(Reading time: 6 - 11 minutes)

ஹே.. கூஸ்.. என்ன இது இந்த சுரா இவ்ளோ செண்டிமெண்ட் பேசுறா. .. என் friends கேட்டாங்க .. என்னை காரி துப்புவாங்க.. சுரா ன்னு பேரை சொன்னவுடனே சும்மா தெறிச்சு ஓட வேண்டாம் எல்லாரும்.. “ என்று பேசியவள் டச் அவுட் சொல்லி மறக்க வைத்தாள்.

“கூஸ்.. நம்ம கேப்டன் கிட்ட போய் ..இந்த வரட்டி இன்னிக்கு செஞ்சதா... இல்ல போனவாரம் செஞ்சதான்னு கேட்டுட்டு வாயேன்..”

“அம்மா.. ராட்சசி .. எதுவா இருந்தாலும் நீயே கேட்டுக்கோ... வரட்டியா இருந்தாலும் அத நான் மிஸ் பண்றதா இல்ல.. “

மேலும் ஏதோ இருவரும் வம்பு அளந்து கொண்டு இருக்க, அர்ஜுன் இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டான்.. அவன் சுபத்ராவின் பேச்சில் மயங்கி இருக்க, ராகுல் வந்து அவனோடு நின்றதை கவனிக்க வில்லை.

சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் செல்ல, ராகுல் ..அர்ஜுனிடம்

“டேய்.. மச்சான்.. அவங்க போயாச்சு..”

அவன் குரல் கேட்ட அர்ஜுன் சுதாரித்து,

“யாரடா...?”

“நீ இவ்ளோ நேரம் யாரை பார்த்து ஜொள்ளு விட்டியோ அவங்கதான்..”

“நான் ஜொள்ளு விட்டத நீ பார்த்தியா?

“ச்சே ..ச்சே.. பார்க்கல.. நான் வரும்போதே நீந்திதானே வந்தேன்..”

“டேய் .. மச்சான்.. அடி வாங்காதே.. நான் ட்ரைனிங் பத்தி ஏதோ think பண்ணிட்டு இருந்தேன்.. “

“யார்.. நீ? “

“என்னடா.. வேற என்ன பண்ணேன்னு சொல்லு..?”

“உன் ஆளு.. உன்னை வாத்தியார்னு ஆரம்பிச்சு, குட் சொல்லாததுக்கு உன்னை கழுவி ஊத்தினப்பவே நான் வந்துட்டேன்.. நீ திரும்பியே பார்க்கல

“நீ வந்தத நான் பார்கலன்னு எப்படி சொல்ற? உன்னை பார்க்கிற நேரத்துலே.. என் ஆள் பேசுறத மிஸ் பண்ண வேண்டாம் .. ன்னு திரும்பல..”

“ஹேய்.. இப்போ நீயே ஒத்துகிட்டியா? நீ அவள்தான் பார்த்தேன்னு “

“ஆமாடா.. இப்போ என்ன பண்ணனும் நு சொல்ற மச்சான்..?’

‘ஒன்னும் பண்ண வேண்டாம்.. இந்த வீக் end நியாபகம் இருக்குல்லே.. அதோட.. அன்னிக்கு உன் treat தான்..

“போ .. போ.. பார்த்துக்கலாம்..” என்று அவனை தள்ளியவன்,

“ஆனாலும் மச்சான்.. அந்த சுபத்ரா கேப்டன்ன்னு சொல்லும்போது எல்லாம் எனக்கு  நம்ம கேப்டன் விஜயகாந்த் மாதிரி “ஆங்..” ன்னு நீ சொல்ற மாதிரியே தோணுதுடா... நாட்டிலே உன்னை கலாயிக்கவும் ஆள் இருக்குடா மச்சான்..”

ராகுலை முறைத அர்ஜுன், மனதிற்குள் இந்த நிஷா சொன்ன மாதிரி .. .சுபிகுட்டிய என்ன டிசைன் லே அந்த ஆண்டவன் செஞ்சான்னு தெரியலியே.. இவ்ளோ damage பண்றாளே.. என்று நொந்து கொண்டான்.

ராகுல் மனதிலோ இந்த நிஷா பொண்ணு பாவம் பா.. இப்படி ஒரு வானரத்துக்கிட்ட வந்து மாட்டிகிட்டாளே.. என்று நினைத்தான்..

ஹாய்.. friends.. இந்த வீக் சின்ன அப்டேட் தான் கொடுக்க முடிஞ்சுது.. அடுத்த அப்டேட் இன்னும் கொஞ்சம் பெரிசா கொடுக்க முயற்சி செய்கிறேன்.. தேங்க்ஸ்

மழை பொழியும்

Episode 04

Episode 06

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.