(Reading time: 9 - 17 minutes)

"காரணம் அவள் தான்!அன்று அவளுக்காக எனை அவமதித்தார் அவர்!அந்த சேனாதிபதி புதல்வி தேவியருக்கு இணையா??சாதாரண பிரஜையானவள் ராஜகுமாரி என்னை வென்றுவிட்டாளா?இயலாது...அக்கன்னிகையை வஞ்சம் தீர்க்காமல் என் நெஞ்சம் பொறுக்காது!அவளை பழி தீர்ப்பேன்!இது நான் எடுக்கும் சபதம்!இது காளிங்க தேசத்தின் ராஜகுமாரியின் சபதம்!!"

மீண்டும் வஞ்சம்....

இக்கதையை படிக்கும் மனிதர்கள் எனது வினா ஒன்றுக்கு விடைக்கூறி எனது குழப்பத்தை தீர்க்க வேண்டுகிறேன்..

வஞ்சம் என்ற உணர்வால் தாம் அடைந்த பிராப்தி தான் என்ன??ஐந்தறிவு,நான்கறிவு விலங்குகளை காணுங்கள்...தன்னை காக்க மட்டுமே அல்லது தனது பசிக்காக மட்டுமே அது வேட்டையாடுகிறது...

ஆனால் ஆறறிவு படைத்த புத்தி கூர்மை வாய்ந்த மனிதன் எதனை ஆதாரமாக்கி வஞ்சிக்கின்றான்??இதுவும் அவனுக்கு ஒருவகை பசியாகிப் போனதா??

தனது சுயநல எண்ணத்திற்காக மனிதன் மரங்களின் வாழ்வினை வேரோடு சாய்கின்றான்..எவ்வித பொதுநல எண்ணமுமின்றி விலங்குகளை வதைக்கின்றான் இயற்கையை அழிக்கின்றான்.சற்றே சிந்தியுங்கள் மனிதன் மீது இவையனைத்தும் வஞ்சம் கொண்டால்??இயற்கையை எதிர்க்கும் திறன் மனிதனிடம் உண்டா!!அடுத்தவர் அழிவில் ஆனந்தம் கொள்ளும் சிலரே..!சற்று தங்கள் பின்னால் திரும்பி தங்களையே கவனித்துக் கொண்டிருக்கும் கர்மத்தை சந்தியுங்கள்..கைக்கட்டி அது நிற்க காரணம் உங்களுக்கு பயந்து அல்ல!அதன் முகத்தை உற்று பாருங்கள்..அது உங்களை பார்த்து புன்னகைக்கும்!அதில் நிச்சயம் ஏளனம் மிளிரும்..!காரணம்,இறைவன் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பான் ஆனால் எப்போதும் அப்பணியினை மட்டுமே செய்துக் கொண்டிருக்க மாட்டான்..!அன்னவன் ஆணையிட்டால் தங்களின் கர்மவினை தங்களின் கழுத்தை நெறிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது!!

"னக்கு புத்தி பேதலித்ததா?எதற்காக இளவரசனின் விவாஹத்திற்கு சம்மதம் தெரிவித்தாய்?"-சீறினார் அரசர்.

"அரசே..!புதல்வனின் விவாஹத்தை காண தாயின் மனம் ஏக்கம் கொள்ளாதா?எவ்வாறு நான் அவனிடம் துறவறம் மேற்கொள்ள கூறுவேன் ஐயனே?"

"நமக்கு வேறு உபாயம் இல்லை காத்யாயினி!நாட்டு மக்களுக்காக இத்தியாகத்தை நீ ஆற்றி தான் ஆக வேண்டும்!"

"மக்களுக்காக சிந்திப்பது ஒரு சக்கரவர்த்தினியின் கடமை தான்!ஆனால் நானும் ஒரு தாய் அல்லவா?"

"என்னால் இதனை ஏற்க இயலாது!நான் இவ்விவாஹத்தை ஏற்க மாட்டேன்!"

"தயைக் கூர்ந்து மனம் இறங்குங்கள் ஐயனே!இளவரசனின் விவாஹத்தினால் என்ன நாசம் நிகழப்போகிறது?ஜோதிடக்கலை சில நேரத்தில் பொய்த்தும் போகலாம் அல்லவா?அன்று சேர தேசத்து இளவரசர் இளங்கோவன் அப்பணியை செய்துக் காண்பித்தாரே!அரசர் ராஜராஜரின் துணைவி வானதி தேவியார் ஜோதிடத்தைப் பொய்பிக்கும் பொருட்டு அரியாசனம் ஏற மாட்டேன் என்று சபதம் செய்தாரே!அவ்வாறு ஏதேனும் நிகழலாம் அல்லவா?"

"நீ ஏன் புரிந்துக்கொள்ள மறுக்கிறாய்?அதனால் விளைந்த விளைகளை நீ அறிவாயா?இளங்கோவரின் சபதத்தால் அவரது உறவுகள் கவலையில் வாடிய வாட்டத்தினை அறிவாயா நீ?வானதி தேவியின் சங்கல்பத்தினால் ராஜராஜரின் ஏக பத்தினி விரத தன்மை ஒரு சக்கரவர்த்தினியை பெரும் பெருட்டு நிர்மூலமானதை நீ உணர்வாயா?"

".................."

"எவ்வாறு இந்நிலையினை நான் சரி செய்வேன்!இறைவா..!"-மன்னரின் மனநிலை மோசமானது.

முகத்தில் மந்தகாசப் புன்னகையோடு கோப்பையில் இருந்த மதுவை தொண்டையில் சரித்துக் கொண்டான் குருக்ஷேத்திரன்!!

"இளவரசே..!தமது ஆனந்தத்தின் பொருள் என்ன?"-அவனது நெருங்கிய நண்பனும்,தலையாய ஒற்றனுமான பார்த்திபன் வினவினான்.

கையில் இருந்த மதுவை தூர எறிந்தான் இளவரசன்.

"நீ அறிவாயா மித்திரா!பிரக்யாயினி விவாஹத்திற்கு சம்மதம் தெரிவித்தாளாம்!"

"உண்மையாகவா?இது மகிழ்ச்சிக்குரிய செய்தி!அவள் மேலான உனது காதல் வாகை சூடியது!"

"காதலா?"-அவன் கலகலவென்று நகைத்தான்.

"யார் கொள்வார் கேவலம் பெண்ணின் மீது காதலை?எனது கவனத்தை அவளை நோக்கி ஈர்த்தது அவளது வதனம்!அழகு!சௌந்தர்யம்!"

"என்ன?"

"நான் கண்ட பெண்களில் பேரழகி இவள்!அதன் காரணத்தாலே அவளை கவர்ந்து வந்தேன்!"-அதிர்ந்துப் போனான் பார்த்திபன்.

"அவளது உபசரிப்பு அலுத்ததும்!நாடுவேன் அடுத்த கன்னிகையை! ராவணன் குணம் கொண்டவன் இந்த குருக்ஷேத்திரன்!"

"................"

"எவ்வாறு மண்டோதரியின் பதிவிரதத்தன்மை ராவணனை ரட்சித்ததோ அவ்வாறே என்னவளின் பதிவிரதம் எனக்கு ரட்சையாக மாறும்!ஆனால்,எனை அழிக்க எந்த ராம நாராயணனும் மண்ணில் அவதரிக்கவில்லை!"-மீண்டும் சிரித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.