.. கதைக்கு டைம் கொடுக்க முடியல.. & இந்த வீக் . .chillzee schedule டைம் updation நடந்துட்டு இருக்கு.. நம்ம சீரீஸ் .. .முன்னாடி schedule ஆனதால.. இந்த வாரமும் சின்ன அப்டேட் தான் .. நெக்ஸ்ட் வீக் லேர்ந்து..  நிறைய pages தர ட்ரை பண்றேன்.. ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.. friends..

மழை பொழியும்

Episode 05

Episode 07

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.