(Reading time: 6 - 11 minutes)

05. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ர்ஜுன் சொன்னதில் உள்ள உண்மைகளை யோசித்த சுபாவும், நிஷாவும் அன்று இரவு தாங்களாகவே எழுந்து கொள்ள பழக வேண்டும் என்று முடிவு செய்தனர்.

பயிற்சிகள் நடந்து கொண்டு இருப்பதால் இருவருக்கும் தூக்கம் அடித்து போட்ட மாதிரி வந்தது. ஆனாலும் இருவரும் அடிக்கடி எழுந்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.

சரியான நேரத்துக்கு எழுந்து அதன் பின்னான வேலைகளுக்கு தயாராயினர். முதல் நாளை விட சோர்வாக இருந்தாலும், அர்ஜுன் சுட்டிக் காட்டும் படி ஆகி விடக் கூடாது என்று எண்ணி இருவரும் ட்ரைனிங் கில் அவர்களால் முடிந்த பெஸ்ட் performance கொடுத்தனர்.

அவர்கள் இருவரின் முயற்சியை பார்த்த அர்ஜுன் “குட்” என்றான்.

எல்லாரும் ட்ரைனிங் முடித்து விட்டு கிளம்பி தங்கள் அறைக்கு வந்து, ரெப்ரெஷ் செய்து விட்டு , dining ஹால் வந்தனர்.

அர்ஜுன் அவர்கள் பின்னாடிதான் நின்று இருந்தான். அவனுக்கு தமிழ் தெரியாது என்ற எண்ணத்தில் சுபத்ரா மெதுவாக

“கூஸ்... பாரட்டரதுலே கூட நம்ம வாத்யாருக்கு என்னவொரு கஞ்சத்தனம் பாரு” என்றாள்..

“என்ன.. சொல்றே?”

“இல்லடி .. நம்ம ரெண்டு பேரும் தானே... இன்னிக்கு நல்ல பண்ணோம்.. அப்போ குட்ன்னு ரெண்டு வாட்டி சொல்லன்னும்லே.. ஒரு வாட்டி சொல்லிடு விட்டுட்டாரு.. இப்போ இந்த குட் உனக்கா ? எனக்கா ? போய் கேட்டுட்டு வருவோமா?”

“அடியேய்.. நீ அடங்க மாட்டியா? அவர் குட் ன்னு சொன்னதே பெரிசு .. இதுலே நீ ஒன்றா ரெண்டா ? ன்னு ஜோதிகா கேட்கிற மாதிரி கேட்கற.. இப்போ உனக்கு என்ன வேணும்? அந்த குட் அவ்வளவுதானே... நீயே வச்சிக்கோ... எனக்கு வேண்டாம்பா..”

“ஹே.. என்ன என்னன்னு நினைச்சா? தலையே போனாலும் நாங்க கேட்கறத கேட்காம விடமாட்டோம்... சோ . .இப்போ நான் என்ன பண்ண போறேன் தெரியுமா? கேப்டன் ... கேப்டன்.. நீங்க சொன்ன குட் எனக்கு தானே... ஆனால் இந்த கூஸ் அவளுக்கு குட் எங்கேன்னு கேட்குறா? அப்படின்னு போய் கேட்கபோறேன்..”

“அம்மா தாயே... அகிலாண்டேஸ்வரி உனக்கு புண்ணியமா போகும்.. எதுவும் கேட்க வேண்டாம்... நான் bad ஆவே இருந்துட்டு போறேன்.. வா “

“சரி.. ஏதோ சொல்றே.. அதனாலே விட்டுடறேன்..’

“ஷ்.. அப்பா.. உன்னெல்லாம் எந்த டிசைன் லே பண்ணினாங்கண்ணு தெரியலடி “

“தெரியலியா.. .basic டிசைன் தானே.. ரெண்டு கண்ணு, ரெண்டு காது, ஒரு மூக்கு.. உன்ன செஞ்ச அதே டிசைன் தான்.. “

“ஹ்ம்ம். .ஆனா வாய் மட்டும்.. எக்ஸ்ட்ரா large இருக்கும் ..”

“ஹேய்.. என்கிட்டயேவா..?”

“ஹி.. ஹி.. இல்லடி செல்லம்.. நீ யாரு? உன் புகழ் என்ன? உன்ன செய்யுறதுக்கு ஓவர் டைம் பார்த்து இருப்பார்ன்னு சொல்ல வந்தேன்..”

சரி .. சரி.. இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்... நமக்கு கொடுக்கிற அந்த வரட்டி...யும் இல்லாம போய்டும் .. வா .. “

வரட்டி யா..?

அதாண்டி ரொட்டி ன்றேலே போடறாங்களே.. அந்த கொடுமையைத்தான் சொல்றேன்..’

“ஏன்பா நல்லாதானே இருக்கு.. “

“ஹ்ம்ம். என்னதான் இருந்தாலும் .. மை மாதா ... ருக்கு .. போடற ரொட்டி மாதிரி வருமா?’

ஹ்ம்ம்.. அது என்னவோ கரெக்ட் தான். ஹே.. நானும் கேட்கணும்நு நினைச்சேன்.. இத்தனை தூரம் உன் பாமிலி மிஸ் பண்ற நீ. .எப்படி இங்கே join பண்ணினே..

“எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னோட பாமிலி.. அதுக்கு அடுத்து மிலிடரி அகாடமி தான்... என்ன இந்த ரெண்டு விஷயமும் நம்ம கூட ஒண்ணா இருக்க முடியாது.. “

அப்படி என்ன ... ரீசன் .. மிலிடரி பிடிக்க..?

அம்மா என்னை கன்சீவ் ஆகி இருக்கும் போது .. நிறைய சரித்திர novel படிப்பாங்களம். அதோட மகாபாரத அபிமன்யு கேரக்டர் ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கு.. சோ அவர மாதிரி கருவிலே இருக்கிற தன்னோட குழந்தையும் வீரமும், விவேகமும் உள்ளவனா இருக்கனும்நு அத பத்தியே think பண்ணுவாங்களாம். வளர்ந்து பெரிசாகும்போது மிலிடரிலே சேர்க்கணும். இது எல்லாம் அவங்க ஆசைகள்

ஆனால் அவங்க எதிர்பார்த்தது பையன.. நான் பொண்ணா  பிறந்தவுடனே.. அவங்க  தன்னை மாதிக்கிடாங்க.. .பட் என்னை மாத்த முடிலே..

என்னோட சின்ன வயசுலேர்ந்தே.. ஆர்வமா லெப்ட் ரைட் மார்ச் பாஸ்ட் ... இதெல்லாம் பார்ப்பேன்.. & அதே மாதிரி நடப்பேன்னு  அப்பாவும்.. அம்மாவும் சொல்லுவாங்க..

நான் சின்ன வயசா இருக்கும் போது என் மனச இதுலேர்ந்து மாத்தனும்நு அவங்களும் எவ்வளவோ ட்ரை பண்ணினாங்க.. அதுக்க்காகதான் பாட்டு, டான்ஸ்ன்னு சேர்த்து விட்டாங்க. நான் அதோட சேர்த்து கராத்தே.. , ஜூடோ இதுவும் கத்துகிட்டேன்..

அப்புறம் அஞ்சு , ஆறு வருஷம் முன்னாடி .. பெண்கள் ஆர்மி லே சேருவது பத்தியெல்லாம் நியூஸ் வர ஆரம்பிச்சவுடனே.. என்னை என் இஷ்டப்படி செய்ன்னு விட்டுட்டாங்க..

பட் நான் அவங்கள ரொம்ப மிஸ் பண்றேன்.. அது கொஞ்ச நாள் ஆனா சரியாயிடும்.. பார்க்கலாம்”

என்று நீளமாக பேசி முடித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.