(Reading time: 9 - 17 minutes)

07. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

சுபா, நிஷாவின் பேச்சை கேட்ட ராகுல், அர்ஜுன் இருவரும் திகைத்து நின்றனர்..

“டேய்.. மச்சான்.. உன் ஆள் கிட்ட சொல்லி வை.. இருந்து இருந்து .. நாமளும் காதலிக்கலாம்ன்னு ... பிளான் பண்ணிட்டு இருக்கேன்.. அதையும் கெடுத்துடுவா போலிருக்கே.. இந்த அல்லி ராணி... “

“மச்சி.. இது எப்போலேர்ந்து...  ?”

“நேத்து தான் மாப்பிள்ளை decide பண்ணினேன்.. பாவம் இந்த பொண்ணு.. அல்லிராணி கிட்ட மாட்டிகிட்டு முழிக்குதே.. நாம அத காப்பத்தலாமேன்னு முடிவு பண்ணிருக்கேன்... “

“இது அந்த அல்லி ராணி கேட்டா என்ன சொல்லுவான்னு தெரியுமா?”

‘ஹி..ஹி.. அவகிட்டேர்ந்து காப்பத்ததான்.. அர்ஜுனா நீ இருக்கியே.. அந்த தைரியம்தான்.. “

“அட... இதுக்குத்தான் இந்த பில்ட் up ஆ.. “

“நாமளும் எவ்ளோ காலத்துக்கு singleநு status போடுறது.. engaged  போடணும் நு முடிவு பண்ணிட்டேன்..”

“தலைவா.. அதுக்கு அந்த பொண்ணு சம்மதம் வேணும் டி..”

“அத நான் என்னோட நிஷு செல்லத்து கிட்ட பேசி கரெக்ட் பண்ணிகிறேன்..”

“எப்படி டா..? அவங்க ரெண்டு பேரும் மாற்றான் கணக்கா ஓட்டிகிட்டு இருக்கங்களே. ”

“அதான் நாளையிலேர்ந்து ... மதியம் ரெண்டு பேரும் தனி தனியாதனே ட்ரைனிங் போக போறாங்க.. அப்போ பார்த்துக்கலாம்..”

“அட .. ஆமாம்.. அப்போ நானும் கொஞ்சம் கொஞ்சமா மேடம் கிட்ட நெருங்க முடியுமா பார்கிறேன்..”

“ஹேய்.. வாடா.. ரெண்டு பேரும் எங்கே போறங்கன்னு follow பண்ணலாம்...”

அவன் ஆர்வத்தை பார்த்த அர்ஜுன் தன் மனதிற்குள் “ஹப்பா... நான் தப்பிச்சேன்.. அவன் லவ் delvelop பண்ற பிஸி லே. . என் மேட்டர்ஆ மறந்துட்டான்... நல்லவேளை நாம செவ்வாய் கிரக memes லேர்ந்து தப்பிச்சோம்..” என்று சந்தோஷபட்டான்.

சுபத்ராவையும் நிஷாவையும் பின் தொடர்ந்தவர்கள், அவர்கள் இருவரும் பால்தான் பஜ்ஜார் என்னும் இடத்திற்கு சென்றனர்..

“டேய் .. அர்ஜுன் .. எப்படிடா.... நாம நம்ம சீனியர் கிட்ட கேட்டு, அதோட அவங்களோடு போய் எல்லாம் தெரிஞ்சுகிட்டு வந்தோம்.. இவங்க ட்ரைனிங் வந்த முதல் வாரமே கரெக்ட் ஆ இங்கே ஷாப்பிங் வந்தாங்க.”

“அது எல்லாம் அந்த மேடம்க்கு ஜுஜுபி.. “ என்றவாறு அவளை ரசித்து பார்த்தான்..

அவனை திரும்பி பார்த்த.. ராகுல் “ஹ்ம்ம்.. முத்திடுச்சுடா..” என்றவாறு அவன் வேலையை பார்த்தான் .. (அதுதான் .. நிஷாவ சைட் அடிக்கிற வேலை)

அந்த மார்க்கெட்டில் ..நம்மூர் T.நகர் போல் தேவையான எல்லா பொருட்களும் சாதாரண விலையில் கிடைக்கும்.. அங்கே இருவரும் சில பொருட்களை வாங்கினார்கள்.

அங்கிருந்து ஆட்டோ பிடித்து ஏதோ விலாசம் சொல்லி அங்கே போக சொன்னாள் சுபத்ரா..

நிஷா “ஹேய்.. எங்கேடி போறோம்..?”

“சுப்... போய் பார்த்தால் தெரியும் “ என்று அவளை அமைதி படுத்தினாள்.

கிட்டத்தட்ட அரைமணி நேர பயணத்திற்கு பின் வந்த இடத்தை பார்த்த .. நிஷா சிரிக்க, அவர்களை பின்தொடர்ந்த அர்ஜுன் , ராகுல் இருவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.

அவர்கள் வந்த இடம் “மெட்ராஸ் டிபன் “ என்று அழைக்கப்படும் தென்னிந்திய உணவு வகைகள் கிடைக்குமிடம்..

நிஷா, “ஹேய்.. கடோத்காஜி... “

சுபா “ஹேய் கூஸ்  பேர் வை... ஆனால் அதுக்கு definition சொல்லிட்டு பேர் வை.. இப்போ நீ என்ன சொன்ன..”

“ஹ்ம்ம்.. எள்ளும் புண்ணாக்கும்.. ஏழெட்டு கருப்பட்டியும்..ன்னு சொன்னேன்.. மைடியர் ராட்சசி.. கடோத்கஜன்க்கு பெண்பால் .. கடோத்கஜி.. ன்னு சொன்னேன்..”

“ஒஹ்.. அப்படியா.. யு continue”

“ஏண்டி.. வந்து ஒரு வாரம் ஆகல.. அதுக்குள்ள இந்த ஹோட்டல் எப்படி கண்டுபிடிச்ச?”

“அதுவா கூஸ்.. கூகுள் ஆண்டவர் உபயம் ... இங்கே வரதுக்கு முன்னாடி டேஹ்ரடூன் பற்றிய எல்லா details உம தெரிஞ்சு வச்சுட்டேன் “

“அது எனக்கும் தெரியுது.. பொதுவா ஷாப்பிங் மால் , டூரிஸ்ட் place இப்படி தானே பார்க்க தோணும்.. நீ எப்படி இத கண்டுபிடிச்ச..”

“அதுவா... எப்படியும் இங்கே எல்லாம் ரொட்டி என்ற வரட்டி தான் இருக்கும்னு தெரியும்.. நாம எல்லாம்.. முழங்கை வழி வார சரக்கரை பொங்கல் சாப்பிடற கேஸ்... காலை டிபன்க்கு மிகவும் உகந்தது இட்லியா, பொங்கலா, ரவா கிச்சடியான்னு பட்டி மன்றம் வச்சு decide பண்ணுவோம்.. அதுதான்... சவுத் இந்தியன் மெனு எங்கே கிடைக்கும் என்று முதலில் பார்த்து வச்சேன்.. இன்னிக்கு இங்கே ஸ்பெஷல் மோர்க்குழம்பும், எண்ணெய் கத்திரிக்காவும் .. அது காலி ஆறதுக்குள்ளே சாப்பிடலாம்”

ராகுல் அர்ஜுனிடம் “மச்சான்.. சான்ஸ் இல்லடா.. இவள மாதிரி இன்னொரு பீஸ் இருந்தா இந்த உலகம் தாங்காது “

“அடேய்.. அடங்கு.. உன் ஆள கொஞ்சம் பாரு..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.