(Reading time: 6 - 11 minutes)

13. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

Sorry Friends, இந்த வாரம் சின்ன அப்டேட்தான். நவராத்ரிக்கு அம்மனை விட பிஸியா சுத்திண்டு இருக்கறதால நிறைய டைப் பண்ண முடியலை. அடுத்த அப்டேட் நிறைய பேஜஸ் தரேன்.

 

நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே.......

சின்ன சின்ன முல்லை கிளிப்பிள்ளை என்னை வென்றாளம்மா.......

ஸ்வேதா தன் அமெரிக்க வேலையை முடித்து சென்னை வந்து பதினைந்து நாட்களாகி விட்டது.  ஹரியும்  அவளிடம், கல்யாணம் முடியும் வரை அப்படியே ப்ரொஜெக்டை இழுத்து செய்......  இருவரும் சேர்ந்தே சென்னை செல்லலாம் என்று பிட்டைப் போட்டுப் பார்த்தான்.  ஆனால் ஸ்வேதா அதற்கு  பெரிய நோவாக சொல்லி விட்டாள்.  அதுவும் ஹரி சரியாக ப்ரொப்போஸ் பண்ணாமல் எல்லாம் சுபமாக முடிந்த கடுப்பில் வேறு இருந்ததால், அவள் அங்கு வந்த நாளிற்கு மேல் ஒரு நாள் கூட கூடுதலாகத் தங்க முடியாது என்று கெஜட்டில் தீர்மானமே இயற்றி விட்டாள்.   

சென்னை வந்த பின் அவளின் அலுவலக வேலைகள், ஷாப்பிங் என்று நிற்க நேரமில்லாமல் ஓட வேண்டிய நிலை...... இதில் நேர வித்யாசம் வேறு......பாதி நாள் ஸ்வேதாவால் ஹரியுடன் பேச முடியவில்லை.  அதனால் ஹரி பசலை நோய் வரும் அளவிற்கு பாதிக்கப்பட்டான்.  இது வேலைக்காகாது என்று இந்த முறை Work from சென்னை போட்டுக்கொண்டு ஹரி வந்துவிட்டான்.(இந்த விஷயத்தில் மச்சானும், மாப்பிள்ளையும் ஒரே மாதிரியாதான் இருக்காங்க.  கௌஷிக்கும் கௌரியை பார்க்காம இருக்க முடியாம கல்யாணத்துக்கு முன்னாடி சென்னை வந்துட்டான்). சென்னை வந்தபின் அமெரிக்காவில் விட்ட வேலையை இங்கு தொடர்ந்தான் ஹரி.  அதுதான் ஸ்வேதாவை pickup அண்ட் drop செய்வது.   பகலில் ஸ்வேதாவிற்கு  வேலை இருந்தால், மாலையில் ஹரி அமெரிக்க நேரப்படி வேலை செய்வதால், ஆறு மணிக்கு மேல் அவன் பிஸியாகி விடுவான்.   அதனால் காலையில் அவள் அலுவலகம் செல்லும் நேரம் மட்டுமே இருவரும் சேர்ந்து செலவழிப்பது.  ஷாப்பிங் கூட இருவரும் சேர்ந்து செல்ல முடியாத நிலை.  அதனால் கல்யாணத்தன்று உடுத்தும் துணிமணிகள் தவிர மற்ற அனைத்தையும் தனித்தனியாக சென்று வாங்கி முடித்தார்கள்.

“ஹரி, இன்னைக்கு உனக்கு ஏதானும் வேலை இருக்கா?”

“இல்லைமா சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் ஃப்ரீதான்.  அதுக்கப்பறம் வரிசையா மீட்டிங் இருக்கு”

“சரி நீ சாப்பிட்டு தூங்கி எழுந்த உடனே மாமாவாம் வரைக்கும் போயிட்டு வந்துடலாமா? பாட்டி பார்க்கணும்ன்னு சொன்னாளாம்”

“சரிம்மா.  ஒண்ணும் பிரச்சனை இல்லை.  வேணும்ன்னா நாம திரும்ப வர்றச்ச பாட்டியைக் கூட்டிண்டு வந்துடலாம்”

“பாக்கலாண்டா.... இங்க வந்தா பாட்டிக்கு  ரெஸ்ட் எடுக்கறதெல்லாம் கஷ்டம்.  அங்கன்னா ரெண்டு வேலை செய்வா... கொஞ்ச நாழி படுத்துப்பா.  இங்க அப்பா இருக்கான்னு உக்கார்ந்துண்டே இருப்பா”

“சரிம்மா நாம ஒரு ரெண்டு மணிக்குக் கிளம்பலாம்”, ஹரியும், ஜானகியும் பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டுத் தொலைபேசி அழைத்தது.

“ஹலோ ஜானகி பேசறேன்......”

“.................”

“ஓ சந்தோஷம் எப்படி இருக்கேள்.....”

“..............................”

“அப்படியா......... எப்போ வந்தேள் ஊருலேர்ந்து.....”

“...............................”

“அடுத்த திங்கக்கிழமை வரேளா...... நீங்க வர்றது ரொம்ப சந்தோஷம்.......”

“..........................”

“கண்டிப்பா....... அவரண்ட சொல்லிடறேன்.......”, தொலைபேசியை அதன் தாங்கியில் வைத்த ஜானு மாமி முகத்தில் ஏகப்பட்ட அதிர்ச்சியைக் காட்டியவண்ணம் சோஃபாவில் அமர்ந்துவிட்டாள்.

“அம்மா.... அம்மா.... என்ன ஆச்சும்மா.....  ஃபோன்ல யாரு...... யாருக்கானும் உடம்பு சரியில்லையா.....”, ஹரியின் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல், அவனிடம் தண்ணீர் கொண்டு வரும்படி சைகையில் சொன்னாள்.  ஹரி அடுக்களை சென்று தண்ணீர் கொண்டு வந்து தரும்வரை ஜானு மாமி சிலையென அமர்ந்திருந்தார். 

தண்ணீர் குடித்து தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஜானு ஹரியைப் பார்த்து, “டேய் ஹரி, அம்மங்கா பாட்டி கல்யாணத்துக்காக அடுத்த வாரமே வராளாம்டா”

“என்னது அத்தனை சீக்கிரமா..... ஏம்மா அவாதான்  ஏதோ க்ஷேத்ராடனம் போய் இருந்தாளே.....”

“ஆமாம்டா.... எல்லாத்தையும் முடிச்சுண்டு வந்துட்டாளாம்.  இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கு ஃப்ரீதானாம்.... அதனால முன்னாடியே வந்துடறேன்னு சொன்னா......”

“இப்போ என்னம்மா பண்றது.........”

“நேக்கு வயத்துல புளியைக் கரைக்கறதுடா ஹரி...... நான் பக்கத்துல கோவிலுக்கு போயிட்டு வந்துடறேன்......”, ஜானு மாமி அம்மங்காவின் வரவு நல்வரவாக வேண்டும் என்ற வேண்டுதலுடன் பக்கத்தில் இருந்த கோவிலுக்கு சென்றார்.

அப்படியே ஒரு டாக்ஸியைப் பிடிச்சு வேளச்சேரி போலாம் வாங்க.

“ஏன்னா,  உங்க சித்தப்பாவோட ரெண்டாவது புள்ளைக்கு பத்திரிகைக் கொடுக்க நேர்ல போகணுமா.... இல்லை போஸ்ட் பண்ணிடலாமா..... என்ன சொல்றேள்......”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.