(Reading time: 14 - 27 minutes)

நேத்து ராத்திரி  Flight landed அப்படின்னு ஃபோன் பண்ணினார்.  அப்பறம் ஆத்துக்கு போயிட்டு மெசேஜ் அனுப்பினார்.  கார்த்தாலேர்ந்து  ஒரு தகவலும் இல்லை.  மூணு பேரோட  ஃபோனும் நாட் ரீச்சபிள்.  புயல் இன்னும் கரையக் கடந்த பாடில்லை.  இன்னும் எத்தனை நாளைக்கு மழை பெய்யும்ன்னு தெரியலை. கௌஷிக்கிட்ட இருந்து தகவல் வராம ஒரேக் கவலையா இருக்கு.  அதுவும் இவர் போனதுதான் கடைசி flight.  அதுக்கப்பறம் எல்லா சர்வீஸும் கான்செல் பண்ணிட்டா”

“ஓ உங்க அம்மா, அப்பாலாம் ஓகேயா மன்னி......”

“ஹ்ம்ம் அங்க ஃபோன் வேலை செய்யறது ஸ்வேதா.  கரண்ட்டும் அப்போ அப்போ வந்து போறது.  இந்தளவு தண்ணி நிக்கலை, சாமானும் ஓரளவு கிடைக்கறதுன்னு சொன்னா.  டிவில வேளச்சேரி தண்ணியக் காட்டும்போதெல்லாம் பக்கு பக்குன்னு இருக்கு”

“ஆமாம் மன்னி, நானும் ஆஃபீஸ் முடிஞ்சு வந்ததுலேர்ந்து அதைத்தான் பார்த்துண்டு இருக்கேன்.  வேளச்சேரில  எல்லா ஏரியாவும் காட்டறா.  நம்மாத்து பக்கம் மட்டும் காட்ட மாட்டேங்கறா.  என்ன நிலமைன்னே தெரிய மாட்டேங்கறது”

“கவலைப்படாம இரு ஸ்வேதா.  நானும் இங்க இருந்து அவாளை ரீச் பண்ண ட்ரை பண்றேன்.  நீயும் பண்ணு. கடவுள் புண்ணியத்துல ஒண்ணும் பிரச்சனை இருக்காது”

“ஆமாம் மன்னி, கெட்டதுலயும் ஒரு நல்லது, அட்லீஸ்ட் இந்த நேரத்துல கௌஷிக் அவாக் கூட இருக்கானே”

“ஆமாம் அவருக்கு ஏதோ உள்மனசுல தோணிண்டேஇருந்திருக்கும் போல.  டக்குன்னு ஒரு நாலு நாள் லீவ் போட்டுட்டு கிளம்பிட்டார்.  சரி ஸ்வேதா, மீட்டிங்  கூப்பிடறா.  நான் போறேன். எனக்கு ஏதானும் தகவல் கிடைச்சா உடனே உனக்கு சொல்றேன்”, என்று கூறியபடியே கைப்பேசியை வைக்க, இங்கு ஸ்வேதாவிற்குத்தான் ஒன்றும் ஓடவில்லை.  சாதாரணமாகவே அவளுக்கு தனிமையில் தூக்கம் வராமல் இருக்க, போதாத குறைக்கு பெற்றோரும், தமையனும் எப்படி இருக்கிறார்களோ என்ற கவலையும் சேர தூக்கம் என்ற ஒன்றே மறந்து விட்டது.  நொடிகள் நகர நகர கண்டதும் தோன்ற ஆரம்பிக்க, ஹரிக்கு ஃபோன்  செய்தாள்.

“ஹே ஸ்வேதா, மணி பன்னெண்டாறது,  இன்னும் தூங்காம என்ன செய்யற”, ஹரி கேட்க மறு பக்கத்தில் அவனுக்கு விசும்பல் ஒலியே பதிலாக வந்தது.

“ஸ்வேதா, கண்ணம்மா என்னடா, எதுக்கு அழற.  சொல்லும்மா, ஏதானும் பிரச்சனையா”, அவளின் அழுகையைக் கேட்டு ஹரிக்கு பதை பதைத்தது.

“நீங்க இங்க ஆத்துக்கு வறேளா, ப்ளீஸ்”

“இந்த நேரத்துலயா........ ஏம்மா என்ன ஆச்சு”

“நேரத்துக்கு என்ன....ஓ பன்னெண்டா... பரவாயில்லை...  ப்ளீஸ் வாங்கோளேன்....”

“சரி நீ அழறத மொதல்ல நிறுத்து.  நான் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்”, கூறியபடியே அடுத்த பத்தாவது நிமிடம் அவள் வீட்டின் அழைப்பொலியை அழுத்தினான்.

ஹரி உள் நுழைந்து கதவைத் தாளிடும் வரை பொறுத்த ஸ்வேதா, ‘நேக்கு பயமா இருக்கு ஹரி’, என்று அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

என்ன விஷயம் என்று ஒன்றும் கூறாமல் அழும் ஸ்வேதாவைப் பார்த்த ஹரிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“ஸ்வேதா இங்க பாரு, மொதல்ல அழறத நிறுத்து.  உடம்புக்கு ஏதானும் முடியலையா.... ஆஃபீஸ்ல ஏதானும் பிரச்சனையா..... பாஸ் ஏதானும் திட்டினாரா.....”, ஹரி விதவிதமாகக் கேட்டும் ஸ்வேதாவின் பதில் அழுகை மட்டுமே.  அவன் கேட்க கேட்க அவளின் அணைப்பு மட்டும் இறுகிக் கொண்டே போனது.

“என்ன பிரச்சனைன்னு சொல்லிடானும் அழுடி... மனுஷனுக்கு BP ஏர்றது”, விஷயம் என்னவென்றே சொல்லாமல்  அழும் ஸ்வேதாவைப் பார்த்து கடுப்பில் கத்தினான் ஹரி.

அதற்கும் பாவம் போல் அழுது கொண்டே அவனைப் பார்த்தாள் ஸ்வேதா.

இது வேலைக்காகாதென்று அவளை அணைத்தபடியே பாத்ரூமிற்கு கூட்டிச்சென்று முகம் அலம்ப வைத்து, சிறிது தண்ணீர் குடிக்க செய்து  ஸோஃபாவில் உட்கார வைத்தான்.  இத்தனை சவரட்சனைகளுக்குப்  பிறகு ஓரளவு தெளிவிற்கு வந்தாள் ஸ்வேதா.  ஆனாலும் இன்னும் விசும்பல் மட்டும் இருந்தது.

“இங்கப் பாரு.... தீர்க்க முடியாத பிரச்சனைன்னு ஒண்ணுமே இல்லை, எதுவா இருந்தாலும், பார்த்துக்கலாம்....  இப்போ எதுக்காக இத்தனை அழுகைன்னு சொல்லு”

“அங்க சென்னைல மழை பெய்ஞ்சு ஆத்துக்கிட்ட எல்லாம் ஒரே வெள்ளம்..... நேத்து வரைக்கும் அம்மாக்கூட பேச முடிஞ்சுது.  இன்னைக்கு சாயங்காலத்துல இருந்து லைனே போக மாட்டேங்கறது.  அண்ணா வேற அங்க போய் இருக்கான்.  என்ன நிலமைனே தெரியலை”

“ஹ்ம்ம் நானும் எங்காத்துக்கு பேசினேன்.  அவாளும் மாமா, மாமியோட பேச முடியலைன்னு சொன்னா.  நேத்து ராத்திரி ஆத்துக்கு போன உடனே கௌஷிக் பேசினார் போல இருக்கு, கார்த்தாலேர்ந்து அவரை ரீச் பண்ண முடியலைன்னு சொன்னா.  ஒரு ரெண்டு மணி நேரம் முன்னாடிதான் அம்மாவோட பேசினேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.