(Reading time: 9 - 18 minutes)

"நான் ஒரு...ஒரு ரைட்டர்!"

"வெரி குட்!உங்க கூட யாரெல்லாம் இருக்கா?"

"அப்பா,அம்மா,ஜோசப்...அப்பறம்..."

"அப்பறம்?"

"அப்பறம்! மில்ட்டி!"-சற்று தூரத்தில் இருந்தவனின் பார்வை கூர்மையானது!

"யார் அவங்க?"-அவனது கண்கள் கலங்க ஆரம்பித்தன.

"ரிலாக்ஸ்!ரிலாக்ஸ்!"

"அவ தான் எனக்கு எல்லாம்!நாங்க 4 வருடமா காதலித்தோம்!"

".........."

"அவ என்னை ரொம்ப விரும்பினா!நாங்க இரண்டு பேரும் யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்!கணவன் மனைவியா வாழ ஆரம்பித்தோம்!அப்பறம்.."

"அப்பறம்?"

"அன்னிக்கு நாங்க அவுட்டிங் போயிருந்தோம்!அப்போ,அவ என் காரை டிரைவ் பண்ண ஆசைப்பட்டா!நானும் சம்மதித்தேன்.அப்போ,ஒரு பெரிய லாரி எதிரில் வந்து..."

"..............."

"என் மில்ட்டி!என் கண் முன்னாடியே!"-அவனது நாடித்துடிப்பு குறைய ஆரம்பித்தது.

"ரிலாக்ஸ்!ஜெஸ்ட் ரிலாக்ஸ்!இப்போ உங்க கூட இருக்கிற மில்ட்டி யாரு?"

"அது அவ தான்!அவ என் கூட சரியா பேச மாட்றா!என்னை தவிர யாருக்கும் அவ தெரியலை!எப்போ பார்த்தாலும் அழுதுட்டே இருக்கா!என்னை விட்டு தூரமாகவே இருக்கா!மில்ட்டி...ஐ...ஐ லவ் யூ!"-மீண்டும் சுரம் இறங்கியது.

"ஓ.கே.ரிலாக்ஸ் பீட்டர்!மெதுவா நிகழ்காலத்துக்கு வாங்க!மெதுவா!அவ்வளவு தான்!மெல்ல கண்ணை திறங்க!மெதுவா!குட்!"-அவன் மெல்ல தன் கண்களை திறந்தான்.

"கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க பீட்டர்!எவ்ரி திங் வில் பீ ஆல்ரைட்!"-அவன் மெதுவாக கண்களை மூடிக் கொண்டான்.

"ஜோசப்!என் கேபினுக்கு வாங்க!"-அவள் முன் செல்ல இவன் பின் தொடர்ந்தாள்.

அவளது அறையின் கதவை அவள் திறக்க,"அக்கா!"-என்று ஓடி வந்து தன் தமக்கையை அணைத்துக் கொண்டாள் ஆராத்யா.

"அம்மூ நீயா?"

"ஏன்?நான் வர கூடாதா?"

"சரி...கொஞ்சம் அமைதியா இரு!பேஷண்ட் இருக்காங்க!"-அவள் எட்டி ஜோசப்பை பார்த்தாள்.

"இவனா பேஷண்ட்?பார்க்க நல்லா தானே இருக்கான்?"

"அம்மூ...!"

"ஓகே!"-அவள் தன் வாயை பொத்திக் கொண்டாள்.

அமைதியாக சென்று அமர்ந்தாள் அவள்.

"ஜோசப்!இதை எப்படி சொல்றதுன்னே புரியலை!"

"எனிதிங் சீரியஸ் கீதா?"

"ரொம்ப இல்லை....உங்க ஃப்ரண்ட் ஒரு வித மன நோயால பாதிக்கப்பட்டிருக்கார்!இல்லாத ஒரு விஷயத்தை இருக்குன்னு நம்பறது!இது அதிகப்படியான மன உளைச்சலால் வரும்!மனசுக்கு பிடித்தவங்க இறந்துட்ட விஷயத்தை அவரோட மனசு ஏற்றுக்கொள்ளலை!அவங்க இன்னும் உயிரோட இருக்கிறதா அவர் நம்பிட்டு இருக்கார்!"

"இப்போ என்ன செய்யணும்?"

"அவர் மனசை கூடுமான வரை ரிலாக்ஸா வைத்துக்கோங்க!தனிமையில விட வேண்டாம்!அவருக்கு பிடித்த விஷயத்தை செய்ய தூண்டுங்க!யோகா,தியானம் இதெல்லாம் உதவியா இருக்கும்!செக் அப் கூட்டிட்டு வாங்க!நான் சில டேப்லட்ஸ் தரேன்!அவர் எப்போ ரொம்ப அப்நார்மலா இருக்காரோ அப்போ மட்டும் ஒரு டேப்லட் கொடுங்க!அநாவசியமா தர வேண்டாம்!"

"தேங்க்ஸ் கீதா!"

"வெல்கம்!"-மெல்லியதாய் புன்னகை பூத்தாள் அவள்.அவளது அழகிய முகத்திற்கு அது மணிமகுடமாய் திகழ்ந்தது.

"யாருக்கா அவன்?"

"அம்மூ எத்தனை முறை சொல்றது?யாராக இருந்தாலும் மரியாதை கொடுன்னு!கேட்க மாட்டியா?"

"சரி..சாரி!நீ சொன்னது உண்மையா?இல்லாத விஷயத்தை இருக்குன்னு கூட கற்பனை செய்யலாமா?"-குழந்தையாய் கேட்டாள் ஆராத்யா.

"ம்..ஏன் முடியாது?அந்த வியாதி ஆயிரத்துல ஒருத்தரை தான் விட்டு வைக்கும்!"

"என்னக்கா சொல்ற?அப்போ நான் எப்போ அது மாதிரி கற்பனை பண்ணி இருக்கேன் சொல்லு?"

"ம்..டெய்லி நைட்!யாரோ ஒரு ராஜகுமாரனை நினைத்துக்கொண்டு அரை மணிநேரம் மொக்கை போட்டு என் தூக்கத்தை கெடுப்பியே!அதுக்கு பெயர் என்ன?"

"அக்கா!எனக்கானவன் எங்கேயாவது பிறந்திருப்பான்கா!"

"நீங்க இரண்டு பேரும் சந்திக்கிற வரைக்கும் அது இல்லாத விஷயம் தானே!"

"ம்...குழப்பிட்டியே!"

"இதில் குழம்ப எதுவுமில்லை!மனசு இருக்கிற எல்லோருக்கும் மாயை என்ற ஒரு விஷயம் பழக்கப்பட்டதாகவே இருக்கும்!அதிலிருந்து,தன்னை விடுவிக்கிறவன் வாழ்க்கையை சரித்திரமா மாற்றுகிறான்!அதுக்கூட வாழுறவன்,வாழ்ந்துட்டு மட்டுமே இருக்கான்!தட்ஸ் இட்!"

"ம்கூம்!அப்படின்னா,நீயும் அதற்கு விதிவிலக்கு இல்லை தானே!"-கீதா கூர்மையாக தன் தங்கையை பார்த்தாள்.

"ஒரு ஆத்மா தான் யாருங்கிறதை உணர்ந்திடுச்சுன்னா,அது எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளையும் எதிர்த்துப் போராடும்,எந்த மாயையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும் செய்யும்!"-அந்த உபதேசத்தின் பொருள் இளையவளுக்கு அச்சமயம் விளங்க மறுத்தது.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1070}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.