(Reading time: 9 - 18 minutes)

ன்று வழக்கத்திற்கு மாறாக யாத்ரீகையின் மனம் குதூகலம் கொண்டிருந்தது.

"எனது வருகை இல்லாமல் போனதன் காரணம் அறிய இளவரசர் தனது பிரிய மித்திரனை தூது அனுப்பி உள்ளாரா??"-அவள் முகம் சிவந்துப் போனது!

"மனதில் இவ்வளவு அன்பை வைத்துக் கொண்டு அவர் எனை வஞ்சிப்பதன் காரணம் என்ன?"

"இனி தாமதிக்க போவதில்லை..இளவரசரிடம் எனது எண்ணத்தை சந்தியா (மாலை)நேரத்தில் சென்று வெளிப்படுத்த போகிறேன்!"

"ஆனால் எவ்வாறு??"-நிகழப்போவது தெரியாமல் தனது கற்பனை வருங்காலத்தை எண்ணி பூரித்துக் கொண்டிருந்தாள் அக்கன்னிகை.

"என்ன காரியம் செய்தாய் மித்திரை?எனது புதல்வனிடம் இவ்வாறு ஒரு யாசகம் பெற எவ்வாறு துணிவு ஏற்பட்டது உனக்கு?மனதினை அழித்துக் கொண்டாயா?பதில் கூறு!"-சீறினார் சக்கரவர்த்தினி.

"....................."

"எவ்வளவு வேதனைகளை அடைந்திருப்பான் அவன்!துறவறம் என்ன எளிதான ஒன்றா?ஒரு தாயாய் எவ்வாறு இப்பணி ஆற்றினாய்?"

"தமக்கையே..!எனை மன்னியுங்கள்..எனக்கு வேறு உபாயம் தோன்றவில்லை!குருக்ஷேத்திரனின் உறுதி கண்டு...!"

"போதும் நிறுத்து உன் உளரலை..!"-தனது சகோதரியை ஓங்கி அறைந்தார் காத்யாயினி.

"காத்யாயினி!"

"அமைதி காத்தருளுங்கள் அரசே..!"

".................."

"நீ எனது ஆதித்யனை குறித்து என்ன அறிவாய்?நாம் வாழும் இக்குலத்தின் ஆதவனே அவன் தான்!அவனது விருப்பம் யாதென அறிவாயா?அவன் எதிர்கால கனவுகள் குறித்து அறிவாயா?"

"...................."

"சீர் குணங்கள் கொண்ட சிவ பக்தையான சேனாதிபதியின் புதல்வி யாத்ரீகையிடம் தன் மனதை சமர்ப்பித்தவன் அவன் என்பதை அறிவாயா?"-இருவரும் திடுக்கிட்டனர்.

"தனக்கான அவளது அன்பினை பிராணன் பிரியும் வரை போற்ற வேண்டும் என்று கனவுகளை வளர்த்த என் புதல்வனை குறித்து நீ என்ன அறிவாய்!"

ன்று...

இளவரசர் யாத்ரீகையின் சிகை அலங்கார வஸ்துவை கோட்டைக்கு கொணர்ந்த போது அன்று காத்யாயினியாரும் அவனை காண வந்திருந்தார்.

"இவ்வஸ்து நிச்சயம் ஒரு கன்னிகையின் வஸ்துவே!இது உன்னிடம் எவ்வாறு வந்தது?"

"................"

"பதில் கூறு!என்ன காரியம் செய்துள்ளாய் நீ?"

"தவறாக எண்ணம் கொள்ள வேண்டாம் தாயே!தம் எண்ணும் எண்ணம் பொய்யாகும்!எனை சீர் குணங்ளோடு வளர்த்தவர் தாம்!நான் எவ்வாறு ஒரு கன்னிகையின் பவித்ரத்திற்கு பங்கம் விளைவிப்பேன்!"

"எனில் இதன் காரணம் கூறு!"

"இது எனது மனதினை கவர்ந்தவளது வஸ்து!"

"மனம் கவர்ந்தவளா?"

"ஆம்...!"-அவர் விவரத்தை கூறினார்.

"எனில் உன் வதனம் வாட்டம் கண்டுள்ளதா?"-என்றப்படி அவரை பதற்றத்தோடு பரிசோதித்தார் காத்யாயினி.

"இல்லை மாதா...ஏற்பட்ட ரணத்தினை தமது குல வது சரி செய்து எனை ரட்சித்தாள்!"-அவரது முகம் இயல்பானது.

"அன்று ஆலகால நஞ்சினை இறைவன் உண்ட சமயம் தேவி ஆதிசக்தி தன் பதியின் கழுத்தினை பற்றி அவரை ரட்சித்தார் என்று புராணங்கள் கூறும்!இன்று எனது புதல்வனை ஒரு கன்னிகை ரட்சித்திரக்கிறாள்!"

".............."

"அவளது நாமம் என்ன?"

"யாத்ரீகா!"

"அவள்...."

"சேனாதிபதியாரின் புதல்வி!"

"உனது சகியல்லவா?"

"ஆம்..!"

"எனில் என் கவலை தீர்ந்தது!விரைவிலே மன்னரிடம் உனது விவாஹம் குறித்து வினவுகிறேன்!"

இதுவே நடந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.