(Reading time: 9 - 17 minutes)

திரும்பி ராகுல் பார்க்க, நிஷா சுபாவிற்கு முன்னால் ஒரு புல் மீல்ஸ் வித் எக்ஸ்ட்ரா ரைஸ் கேட்டாள்...

“அடக் கொடுமையே...” என்று நினைத்தான் ராகுல்..

இருவரும் மூன்று மணி வரை ஹோட்டலில் செலவழித்து விட்டு, மீண்டும் ஆட்டோவில் சிட்டிக்குள் வந்தனர்..

இப்போது இருவரும் clock tower வந்தனர். இந்த ஊரில் இது ஒரு முக்கிய இடம் ஆகும்.. மிகபெரிய மணிகூண்டு இது. ஊரின் எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் தெரியும்..

கொஞ்ச நேரம் அதை பார்த்து விட்டு, பின் அதை சுற்றியுள்ள இடங்களில் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து விட்டு,  அங்கேயும் ஒரு கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் டீ கடை போட்டிருக்க, அங்கே சென்று மலையாளமும், தமிழும் கலந்து பேசி டீ குடித்து விட்டு கிளம்பினர்.

சரியாக ஐந்தரை மணிக்கு அங்கிருந்து அவர்கள் கிளம்பி, campus க்கு சென்றனர்.

இவர்கள் கொஞ்சம் சுற்று வழியில் செல்ல, அதற்கு முன் ராகுலும், அர்ஜுனும் குறுக்கு வழியில் சென்று விட்டனர்.

இவர்கள் campus உள்ளே நுழையும் போது மிக சரியாக ஆறு மணி.. entrance செல்லும் வழியில் நின்று இருந்த அர்ஜுனை பார்த்து இருவரும் திரு திருவென முழித்தனர். இருவரையும் பார்த்து விட்டு,

“சுபா. நிஷா இனிமேல் இந்த ரிஸ்க் எடுக்காதீங்க.. பத்து நிமிடம் முன்னாடி இருக்கிற மாதிரி வந்து சேருங்க.. இல்லாவிட்டால் punishment இருக்கும்.. அதிக punishment வாங்குவது உங்கள் evaluation பாதிக்கும் .. சோ careful..” என்று சொல்லி விட்டு சென்றான்.

இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு ராகுலும் அவன் பின்னாடி சென்றான்.

அவர்கள் சென்ற பின் ஒரு பெருமூச்சை வெளியிட்ட நிஷா, சுபாவை பார்க்க, சுபாவோ தீவரமாக ஏதோ யோசித்தாள்.

“ஹேய்.. சுபா என்னடி யோசனை..?”

“இல்லை.. அந்த ஜிங்குச்சா பச்சை டீ ஷர்ட் இன்னிக்கு பூரா நம்மள follow பண்ண மாதிரி இருந்துது.. ஆனால் அது இவர்தானா தெரியல”

“ஹேய்.. நான் பார்க்கலையே.. “

“கூஸ்.. அந்த கேப்டன் ஓட கைத்தடி பார்க்கிற பார்வையே சரி இல்லியே... ஹ்ம்ம்.. ஒரு சீக்ரெட் வாட்ச் பண்ண வேண்டியது தான்..”

“எனக்கு அப்படி எல்லாம் ஒன்னும் தோனல பா.. நான் நம்ம கேப்டன் கிட்டேர்ந்து ஜஸ்ட் மிஸ் ஆன டென்ஷன் லே இருக்கேன்.. நீ பார்த்த விழிகள் ன்னு பாட்டு பாடற மாதிரி இல்லைமா..’ என்று மீண்டும் வளவளத்தபடி இருவரும் சென்றனர்.

இவர்கள் இருவரும் தான் யாருக்கும் தமிழ் தெரியாது என்ற எண்ணத்தில் சத்தம் குறைக்கலாமல் தெளிவாக பேசியபடி வர, முன்னால் சென்ற இருவருக்கும் நன்றாக காதில் விழுந்தது.

இதற்கு இடையில் சுபா வழக்கம் போல் நிஷாவிடம் நோட்டீஸ் போர்டு இல் ஒட்டப்பட்ட schedule பார்த்து புலம்பினாள்..

றுநாள் வழக்கம் போல் ட்ரைனிங் எல்லாம் முடித்து விட்டு, மதியம் அந்த ஸ்பெஷல் ட்ரைனிங் செல்ல, சுபத்ராவின் பாட்மிட்டன் மற்றும் ஷூட்டிங் கேப்டனாக அர்ஜுனே வந்தான்.

அங்கே நிஷாவின் டென்னிஸ் மற்றும் throw பால் கேப்டன் ஆக ராகுல் இருந்தான்..

அர்ஜுன் வழக்கம் போல் சுபத்ராவிடம் எதுவும் காண்பிக்காமல் பயிற்சி அளிக்க, ராகுலும் பயிற்சி அளித்தாலும், நிஷாவின் மேல் பார்வை செல்வதை தடுக்க முடியவில்லை.

என்றாலும் அதற்காக அவன் வேலையில் தவறினான் என்று இல்லை, வேலையோடு வேலையாக தன் சைட் அடிக்கும் வேலையையும் மிக சரியாக செய்தான்.

பாட்மிட்டன் டீமில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி விளையாடினார்கள். ஒருமுறை சிங்க்லஸ், டபுள்ஸ், mixed டபுள்ஸ் என்று எல்லோரும் எல்லோரோடும் விளையாடுமாறு schedule வைத்துக் கொண்டார்கள்.

அவ்வப்போது அர்ஜுனும் அதில் கலந்து கொள்வான்..

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சென்றது.. பொதுவாக இந்த நூற்றி ஐம்பது பேரும் ஒரே குழுவாக இருந்தாலும், இப்போது நிறைய பேரை அவரவர் திறமைக்கேற்ப பிரித்து விடப்பட்டனர்.

ஒரு சில வீரர்களுக்கு அடிப்படை இன்னும் சரியாக வரமால் இருக்க, அவர்கள் அனைவரும் தனி பயிற்சி பெற்றனர்.

சுபத்ரா, நிஷா இருவரும் நல்ல முறையில் தங்கள் performance காட்டுவதால், அவர்கள் இருவரையும் அடுத்த கட்ட பயிற்சி பெறுவோர் லிஸ்ட் சேர்த்தனர்.

அர்ஜுன் சுபாவிடம் எந்த இளக்கமும் காண்பிப்பது இல்லை.. அவன் சுபாவிற்கு மிககடுமையான பயிற்சிகள் கொடுத்தான்.

அப்போது தீபாவளி வந்தது.. பயிற்சி பெறுவோருக்கு விடுமுறை கிடையாது.. அதாவது ஊருக்கு சென்று வர முடியாது. அன்று ஒரு நாள் மட்டும் வீக்லி ஆப் போலே வெளியே போய் விட்டு வரலாம்..

வழக்கமாக ராகுல், அர்ஜுன் இருவரும் தீபாவளி சமயத்தில் ஊருக்கு சென்று விடுவார்கள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.