(Reading time: 9 - 17 minutes)

01. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

Penne en mel pizhai

வணக்கம் என் பெயர் தீபாபாஸ்கர் இது என்னுடைய முதல்கதை. இதில் ஏதேனும் குற்றம் குறை இருந்தால் மன்னிக்கவும்.

கதாநாயகன்:மஹிந்தன்

கதாநாயகி:கவிழையா

மஹிந்தன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலதொழில் உள்ள பாரம்பரிய செல்வந்தன். திறமை, திமிர், நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்பவன்.

கவிழையா நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த மிகமிக அழகாண பெண். கடைசி ஆண்டு பொறியியல் மாணவி. அன்பான குடும்ப வரைமுறைகளுக்குக் கட்டுப்பட்ட அக்மார்க் தமிழ்ப்பெண்.

ஹிந்தனின் கறுப்புநிற ஆடி கார் ட்ராபிக்கில் சிக்கி நின்றிருந்த போது காரின் அருகில் இருந்த ஸ்கூட்டியில் முகத்தினை, வெயில், தூசியில் இருந்து காப்பதிற்காக நெற்றி கண்கள் தவிர மற்ற பாகம் அனைத்தையும் கரும் பச்சைநிற துப்பட்டாவால் மூடிநின்ற கவிழையாவின் சந்தனநிற நெற்றியும் அழகாண கண் இமையின் முடி வளைந்து, புருவம் தொட்ட நீண்ட விழிகளும். சரியான அளவில் தைத்திருந்த உடையில் தெரிந்த அவள் சாமுத்திரிகா லட்சன உடல் அமைப்பும் கண்ட அவன் உதடுகள் ப்யூட்டிபுல் என்று முணுமுணுத்தது. ட்ராபிக் கிளியர் ஆனதில் இருவர் வாகனமும் அவர்கள் பாதையில் சென்றனர்.

மஹிந்தனின் கார் கடற்கரையில் இருந்த அப்பெரிய மதில்களுடன் ஆன பெரிய கதவின் அருகில் சென்றதும் காவலாளி விரைந்து கதவை திறந்தார். கார் அதன் பாதையில் ஐந்து நிமிடம் பயணம் செய்து அப்பெரிய பேலசின் முன் நின்றது. காரில் இருந்து இறங்கியதும் கார்ஓட்டுனர் அவன் லக்கேச்சை எடுத்து அவனின் பின் விரைந்தான். அம்மாளிகையின் வேளையாட்கள் அங்கங்கு தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர். ஹாலில் நடுவில் இருந்த அவ்வழகான மாடிப்படிகட்டுகளில் ஏறி வலதுபுறம் உள்ள அவனின அறையை அடைந்தான். அவன் பின் வேகமாக வந்த கார் ஓட்டுனர் அவன் லக்கேச்சை அதன் இடத்தில் வைத்து சென்றதும் மஹிந்தன் தன்னை ரெப்ரஷ் செய்துகொண்டு தன் பெரிய கட்டிலின் விழுந்தான் அக்கட்டிளின் மெத்தை அவனை சுகமாக அனைத்து உள்வாங்கிகக்கொண்டது.

கட்டிலின் பக்கம் இருந்த தொலைபேசி ஒளித்தது. அதனை எடுத்து சொல்லுங்க மாம் என்றான்”.மஹிந்தனின் அம்மா சுபத்திரா,” இப்பத்தான் வந்தாயா மஹிந் என கேட்டார்.’ஆமாம் மாம், என்னம்மா? எதுவும் முக்கியமாக பேசனுமா மாம். “ம்” அப்பாவும் நானும் ஆறுமணிக்கு, டீ சாப்பிடும் போது உன்னுடன் பேசலாம் சரியா மஹிந். சரி மாம் நான் கொஞ்ச நேரம் தூங்கிட்டு சரியா ஆறுமணிக்கு கீழ் வருகிறேன் என்றான்.

மஹிந்தனின் அப்பா விஷ்வநாதன் தனது தந்தையின் தொழில்களை சிறப்பாக நடத்திவருபவர். அவருக்கு தன் மகன் தன்னுடைய தந்தையின் மறுஉருவமாக இருப்பதில் சிறிய பொறாமை உண்டு. தனது தந்தை மஹிந்தனனின் இருபதாவது வயதில் இறந்துவிட்டார்.

மஹிந்தனின் அப்பா விஷ்வநாதன் பணக்கார வீட்டில் உள்ள மற்ற பிள்ளைகளை போல் ஆடம்பரத்தில் அலாதி பிரியம் உள்ளவர். பரம்பரை சொத்தை காப்பதற்க்கு மட்டுமே அவரால் நேரத்தை செலவிட முடியும். மஹிந்தனின் தாத்தா சண்முகநாதனைப் போல் தந்தைக்கு இருக்கும் சொத்தை மூன்று மடங்கு பெருக்க திறமையில்லை.ஆனால் மஹிந்தனை வளர்த்தது அவரது தாத்தா சண்முகநாதன் தான்.

விஸ்வநாதன் சுபத்திரா தம்பதியருக்கு மஹிந்தன்,மதுரா இரண்டு பிள்ளைகள். சுபத்திராவிற்கு பார்ட்டி மற்றும் தனது மகளிர் கிளப்பின் பொதுச்சேவை தான் உலகம். சுபத்த்ராவை பார்க்கும் எவரும் அவருக்கு நாற்பத்தெட்டு வயது என்று சொன்னால் நம்பமாட்டார்கள். முப்பதுக்குள் இருக்கும் பெண்களை போன்ற தோற்றத்தில் இருப்பார்.அத்தோற்றத்தை காக்க உன்டான அத்தனை வழிகளையும் பினபற்றுபவர்.தன் பிள்ளைகளை வளர்க்க உரிய பணியாளர்களை நேர்முக தேர்வின் மூலம் பணியமர்த்தி கண்காணித்து வந்தவர்.

தாத்தா சண்முகநாதன் தனது ஓய்வுநேரம் முழுவதும் செலவிடுவது தனது பேரன் பேத்தியுடன்தான். அதனால் மஹிந்தன் தனது ரோல்மாடலாக தனது தாத்தாவை கொண்டே வளர்ந்தான் .மஹிந்தன் சிறு வயது முதல் அவன் இருக்கும் இடத்தில் நடக்கும் எல்லா போட்டியிலும் அவனே வெற்றிபெறுபவனாக இருப்பான்.அவ்வெற்றிக்காக எல்லா வித வழிகளையும் ஆராய்ந்து செயல்படுத்தும் திறன் இயற்கையாகவே அமைந்திருந்தது. பணம் அறிவு இரண்டும் இருந்ததினால் திமிரும் எதிரில் இருப்பவரை அடக்கியாளும் குணமும் கொண்டிருந்தான்.அவன் அடங்கும் ஒரே ஆள் அவன் தாத்தா மட்டும்தான். தனது தங்கை மதுராவின் சொல்லிற்கு சிறுது செவிசாய்ப்பான்.

மஹிந்தனின் தாத்தா இறப்புக்கு பின் அவனை அடக்கி நல்வழி படுத்த ஆள் இல்லாமல் போய்விட்டது. தனது மேல் படிப்பை லண்டனில் முடித்து வந்து தனது பரம்பரை தொழில்களை கையில் எடுத்தவன் ஒரே வருடத்தில் ஈட்டியவருமானமும் எட்டிய உயரமும் அவனது தந்தை தாயையுமே வியந்து ஒரு அடி தள்ளிநின்று பேசும் நிலையை கொண்டுவந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.