(Reading time: 9 - 18 minutes)

"டாக்டர் கொஞ்சம் பிஸியா இருக்காங்க!இன்னிக்கு பார்க்க முடியாது!நாளைக்கு ஈவ்னிங் 04 மணிக்கு வாங்க!"

"..............."

"தேங்க்யூ!"-இணைப்பை துண்டித்தாள் அந்த அமெரிக்க நங்கை.

"ஏ...மேரி!"-உரிமையோடு அழைத்தாள் ஆராத்யா.

"ஏ..ஹாய்!"

"அக்கா இல்லை?"

"பேஷண்ட்டை பார்த்துட்டு இருக்காங்க!"

"ஓ.கே!ஐ வில் வெயிட் இன் ஹர் கேபின்!"

"ஓ.கே!"-ஆராத்யா ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

சிறிது நேரம் அப்புத்தகத்தை புரட்டினாள்.மொத்தமும் மனோத்தத்துவம் குறித்த செய்திகள்,ஒன்றும் விளங்காமல் புத்தகத்தை மூடி வைத்து,தன் கைப்பேசியை உயிர்பித்தாள்.

தனது செவ்விதழ்களை குவித்து எதையோ சிந்தித்தவள்,பின்,யாரையோ அழைத்தாள்.

"ஹலோ!"-என்றது மறுமுனை.

"பெரியப்பா!நான் அம்மூ பேசுறேன்!"என்றாள்.

"அம்மூ!எப்படிடா இருக்க?"-என்றான் மறுமுனையில் நமது முன்னாள் கதாநாயகன் ராகுல்.

"நல்லாவே இல்லை!"

"ஏன் செல்லம்?"

"பின்ன என்ன?உங்க பொண்ணு செய்றது சரியே இல்லை!எப்போ பார்த்தாலும் ஹாஸ்பிட்டல் வந்துடுறா!எனக்கு போர் அடிக்குது!"

"ஐயோ செல்லம்!நான் அவங்களுக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்!இனி,உன்னை விட்டு அவங்க போகவே மாட்டாங்க!"

"நீங்க பொய் சொல்றீங்க!இதுவரைக்கும் ஒரு வார்த்தை அக்காவை எதிர்த்து பேசி இருக்கீங்களா?போங்க..."

"இல்லைம்மா!ம்...சரி ஒண்ணு பண்ணலாமா?"

"என்னது?"

"சீக்கிரம் ஊருக்கு கிளம்பி வந்துடுங்க!இங்கே எல்லாரும் உன்னை ரொம்ப மிஸ் பண்றாங்க பேபி!"

"பொய் பொய் பொய்!"

"ஏன்டா?"

"மிஸ் பண்ணி இருந்தா!உங்க தம்பி எனக்கு போன் பண்ணி இருப்பார்ல!அவர் பேசி 1 வாரம் ஆகுது!"

"எங்கே?நேற்றுக்கூட தான் போன் பண்ணான்!நீ தூங்கிட்டியாம்!பவித்ராம்மா எவ்வளவோ உன்னை எழுப்புனாங்க!நீ எழுந்துக்கவே இல்லை!"

"நைட்ல தூங்குவேன்னு தெரியும்ல!காலையில பண்றது!"

"ம்கூம்..!உன் அப்பாவை பற்றி தான் உனக்கு தெரியுமே!அவன் தூங்க ஆரம்பித்தால்,கும்பகர்ணனே தோற்றுவிடுவான்!அங்கே பகல்னா,இங்கே ராத்திரி தானே!"

"போங்க பெரியப்பா!உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன்!"

"நீ ஏன் கவலைப்படுற?சீக்கிரமே எல்லாரும் கிளம்பி வருவீங்க!நான் பொறுப்பு!"

"அக்கா ஹாஸ்பிட்டலை விட்டு வர மாட்டா!"

"அவங்களை எப்படி வரவழைக்கணுமோ அப்படி வரவழைக்கிறேன் பயப்படாதே!"

"ம்..சரி!நான் அப்பறமா பேசுறேன்!"

"சரிடா!உடம்பை பார்த்துக்கோ!"

"சரிப்பா!"-இணைப்பைத் துண்டித்தாள் அவள்.

சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்திடம் தன்னிச்சையாக சரண் புகுந்தது அவள் பார்வை!!

மணி 12:30

"இன்னும் என்ன செய்யுறா?"-அவளிடம் சிறிதும் பொறுமையில்லை.

உங்களின் பொறுமையையும் சோதிக்க நான் விழையவில்லை.

இதோ இங்கு காவிய தலைவியை அறிமுகம் செய்கிறேன்!

"மெதுவா நிகழ்காலத்தை மறந்துப் போங்க!"-இனிமையாக ஒலித்தது அந்தக்குரல்!!

"பொறுமையா!மனசை அமைதிப்படுத்துங்க!"-அந்த பெரிய அறை முழுதும் நீல நிற விளக்கு எரிந்து கொண்டிருந்தது.அது நமது மனதை கட்டுப்படுத்த பெரும் சிரத்தை எடுக்கவில்லை.

அவளின் முன்னிருந்த தனித்துவமான நாற்காலியில் சாய்ந்திருந்தான் ஒருவன்!அவனது முகத்தையே பார்த்தப்படி சற்று தொலைவிலிருந்த சோபாவில் அமர்ந்திருந்தான் மற்றொருவன்.இருவரும் அமெரிக்கர்கள்!!

"குட்!உங்க பெயர் என்ன?"

"பீட்டர்!பீட்டர் மேக்ஸ்வெல்!"

"குட்!உங்க வயசு?"

"26!"

"என்ன பண்றீங்க?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.