(Reading time: 9 - 18 minutes)

01. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ழகிய காலைப்பொழுது உதயமாகும் வேளையில் மனமானது புத்துணர்ச்சி அடைகிறது!கதிரவனின் வருகையை உணர்ந்த பொழுதினில் இயற்கையானது தனது மன்னனுக்கு மலர்களால் வரவேற்பினை அளிக்கிறது.மனதின் ஆக்ரோஷ நிலை இயற்கையின் உன்னத ஆற்றலால் கட்டுப்படுத்தப்படுகிறது.மனமானது சஞ்சலம் கொள்ளும் சமயத்தில் இயற்கை மனதினை அமைதி அடைய செய்கிறது.ஆழி பெருங்கடலானது எந்நேரமும் சலனப்பட்டப்படியே இருக்கும்!ஆனால்,அதை காணும் மனமானது எவ்வாறு ஒருநிலைப்படுகிறது??எவரேனும் சிந்தித்ததுண்டா??நாம் கொண்டாடும் ஒவ்வொரு சூழலும் தற்காலிகமானதே!!சிலர் மன நிம்மதிக்காக கற்பனையாய் வாழ்கின்றனர்.சிலர் அதே நிம்மதிக்காக கற்பனையோடே வாழ்கின்றனர்.மனிதன் இறைவனின் புரியாத புதிர்!!!அவனது எந்த ஒரு செய்கையின் தார்பரியத்தையும் இறைவனால் மட்டுமேஅறிய இயலும்.விதியின் ஆணையை ஏற்று உலகில் ஜெனிக்கும் புண்ணிய ஆத்மா,அதே விதி வசத்தால் மாயைகளில் சிக்கி தவிக்கிறது!!ஆனால்,ஆன்மாவானது அறியும் இதுவும் கடந்து போகும் எந்த கவசத்தை!!மனமோ,அல்லது புத்தியோ அந்த ஞானத்தை அறிய என்றுமே முயன்றதில்லை.அவ்வாறு அது முயலுமானால்,பின் துன்பங்களுக்கு அங்கு என்ன வேலை??சிந்தித்துப் பாருங்கள்...!

காலை 10 மணி ஆகியும்,அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ நகரம் புத்துணர்வோடு இல்லை...காரணம்,அங்கு நிலவும் கடும் பனிப்பொழிவு!!

என்னவென்று சொல்வது இந்தப் பொழிவை!!அப்பொழிவை தாங்க,பேசாமல் இறைவனை நோக்கி தவம் புரிந்து பனிவாழ் உயிரியாக உரு தரித்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்றிவிடும்!!அவ்வளவு குளிர்!!!

நடுங்க வைக்கும் அக்குளிரில் கண்விழிக்க சிரமப்பட்டு கண்விழித்தாள் ஆராத்யா.

"அம்மாடி!கண் முழிச்சியே!தாயே!எவ்வளவு நேரம் உன்னை எழுப்புறது?"-குரல் கேட்கிறதா?யாரென்று கூறுங்கள்...ஆம்..!அது பவித்ரா தான்!!

"ம்..பாட்டி!இன்னும் கொஞ்ச நேரம்!"-மீண்டும் போர்வையை போர்த்திக் கொண்டாள் அவள்.

"உதை வாங்குவ!தினமும் உங்கக்கூட போராட்டமா போச்சு!எழுந்திரி!"

-அவள் சிணங்கியப்படி எழுந்தாள்.சில நொடிகள் பவித்ராவின் முகத்தையே உற்று பார்த்தாள் அவள்.

"என்ன?"

"இன்னிக்கு என்ன செம க்யூட்டா இருக்க?"

"அடி கழுதை!காலையிலே ஆரம்பிச்சிட்டியா?"-என்று அவளது செவிகளை செல்லமாய் திருகினார் அவர்.

"வலிக்குது!போ!தாத்தா சொன்னா திட்டாதே!நான் சொன்னா மட்டும் திட்டு!"

"அவர் எப்போடி சொன்னாரு?"

"கிச்சன்ல நடந்ததை நான் பார்த்துட்டேன்!"-சட்டென அவள் கூறியதும் அவரது முகம் எந்த பாவனையை வெளியிடுவது என்றே புரியாமல் தவித்தது.

"சரி..சரி!வெட்கப்படாதே!போய் எனக்கு காப்பி போட்டு எடுத்துட்டு வா!"

"காப்பியா?சுடுதண்ணி போட்டு எடுத்து வரேன்!"

"நீ போடுற காப்பியே அப்படி தானே இருக்கும்!"

"உன்னை...ஓவரா செல்லம் கொடுத்து வளர்த்துட்டேன்ல அதான்!எழுந்து போய் ஃப்ரஷ் ஆகு போ!"

"ஓ.கே.சரி!அக்கா எங்கே?"

"அவ என்ன உன்னை மாதிரி சோம்பேறின்னு நினைத்தாயா?அவ ஹாஸ்பிட்டல் கிளம்பி மூணு மணி நேரம் ஆகுது!"

"ஓ காட்!இன்னிக்கு மூவிக்கு போக பிளான் போட்டேனே!"

"போடுவ போடுவ!நீ மட்டும் அவளை மூவிக்கு கூட்டிட்டு போயிடு!நீ என்ன கேட்கிறீயோ நான் செய்றேன்!"

-அவள் தன் முகத்தை குழந்தையை போல் வைத்துக் கொண்டாள்.

"அது நடக்காது பாட்டி!"

"தெரியுதா!எழுந்து போ!நான் போய் அடுத்து உன் தாத்தாக் கூட போராடணும்!"

"அதான் தினமும் பார்க்கிறேனே!"

"அடி!"-அவர் செல்லமாய் மிரட்ட,அவள் எழுந்து ஓடி விட்டாள்.

"விளையாட்டு பொண்ணு!"-என்று மிரட்டியப்படியே நிரஞ்சனை எழுப்ப சென்றார் அவர்.

ந்த மனோத்தத்துவ மருத்துவமனை அந்த நகரத்திலே தனித்துவம் வாய்ந்தது.மன உளைச்சலால் அவ்விடத்தை நாடி வரும் எவரும் மனதின் குழப்பங்களை நிவர்த்தி செய்தே திரும்புகின்றனர்.

[இங்கு நடக்கும் உரையாடல்களையும் தமிழிலே தருகின்றேன்!]

முதலில் அங்கு வருபவர்களின் உளைச்சலை அந்த இளம் மருத்துவரின் புன்னகை ததும்பிய முகமே தெளிவித்துவிடும்!!!

"எஸ்..!சொல்லுங்க!ஜி.ஆர் ஸைக்கோ கேர்!"

".............."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.