(Reading time: 9 - 17 minutes)

"ளவரசர் புகழ் ஓங்குக!காளிங்க தேசத்து இளவரசி தம்மை காண விரும்பி தம்மை அரண்மனை நந்தவனத்தில் சந்திக்க அனுமதி வேண்டுகிறார்!"

"விவாஹத்திற்கு முன்னால் வதுவும்,வரனும் தனிமையில் சந்திக்கலாகாது!"-என்றான் பார்த்திபன்.

"ம்...அனுமதி அளித்ததாக கூறு!இரண்டு நாழிகையில் அவ்விடம் வருகிறேன்!"

"உத்தரவு..!"

"ஆனால் மித்திரா!"

"அஞ்ச வேண்டாம்..!ஏதும் நேராது!"

ரண்மனை நந்தவனம்....

தனிமையில் நின்றப்படி எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள் காளிங்க தேச இளவரசி!!

"தேவி!"-குரலில் ஒரு வித கிரக்கத்தோடு அவளை அழைத்தான் குருக்ஷேத்திரன்.

"பணிகிறேன் இளவரசே!"

"எனை காண அனுமதி வேண்டியதன் காரணம் என்ன தேவி?"

"நான் தம்மிடம் மூன்று வரங்களை நமது விவாஹத்திற்கு முன் பெற விருப்பம் கொண்டேன் ஐயனே!"

"கூறு!நீ வேண்டுவது யாதாயினும் நிறைவேற்றுவது எனது சித்தம்!"

"ஐயனே..!"

"தயங்காமல் கேள்!"-பெருமூச்சுவிட்டவள் தொடர்ந்தாள்.

"நான் தமது பட்டமகிஷி ஆகவேண்டுமாயின் தாமே பைரவக்கோட்டையின் மன்னராக பொறுப்பேற்க வேண்டும்!"

"இதில் என்ன சந்தேகம்?நானே என் தந்தைக்கு பின் முடிச்சூடுவேன்!"

"ஆனால்,சுதந்திர உரிமை பெற்ற பிரஜைகள் தமது அநுஜன் ஆதித்யர் மன்னராக வேண்டி போராடலாம் அல்லவா!"-அவனது மனம் துணுக்குற்றது.

"அதுவும் சாத்தியம் அல்லவா!"-அவன் மனம் குழம்பினான்.

"அடுத்த வரம் என்ன?"

"சேனாதிபதியாரின் புதல்வி யாத்ரீகை எனக்கு சேவை செய்யும் தாதியாக நியமிக்கப்பட வேண்டும்!"-குருக்ஷேத்திரன் கூர்மையாக அவளை பார்த்தான்.

"வேறு?"

"எனது முதல் வேண்டுதலில் இடையூறு ஏற்படாமல் இருக்க!தமது அநுஜன் துறவறம் மேற்கொள்ள வேண்டும்!"-இதை அறிந்த காரணத்தினால் தான் போதர் அவ்வரங்களை வேண்டினாரா??

ஆதித்யர் துறவி ஆவதால் பைரவக்கோட்டையின் தலையாய பாதுகாப்பு தகர்க்கப்படும் அல்லவா!எனில்,அது அவனால் விளையும் நாசம் தானே!!

"உனது வேண்டுதலை ஏற்கிறேன்!அவை விரைவிலே ஈடேறும்!"-தையலின் மேலிருந்த மையலால் சிந்திக்காமல் வாக்களித்தான் குருக்ஷேத்திரன்.

"இந்த எண்ணம் கொள்ள எவ்வாறு துணிந்தாய் மூடனே!இயலாது...எனது புதல்வன் துறவறம் மேற்கொள்ள மாட்டான்!"-சீறினார் காத்யாயினி.

"தமது கருவில் உதித்தவன் நானே மாதா!"

"இன்று அதை எண்ணி நாணம் கொள்கிறேன் துஷ்டனே!துஷ்ட எண்ணம் கொண்ட ஒருவன் எவ்வாறு எனது கருவில் உதித்தான்?"-நடந்தவற்றை கேட்ட அரசர் அரியாசனத்தில் தளர்ந்துப் போய் அமர்ந்தார்.

"என் முகம் நோக்காதே!எனது விழிக்கொண்ட சினத்தினால் நீ பஸ்பமாகி விடுவாய்!பெற்ற நானே உனை வதைப்பதற்குள் அரண்மனையை தியாகம் செய்து புறப்படு!முடிச்சூட போவது ஆதித்யனே!அவன் மனம் கவர்ந்த ஒருத்தியே அவனுக்கு பட்டத்துமகிஷியாக போகிறாள்!நீயும்,உன் மனம் கவர்ந்தவளும் ராஜ வாழ்வை தியாகித்து வனவாசம் செல்லுங்கள்!"

"மௌனமாகுங்கள் தாயே!"

"..................."

"ஈன்ற கடனை யான் மறக்கும் அளவு எனை கொண்டு செல்லாதீர்கள்!எனது வேண்டுதல் நிறைவேறவில்லை எனில்,நான் நமது சத்ருவான காபாலிகர்கள் மூலம் நகரத்தை நிர்மூலமாக்குவேன்!சுரங்கப்பாதையை அவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் மூலம் பைரவக்கோட்டையை எனதாக்குவேன்!தமது ஆருயிர் புதல்வனையும் மண்ணில் சாய்ப்பேன்!நினைவில் கொள்ளுங்கள்!"-உக்கிரமாய் கூறிவிட்டு நடந்தான் குருக்ஷேத்திரன்.

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:969}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.