(Reading time: 8 - 16 minutes)

08. சிவன்யா - ஆதித்யா சரண்

Shivanya

"வீடு எப்போ ரெடி ஆகும் அர்ஜூன்?"-அந்த கட்டிட வடிவமைப்பாளரிடம் வினவினான் அசோக்.

"அல்மோஸ்ட் முடிந்துடுச்சி சார்.இன்னும் ஒரு மாசத்துல முடிந்திடும்!ஒரு மாசத்துல சாவியை தந்துடுறேன்!"-புன்னகைத்தப்படி கூறினான் அவன்.

"டேக் யுவர் ஓன் டைம்!பட்,நல்லப்படியா முடித்து தா!"

"ஓ.கே.சார்!வீடு யாருக்காக சார்?"

"ஏன் கேட்கிற?"

"இல்லை..பார்த்து பார்த்து கட்டுறீங்களே அதான்!"

"ம்..யாரா இருப்பாங்கன்னு நினைக்கிற?"

"அம்மாக்கா?எனக்கு தெரிந்து நீங்க ரொம்ப சென்டிமண்ட்டான ஆளாச்சே!"

"அம்மாவா?ம்...அப்படியும் சொல்லலாம்!"-என்றான் புன்னகைத்தப்படி!!

"சரிங்க சார்..நான் கன்ஸ்ட்ரக்ஷன் வேலையை பார்க்கிறேன்!"

"கேரி ஆன்!"-அர்ஜூன் சென்றுவிட,அமைதியாக அந்த இல்லத்தை பார்த்தான் அசோக்.

"இது அவளுக்கு பிடிக்குமா?"-என்று வினவியது அவன் மனம்.

அவன் மெதுவாக நடந்தான் ஒவ்வொன்றையும் பார்த்தப்படி!!

மெல்ல அந்த அறைக்குள் நுழைந்தான்.

திருமணத்திற்கு பின்,அவர்கள் வாழ வேண்டும் என்பதற்காக தனித்துவமாக கட்டப்பட்ட அறை அது!!மொத்தமாக,சிவன்யாவின் விருப்பத்திற்காக கட்டப்பட்டிருந்தது!!

"எல்லாம் உனக்காக!"-சுவரில் மாட்டப்பட்டிருந்த சிவன்யாவின் புகைப்படத்தை பார்த்து கூறினான் அசோக்.அச்சமயம் மென்மையான தென்றல் அந்த அறை முழுதும் பரவியது.அவனது பின்கழுத்தில் இதமாக வருடியது ஒரு மென்மையான கரம்.சட்டென திரும்பினான்.அழகிய வெளிர் நிற புடவையில் சிவன்யா நின்றிருந்தாள்.ஆனால்,அது உண்மையில் அவனுடைய பிரமை!!

அவளது உருவத்தை பார்த்தவனின் மனதில் ஏராளமான மாற்றங்கள்.

"மதி?"-அவள் புன்னகைத்தப்படி அவனருகே வந்தாள்.மெல்ல தன்னை நெருங்கியவளை தீண்ட அவன் முற்படுகையில் அவளது பிம்பம் மறைந்தது.

"மதி!"-மனதில் ஒரு வித தடுமாற்றம்.தனது தலையில் தட்டிக்கொண்டு அந்த அறையை விட்டு புறப்பட்டான் அசோக்.

ன்றிரவு...

நண்பர்கள் நால்வரும் அசோக்கின் வீட்டில் திரண்டனர்.அவனை தவிர,மற்ற மூவரும் நன்றாக மதுவை அருந்தி இருந்தார்கள்.

"டேய் போதும்டா!எவ்வளவு தான் குடிப்பீங்க?"

"பாருடா!இங்கே பாரு..!உனக்கு பிடிக்கலைன்னா சும்மா இரு.எங்களை ஏன் டிஸ்டர்ப் பண்ற?"

"திருத்தவே முடியாது."

"டேய் மஹீ!உன்கிட்ட என் உயிர் நண்பனை பற்றி முக்கியமான விஷயம் சொல்லணும்டா!"-குண்டை தூக்கி போட்டான் கார்த்திக்.

"என்னடா?"

"அதாவது நம்ம அசோக்...நம்ம தங்கச்சி சிவன்யாவை.."-அவன் பேச வந்ததும் சட்டென அவனது வாயை பொத்தினான் அசோக்.

"சிவன்யாவை?"

"விடுடா..!"-என்று அவனது கையை உதறினான் கார்த்திக்.

"நம்ம சிவன்யாவை லவ் பண்றான்டா!"-என்று கூறிவிட்டு ஒரு மதுவை எடுத்துக் கொண்டு மற்ற நண்பர்கள் இருவரும் சென்றுவிட்டனர்.அதைக் கேட்டதும் மகேஷின் முகம் இறுகியது.அசோக் பதற்றமாக மகேஷை பார்த்தான்.

நீண்ட நேரம் அமைதியாக இருந்தனர்.அந்த அமைதியை பலமாக சிரித்து கலைத்தான் மகேஷ்.

"டேய்!"-அசோக்கின் மனதில் ஒருவித பயம்.

"உனக்கு வேற ஆளே கிடைக்கலையா?"-அவனது கேள்வி அசோக்கை மேலும் குழப்பியது.

"என்ன சொல்ற நீ?"

"சிவன்யா வேணாம்!"

"ஏன்?"

"அவளை நானே கொஞ்ச நாள்ல தூக்கி போட போறேன்!"

"டேய்!என்னடா உளர்ற?"-கோபத்தில் கத்தினான் அவன்.

"இத்தனை நாள் அவளை பாசமா வளர்த்தேன்னு பார்த்தியா?"

"............"

"முட்டாள்..!அவளை பாசமா வளர்த்ததுக்கு காரணம் எங்க அப்பா அவ பேர்ல எழுதி வைத்த சொத்து!"

"..............."

"சிவன்யா உண்மையிலே என் கூட பிறந்தவ இல்லை.அது தெரியுமா உனக்கு?"

"............."

"எங்கம்மா நான் பிறந்த போதே போயிட்டாங்க!அதுக்கு அப்பறம்,என் அப்பா இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு!அவங்களுக்கு பிறந்தவ தான் சிவன்யா.எனக்கு அவங்களை சுத்தமா பிடிக்காது!ஏதோ,அவ பிறந்த அப்பறம் தான் முன்னேற்றம் வந்ததாம்!உடனே,தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பிச்சிட்டார்!"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.