(Reading time: 9 - 17 minutes)

டேய்.. என்னடா இது.. இவ்ளோ சின்ன பசங்க கிட்ட போய் இப்படி யோசிக்கிறீங்க.. நான் ஏதோ உங்க கூட படிக்கிறவங்க .. இல்லை உங்களுக்கு முந்தின வருஷம் படிக்கிறவங்கன்னு நினைச்சேன்.. நல்லவேளை .. நான் அவங்க கொஞ்சம் பேசி இருந்தாலும் என் பேரனை கட்டிக்குறியான்னு கேட்ருப்பேன்”

“தாத்தா... எங்களைப் பத்தி எதுவும் சொல்லிட்டியா என்ன.. ?”

“இல்லைடா.. அவங்கதான் எஸ்கேப் ஆகிட்டாங்களே.. ஆனால் இப்போ யோசிச்சா நான் தான் எஸ்கேப் ஆயிட்டேன்னு தோணுது... ஜஸ்ட் மிஸ் டா.. இல்லாட்டி எதாவது பிரச்சினை ஆகி இருந்ததுன்னு வச்சிக்கோ உங்க பாட்டி என்னை போட்டு தள்ளியிருப்பா..”

“சப்பா.. நல்லவேளை.. தப்பிச்சோம்..” எனும்போது, ரயில் கிளம்புவதற்கான முதல் விசில் வர,

“சரி தாத்தா நாங்க கிளம்புறோம்” என்றனர்.

“டேய்.. என்னடா செய்ய போறீங்க.. ? எல்லோரும் ஒன்னாதானே இருந்தீங்க...அவங்களை பத்தி தெரிஞ்சுக்க முடியலையா?”

“இல்லை தாத்தா.. அந்த வருண் அவன பத்தி சொல்லும்போது நான் அங்கே இல்லை.. ஊர் பெரியவங்களோட மீட்டிங் இருந்தது.. லீடர் என்ற முறையில் என்னையும் அங்கே வர சொல்லிடாங்க.. “

“சரிடா.. உங்க மாஸ்டர் கிட்ட கேட்டா எந்தெந்த ஸ்கூல் கலந்துகிடாங்கன்னு தெரியும்லே..?”

“நானும் அப்படிதான் யோசிச்சேன்.. இப்போ எதுவும் வேண்டாம்னு தோணுது.. நீங்க சொல்றபடி பார்த்தா வருண் அவங்கள லேசிலே நெருங்கவிடமட்டான்.. அவன் பாட்டுக்கு காலேஜ்ல வந்து சண்டை போட்டுட்டா அசிங்கம்.. நான் chairman வேற... அது students பிரச்சினையா மாறிடும்.. அதோட சுபாவோட பேரும் பாதிக்கும்.. அதனால் இப்போதைக்கு எதுவும் கண்டுக்க வேண்டாம்..” என்று முடித்தான்..அர்ஜுன்..

மிதுனோ “அப்போ அவங்க நமக்கு இல்லைன்னு சொல்றியா அர்ஜுன்? எனக்கு என்னமோ அப்படி நினைக்க பிடிக்கல.. மகிமாதான் என் வருங்கால மனைவின்னு அழுத்தமா பதிஞ்சு போச்சு..அத மாத்த முடியுமா?”

“டேய்.. மாத்த சொல்லலடா.. கொஞ்சம் நாள் தள்ளி போட சொல்றேன்.. என்னோட லட்சியம் மிலிடரிலே சேரனும்.. அதுக்கு தயாராக வேண்டிய வேலைகளே.. நிறைய இருக்கு.. இதில் நாம இவங்களுக்கும் நேரம் ஒதுக்கினா நம்மாலே சாதிக்க முடியாது.. ஒரு ஐந்து வருஷம் கழிச்சும் நமக்கு இவங்க நினைவு நமக்கு இருந்ததுன்னா நாம அப்போ ஸ்டேப் எடுப்போம்.. “ என,

“சபாஷ்டா.. பேராண்டி.. இது நல்ல முடிவு..” என்றார் தாத்தா..

ஆனால் ஏனோ மிதுனால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.. அர்ஜுனிடம்

“நீ சொல்வது சரிதான்.. ஆனால் ஐந்து வருஷத்தில் அவர்கள் வேறு இடத்தில் மனதை செலுத்தி இருந்தால் என்ன செய்வது..? அதற்கு இப்போதே நாம் அவர்களை பற்றி விவரங்கள் தெரிந்து கொண்டால் நம் மனம் பற்றி சொல்லாவிட்டாலும் அவர்கள் வேறு யாரிடமும் மனதை விடாமல் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா.. ?’

“டேய் ..ஸ்டுபிட் மாதிரி பேசாதே.. அவர்களை நம் வருங்கால துணைகள் என்று எண்ணியிருக்கிறோம்.. நீ சொல்வது மாதிரி follow செய்தால், பின்னாடி அவர்களுக்கு இது தெரியவந்தால், அவர்களை சந்தேகப்படும் எண்ணம் கொண்டவர்களாக நாம் தெரிவோம்..”

“இப்போ என்னடா செய்வது.. ?”

“ஒன்றும் இல்லை.. நம் வாழ்வின் இலட்சியத்தை நோக்கி நாம் செல்வோம்..ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் அவர்கள் நம் கண்ணில் படும்போது அவர்களிடம் நம் மனதை சொல்வோம்..”

“டேய்..அவங்கள சந்திப்போம் என்பது என்ன நிச்சயம்..?”

“எனக்கு என் உள்ளுணர்வு மீது நம்பிக்கை இருக்கிறது..” என்றான் அர்ஜுன்..

தாத்தா “நீ சொல்றது கரெக்ட் அர்ஜுன்.. இப்போதைக்கு இது வெறும் attraction ஆக கூட இருக்கக் கூடும்.. அதை நீங்கள் தெரிந்து கொள்ள இந்த அவகாசம் தேவை தான்.. சரி கிளம்புங்கள்.. “ என்று வழி அனுப்பி வைத்தார்.

ராகுலிடம் நடந்ததை சொல்லிக் கொண்டிருந்தான் அர்ஜுன் .. இடையில் இப்போது குறுக்கிட்டு “ஏண்டா.. நானும் உங்களோட பெஸ்ட்friend தான.. எங்கிட்ட ஒன்னும் சொல்ல கூட இல்லியே.. மிதுன் நீ கூடவா..  ”

மிதுன் “ இல்லடா.. அர்ஜுன் சொன்ன மாதிரி இது சின்ன விஷயம் இல்லே.. எங்கே ரெண்டு பேருக்கும் அந்த atraction காதலா மாறி இருந்தா சொல்லியிருக்கலாம்.. அத பத்தின தெளிவு எங்களுக்கே வர கொஞ்ச நாள் ஆச்சு.. அப்பவும் அவங்களுக்கு எதுவும் தெரியாது என்னும்போது யாருக்கும் சொல்ல விருப்பமில்லைடா.. அதா.. மச்சான்.. சாரி டா”

“சரி .. அது இருக்கட்டும்.. அதுக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் சுபா , மகிய பார்த்ததே இல்லியா..? என்றான் ராகுல்..

“இல்லடா.. இப்போதான் ஆறு மாசத்துக்கு முந்தி நான் மூணு பேரையும் மாயா சாலில் பார்த்தேன்.. ஆனால் அன்னிக்கு எனக்கு செம கோவம் டா...அப்பவும் இந்த மூனும் காங் சேர்த்து சுத்துறது போதாதுன்னு.. இன்னும் ஆட்டமும் ஜாஸ்தி ஆயிடுச்சு.. அதோட அவங்கதான்னு confirm பண்றதுக்குள்ளே அவங்க போய்ட்டாங்க... “ என்றான் மிதுன்.

“அதுக்கு அப்புறம் அவங்க எல்லோரையும் சென்ட்ரல் ஸ்டேஷன் லே பார்த்துட்டு.. என்ன சொன்னான் தெரியுமா.. இந்த பக்கி?’ என அர்ஜுன் வினவ,

ராகுல் “என்ன சொன்னான் ?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.