(Reading time: 9 - 18 minutes)

"வ்வாறு இக்காரியம் புரிந்தாய் மித்திரை!உனது புதல்வனது உணர்வுகளை அழிக்கும் அதிகாரத்தை யார் உனக்கு அளித்தது?"

"குருக்ஷேத்திரனும் எனது புதல்வன் அல்லவா!"-கண்ணீரோடு கூறினார் அவர்.

கனத்த மௌனம்...!!நீண்ட நேரமாய் ஏதும் பேசவில்லை யாரும்..!

"இயலாது..!"-மௌனத்தை கலைத்தார் சக்கரவர்த்தினி.

"குருக்ஷேத்திரனின் எண்ணம் என்றும் ஈடேறாது!ஆதித்யன் துறவறம் மேற்கொள்ள நான் என்றும் அனுமதி வழங்க மாட்டேன்!அரசாள போவது தர்மமாக வேண்டும்!

விவாஹ சமயம் கரம் நழுவிய அஸ்திரங்கள் மீண்டும் எனதாக துடிக்கின்றன..!"

"அக்கா!"

"ஏந்துகிறேன் அஸ்திரத்தை...குருக்ஷேத்திரன் நயவஞ்சகம் புரிந்தால் அவனை எதிர்த்து நான் அஸ்திரம் ஏந்துவேன்!போரானது தாய்க்கும் மகனுக்கும் அல்ல..தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நிகழட்டும்!"-ஆவேசமாக கூறிவிட்டு அவர் திரும்ப ஆதித்யர் நின்றிருந்தார்.

"மகனே...!"

"ஈன்றவனை கொன்று எனை அரசாள வைப்பது தர்மமாகுமா மாதா?"

".................."

"தமையனார் வீரம் மிக்கவர் அவர் எவ்வகையிலும் பிரஜைகளுக்கு குறை வைக்க மாட்டார்!"

"உன் விருப்பம் குறித்து சிந்தி மகனே..!"

"தமதானையே எனது விருப்பம் தாயே!இறைவன் அவனை நோக்கி எனை பயணம் மேற்கொள்ள ஆணை வழங்கியுள்ளான்.ஆதலால் தான் தம்மிடமும் தந்தையிடமும் வரம் பெற்ற போதர் தாயிடம் அவ்வரத்தினை வாங்க மறந்தார்!"

"..................."

"எனக்கும் யாத்ரீகைக்குமான பந்தம் ஜென்ம  ஜென்மமான பந்தம்!இப்பிறப்பினில் இல்லை என்றாலும் இனி எடுக்கும் பிறவி அனைத்திலும் அவளே என் சதியாவாள்!உடலுக்கும் உயிருக்குமான பந்தம் மேனிக்கும்  வஸ்திரத்திற்கான பந்தம் போன்று என்று தாமல்லவா கீதை போதித்தீர்கள் எனக்கு?"

"மகனே..!"

"நாளைய பொழுது நானும் ஆன்மாவோடு ஆன்மாகவாக மாற போகிறேன் தாயே!தயை கூர்ந்து சினம் தணியுங்கள்!"

".................."

"அஞ்ச வேண்டாம்..!ராஜ்ஜியத்தை தியாகம் செய்வேன்!அஸ்திரத்தை தியாகிக்க மாட்டேன்!பைரவக்கோட்டைக்கு நான் என்றும் பாதுகாவலனாவேன்!"

"இதற்கு நான் அனுமதி வழங்க மாட்டேன்!"

"அதை நாடியே இங்கு வந்தேன் தாயே!

எனக்கு அனுமதி தாருங்கள்.இனி வேறு உபாயமில்லை.அளித்த வாக்கினை மீறியவன் காத்யாயினியின் புதல்வன் என்ற சொல் என் மீது விழாமல் ரட்சித்தருளுங்கள்..!"-இருகரம் கூப்பி வேண்டினார் இளவரசர்.

"எவ்வாறு நான் அப்பணி ஆற்றுவேன்!இறைவா...ஏன் இந்த சோதனை?"-மனமுடைந்து மண்ணில் அமர்ந்து அவர் வடித்த கண்ணீர் கல்மனதையும் கரைத்திருக்கும்!!இளவரசர் முகம் இன்பத்தை தொலைத்திருந்தது.தாயின் முன் கண்ணீர் வடிக்க அவர் விருப்பம் கொள்ளாமல் மனதை கல்லாய் மாற்ற பெரும்பாடு பட்டார்.

"தாயே!"

"..............."

"அனுமதி வழங்குங்கள்!"-சக்கரவர்த்தினி அவரை உற்றுப் பார்த்தார்.

"பல ஜென்மங்களாய் பெரும் பாவம் புரிந்தவள் நான்!அதனால் தான் உனை போன்ற ஒரு பாக்கியத்தினை என்னால் என் கருவினில் சுமக்க இயலவில்லை!"

"நான் என்றும் தமது புதல்வனே தாயே!"

"வருடங்கள் உருண்டோடி,மண்ணில் நான் சாய்ந்து எடுக்க போகும் பிறப்பனைத்திலும் நீயே எனது மகனாக பிறக்க மனம் துடிக்கிறது மகனே!"-என்று இளவரசரை ஆர தழுவிக்கொண்டார் அவர்.

".................."

"இறைவன் அருளால் மறுபிறப்பு எனக்கிருந்தால் அந்நிகழ்வு நிச்சயம் நிகழும் தாயே!"

"................."

"தம் புதல்வன் நாடி வந்த வரத்தினை அளியுங்கள்!"-பெரும் தயக்கத்திற்கு பின் தனது வலக்கரத்தை உயர்த்தி அவரை ஆசீர்வதித்தார் சக்கரவர்த்தினி.

எஞ்சிய இருவரிடமும் விபை்பெற்றவனின் கண்களில் கண்ணீர் சுரக்க,உடனடியாக அவ்விடம் விலகினார் இளவரசர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.