(Reading time: 9 - 18 minutes)

14. பைராகி - சகி

bhairagi

ரையில் நின்றப்படி நதியின் ஓட்டத்தினை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் இளவரசர்.அதன் ஓட்டம் எதையோ அவருக்கு சொல்லாமல் சொல்லியது!!குனிந்து நதி நீரை தொட்டுப் பார்த்தார்.என்றுமே இல்லாத குளிர்ச்சி!!காரணம் புரிய மறுத்தது.

"நதியின் நீர் வழக்கத்திற்கு மாறாக குளுமை கொண்டிருக்குமாயின் இயற்கை எதன் மீதோ கோபம் கொண்டிருக்கிறது என்பது பொருள்!"-யாத்ரீகையின் கூற்று நினைவ வந்தது.சிறுவயதில் மழை அதிகம் பெய்து பயிர்களை அழுக செய்வதற்கு முன் அவள் எச்சரித்த நிகழ்வு!தேவி மித்திரை அவளது கூற்றை ஆமோதிக்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு நகரம் காப்பாற்றப்பட்டது.

இன்றும் அதே குளுமை!!மன்னரிடம் இதுக்குறித்து உரையாட வேண்டும்!!

அச்சமயம் அஸ்வம் ஒன்று கனைக்கும் சப்தம் கேட்டது.

"வா மித்திரா!உனை தான் எதிர்நோக்கி இருந்தேன்!"-என்றப்படி எழுந்தார் ஆதித்யர்.

"அளித்தப்பணியை நிறைவேற்றினாயா?"

"................."

"கூறு!யாத்ரீகை இரு தினங்களாக இங்கு வராததன் காரணம் என்ன?"-அது தனது ஒரு காலை நதியினுள் விட்டது.

"நதியின் ஆக்ரோஷத்தாலா?"-அது தலையசைத்தது.இளவரசர் புன்னகை பூத்தார்.கரையில் மெல்ல அமர்ந்தார்.தேஜாவும் கால்களை மடக்கி அமர்ந்தான்.

"என்ன கூறுவேன் அப்பேதையை பற்றி?அவளை காணாது தினந்தினம் தவித்துக் கொண்டிருக்கிறேன்!அவளோ எந்த நதி எங்களது அன்பை பிணைத்ததோ அதையே காரணமாக்கி  எனை விலக்குகிறாள்!"

"................."

"யாரிடமும் சஞ்சலம் கொள்ளாத மனம் இது!!ஆனால்,இன்றோ அவளது அருகாமையை யாசிக்கிறேன்!எனது தாய்மார்கள் இருவரின் அன்பையும் ஒருசேர எனக்களித்தவள் அவள்!எனக்கொன்று என்றால் துடித்துப்போவாள்!எனை நிமிர்ந்துப் பார்க்க மாட்டாள்,ஆனாலும்,என்னிடம் உரிமை எடுக்க தயங்க மாட்டாள்.வாலிபம் தொலைந்து வயோதிகம் வந்தாலும் அவள் மேல் நான் கொண்ட அன்பு கரையும் என்று தோன்றவில்லை!அவளிடம் எனது எண்ணத்தை கூறவும் சமயம் தோன்றவில்லை.தாயிடம் விரைந்து இதுக்குறித்து வினவ வேண்டும்!அவர்களே எனது எண்ணத்தை என் மனதின் சக்கரவர்த்தினியிடம் விளக்கட்டும்!"-கண்களில் மிளிர்ந்த காதல் அவர் மனதினை விளக்கியது.

சில மணி நேரங்கள் சென்றிருக்கும்..

"மகனே..!"-என்ற குரலில் கலைந்தார் இளவரசர்.

"மாதா!"-தேவி மித்திரை தனது புதல்வனை காண வந்திருந்தார்.

அவரது முகத்தில் என்றுமில்லா சோகம்!!

"மாதா!தாம் எப்போது வந்தீர்கள்?கூறி இருந்தால் தமை காண நான் வந்திருப்பேன் அல்லவா!"

"யாசகம் வேண்டி நிற்பவள்,சுவாமியின் இல்லம் தேடி வருவதே உசிதமல்லவா?"

"யாசகமா?"

"உன்னிடம் யாசகம் வேண்டி வந்திருக்கிறேன் மகனே!உனை ஈன்றவளுக்கு வரமளிப்பாயா?"-இளவரசர் ஒரு காலை மடித்து அவர் முன் மண்டியிட்டு கரம் கூப்பினார்.

"ஆணையிடுங்கள் தாயே!"-தேவியின் கண்களில் கண்ணீர் பீறிட்டது.அவர் இளவரசரை எழுப்பி தன் மார்போடு அணைத்துக்கொண்டார்.

"என்ன நேர்ந்தது தாயே!தமது மனதின் வேதனைக்கு காரணம் என்ன?தாம் யாதாயினும் அதனை கூறுங்கள்.."

"மகனே..!பைரவக்கோட்டையின் யுவராஜ பதவியை நீ தியாகிக்க வேண்டும்!"-இளவரசர் திடுக்கிட்டார்.

"மாதா!"

"செய்வாயா?"

"அவசியம் செய்கிறேன் தாயே!பதவி மீது என்றும் பற்றுதல் இல்லாதவன் நான்!நான் வாழ இந்நதிக் கரையில் சிறு குடிலே போதுமானது!இதற்காகவா,தாம் வருத்தம் கொண்டீர்கள்?"

"மோகம் கொள்ளாதவன் நீ என்பதை அறிவேன் மகனே!எனக்கு மற்றொரு வரமும் நீ அளிப்பாயா?"

"கூறுங்கள்..!"

"நீ கூடிய விரைவில் பந்த பாசம் அறுத்து துறவறம் மேற்கொள்ள யாசிக்கிறேன்!"-இளவரசர் அதிர்ந்துப் போனார்.விழிகள் கேள்வியோடு தனது தாயை நோக்கின.

"தாயே!"

"நாடி வருபவருக்கு வேண்டியதை வழங்கும் நீ!ஈன்றவளின் இச்சையை நிறைவேற்று மகனே!"-இளவரசரின் கண்களில் கண்ணீர் சுரந்தது.

மனதில் யாத்ரீகை குறித்த எண்ணங்கள் மேலோங்கின!!

மகாராணி தனது வஸ்திரத்தை யாசகம் வேண்டுவதை போல அவரிடம் நீட்டினார்.அதைக்கண்டு பதறியவன் அவரது கரங்களை தளர்த்தினான்.கண்ணீரோடு சரி என்று தலையசைத்தார்.தாயின் கண்களில் மீண்டும் கண்ணீர்!!அது சிந்தும் முன் அவனை மீண்டும் அணைத்துக் கொண்டார் அவர்.இளவரசரின் கண்களில் அவளது முகம் வந்து போனது!!இறுதியாக!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.