(Reading time: 9 - 17 minutes)

13. பைராகி - சகி

bhairagi

நிலா முற்றத்தில் நின்றப்படி இயற்கையின் அழகை பருகிக் கொண்டிருந்தாள் யாத்ரீகா.விழி இரண்டை இயற்கை தனதாக்கிக்கொள்ள மனதை இளவரசரின் நினைவுகள் தனதாக்கிக் கொண்டன.

தன்னையே அறியாமல் புன்னகைத்தாள்.மனதின் சலனத்தை யாரிடம் கூறி தெளிவுப் பெறுவது??தாயின் அருகாமையும் இழந்தவள் அவள்.இறைவனை தவிர வேறு துணை இல்லாதவள்!!ஆதலால்,கேள்விக்கான விடையை கூறுவது இறைவனின் கடமையாகிப் போனது!!

"எனது வினாவிற்கு விடை கூற கைலாசநாதரால் மட்டுமே இயலும்!"-அக்கன்னிகையின் மனம் கூற யாத்ரீகா உடனடியாக ஆலயம் நோக்கி பயணம் மேற்கொண்டாள்.

செல்லும் வழியில்...

"சகி!"-பிருந்தாவின் குரல் அவளை தடுத்தது.

"இவ்வளவு அவசரமாக எங்கு செல்கிறாய்?"

"மனம் கெடுத்த சலனம் ஒன்றை தீர்க்க இறைவனின் அனுகிரகத்தை நாடி ஆலயம் செல்கிறேன்!"

"சலனமா?"

"ஆம்..வினா எதுவும் எழுப்பாதே!நான் விரைந்து வந்து விடுவேன்!"

"ஆனால்..பொழுது சாயும் சமயம் நெருங்கிவிட்டதே!இச்சமயம் நீ தனித்து எவ்வாறு செல்வாய்!"

"நம்பிக்கைக் கொள்!நான் விரைந்து இவ்விடம் திரும்புவேன்!"

"காத்திருக்கின்றேன்!"-யாத்ரீகா உடனடியாக விரைந்தாள்.

குளக்கரையை கடந்து அவள் செல்கையில்...

"கன்னிகையே சற்று நில்!"-என்று ஒருவர் தடுத்தார்.

"நீ சேனாதிபதி புதல்வியல்லவா?இச்சமயம் எங்கு செல்கிறாய்?"

"நான்...நான்..."

"நீ ஆலயத்திற்கு செல்கிறாய் என்றால் தயை கூர்ந்து அவ்விடம் செல்ல இது சமயம் அல்ல!"

"காரணம் என்ன சகோதரரே!"

"நீ விவரம் அறியவில்லையா?நதியின் ஓட்டம் உக்கிரமாக உள்ளது!இச்சமயம் அவ்வழி நீ பயணப்படுவது உசிதமல்ல!"

"உக்கிரமாக உள்ளதா?"

"ஆம்..!கடந்த சில தினங்களாய் பைரவக்கோட்டையின் விதி மோசமாக உள்ளது!ரிஷி போதரும் அவ்வாறே கூறியுள்ளார்.அதற்கேற்றார் போல் இயற்கையும் சீறுகிறது!நீ ஒன்றை அறிவாயா?ரிஷி போதர் இளவரசர் ஆதித்யரால் பைரவக்கோட்டைக்கு ஆபத்து நேரும் என்று உரைத்தாராம்!'

"என்ன?"

"ஆம் மகளே!நானும் ஜோதிடன்!சோழியும் அவ்வாறே கூறுகிறது!பைரவக்கோட்டையின் எதிர்காலம் என்ன என்பதே புதிராக உள்ளது!"

"..............."

"நீ திரும்பிச் செல்!"

"நன்றிகள்!"-அவர் சென்றுவிட்டார்.

யாத்ரீகையின் மனம் மேலும் குழம்பி போனது.

"இளவரசரால் இம்மண்ணிற்கு கேடா?தன் பிரணனை போக்கியும் இம்மண்ணை காப்பேன் என்று சபதம் செய்தவர் அல்லவா அவர்!எவ்வாறு இது சாத்தியம்?அப்படியென்றால்..."

"நான் தமது வேண்டுதலை ஏற்கிறேன் மாதா!இளவரசர் குருக்ஷேத்திரரை விவாஹம் புரிய எனக்கு சம்மதமே..!"-காளிங்க தேச இளவரசியின் சம்மதத்தால் திடுக்கிட்டார் காத்யாயினி தேவி!!

"அப்படியென்றால் போதரின் யாசகத்தை எவ்வாறு நிறைவேற்றுவேன்?"-மனதில் எண்ணினார்.

"மாதா!"

"ஆ..மகிழ்ச்சி மகளே!உடனடியாக தங்களின் விவாஹத்திற்கான ஏற்பாடுகளை புரிகின்றேன்!நன் முகூர்த்தத்தில் தங்களின் மங்கல நிகழ்வு பிரம்மாண்டமாய் நிகழ்த்தப்படும்!!"-இளவரசியின் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை.

க்கரவர்த்தினி சென்றதும் கண்ணீர்விட்டு அழுதாள்.

மனதின் ஈடேறா இச்சைகள் அவளை பலவீனமாக்கின.

"நான் ஏன் இவ்விவாஹத்தை ஏற்க வேண்டும்?குருக்ஷேத்திரன் மீது எனக்கு எவ்வித ஈடுப்பாடும் இல்லை...

நான் மனமார விரும்பியதோ இளவரசர் ஆதித்யரை..!அவரே பதியாக வேண்டும் என்று பிராத்தனை செய்தேன்!சர்வ லட்சணங்களும் பொருந்திய அவ்வாண் மகனுக்கு பத்தினியாக வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது...ஆனால்,இன்று நானே இவ்விவாஹத்தை ஸ்வீகரித்துள்ளேன்!"-மனம் உடைந்து கண்ணீர் வடித்தாள்.

சில நொடிகள் சென்றிருக்கும்..

கண்ணீர் சிவந்த கண்கள் சிவந்துப் போயின!வஞ்சத்தினால்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.