(Reading time: 9 - 17 minutes)

விழையாவின் ஸ்கூட்டி வீட்டுவாரியத் திட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஹச் டைப் வீட்டின் முன் உள்ள காம்பவுண்டுக்குள் தனது ஸ்கூட்டியை நிறுத்தி அழைப்புமணியை இயக்கினாள். ‘ஒரு நிமிடத்தில் கதவு திறந்தது’. உள்நுழைந்ததும் கவிழையாவின் அம்மா பார்வதி மகளிடம் மதியம் சாப்பிட்டாயா கவி என கேட்டார்.

தனது ஹேன்ட்பேக்கை அதற்குரிய இடத்தில் வைத்து பொத்தென சோபாவில் உட்கார்ந்துகொண்டு தனது காலை டீபாயின் மேல் வைத்துக்கொண்டடே நல்லா திவ்யமாக சிக்கன் பிரைட்ரைஸ் சாப்பிட்டு வந்தாச்சுமா என கூறி தாயின் முகத்தை பார்த்தால் கவிழையா.

அவர் கோபமாக முறைப்பதைப் பார்த்து சரண்டர் ! என கையை தூக்கிய கவி, மன்னிச்சிடுங்க பார்வதி டார்லிங் .நீங்க எனக்காக மதியம் சமைச்ச சாப்பாட்டை வீணாகாமல் இரவு என் அப்பாவை சாப்பிடவைத்து விட்டால் வீணாகாது என பாவமாக முகத்தை வைத்துக் கூறினாள் கவிழையா.

அதர்க்கு பார்வதி தன் மகளின் காதை பிடித்து அடி கழுதை இப்ப அப்பாவை அதை சாப்பிட சொன்ன வாய், கல்லூரிக்கு போகிறதுக்கு முன்பு நான் கேன்டியன்ல சாப்பிட்டுக்கொள்கிறேன் என்று சொல்லுவதற்க்கு என்ன வந்தது.அவர் எதுக்கு அதை சாப்பிடனும் தப்பு உன்னோடது என்றார் பார்வதி.

ஹலோ! நாட்டமை பார்வதி அவர்களே என்னை கேன்டியனில் சாப்பிட சம்மதித்து அதற்க்கு பணமும் கொடுத்து உன் சமையளில் இருந்து தப்பிக்க உதவியவர் என் அப்பா.அதனால் சட்டப்படி தப்பு செய்வதற்கு உதவியருக்கே அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என் கேட்டுக் கொள்ளப்படுகிறது என பதில் அளித்தாள்

கவிழையாவின் குறும்பையும் மகளின் அழகையும் ரசித்த தாய் எல்லாம் அவர் கொடுக்கும் செல்லம், வரட்டும் உங்க அப்பா அவரிடம் நான் பேசிக்கொள்கிறேன் என கோபமாக முகத்தை வைப்பதுபோல பாசாங்கு செய்தார்.

அம்மா தம்பி ஸ்கூலில் இருந்து வரலையா? எனற கவிழையாவை, வருகிற நேரம்தான் நீ போய் முகம் கை கால் கழுவிவிட்டு டீ குடிக்க வா அதற்குள் உளுந்தவடைக்கு சட்டினி அறைத்துவிடுகிறேன், என சமையலறை சென்றார் .

ஈஸ்வரன்-பார்வதி தம்பதியருக்கு கவிழையா, வருண் என இரு பிள்ளைகள். ஈஸ்வரன் வங்கியில் மேலாளராக உள்ளார்.பார்வதி பிள்ளைகளை முழுவதுமாக கவனிப்பதற்கு தன்னுடைய ஆசிரியர் வேலை சற்று இடையூராக இருந்ததால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர குடும்ப தலைவியாக இருப்பவர். ஈஸ்வரன் அன்பான குடும்பத்தலைவன் தனது வாங்கிமேலாளர் வருமானத்திலேயே சிக்கனமாக சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளவர்.பிள்ளைகளின் சின்னசின்ன ஆசைகளை நிறைவேற்ற தயங்கமாட்டார்.

கவிழையா வியர்வை நீங்கி உடைமாற்றிக் கொண்டு முன்அறைக்குள் வருவதற்கு முன்பே தனது தந்தையும் தம்பியும் உடைமாற்றிக்கொண்டு உட்கார்ந்து பார்வதி கொடுத்த வடை ,தேநீரை உண்ணப்போவதை பார்த்தவள் அம்மா எனக்கு முதலில் வடை கொடுக்காமல் எனக்கு பிறகு வந்த ரெண்டுபேருக்கும் கொடுப்பது எந்தவிதத்திலும் சரியில்லை எனகூறினாள்.

அதற்க்கு பார்வதி என்னுடைய சமையலில் இருந்து தப்பிக்து கேன்டியனில் சாப்பிட்டவளுக்கு வடையும் தேநீரும் கண்டிப்பாக கொடுக்கப்போவது இல்லை என்றார்.

அதற்கு அம்மா எனக்கு காம்பஸ் இண்டர்வ்யூவில் மஹிந்தன் சாப்ட்வேர் இன்டஸ்ட்ரீஸ்யில் வேலை கிடைத்திருக்கிறது அதற்க்கு என்னுடைய வகுப்பு தோழிகளுக்கு ட்ரீட் கொடுக்கும்போது நான் எப்படி சாப்பிடாமல் இருக்கமுடியும். “என்னுடைய செல்லஅம்மாவின் சமையலுக்கும் நான் ரசிகை” அப்போது நான் சொன்ன தப்பிப்பது என்றவார்த்தை சும்மா ‘லுள்ளுலாய்க்கு’ என்று சொன்னால் கவிழையா.

ஈஸ்வரன் வருனிடம், நீயும் அக்கா மாதிரி கல்லூரியின் நுழைவுத்தேர்வில் வேலைக்கு தேர்ந்தெடுப்பதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

சரிப்பா என்று சொன்ன வருண், ஒரு வடைக்கு போட்டிபோடுற சின்னப் பெண்ணை எப்படிம்மா வேலைக்கு எடுத்தாங்கள் என தன் பெரிய சந்தேகத்தை எழுப்பினான் பார்வதியிடம்.

உடனே “கவி யாரைப்பார்த்து சின்னப்பொண்ணுன்னு சொன்ன பொடியா என அடிக்க துறத்த ஆரம்பித்தாள்,” ஒருவரை ஒருவர் கிண்டல் பண்ணாமல் சாப்பிடுங்கள் என அதட்டினார் ஈஸவரன். தந்தையின் அதட்டலில் சாப்பிட உட்கார்ந்த பிள்ளைகள் அப்பா எதுவோ தீவிர யோசனையில் இருப்பதைப் பார்த்து அமைதியானார்கள்.

இரவில் தன் அருகில் யோசனையுடன் படுத்திருந்த ஈஸவரனை பார்த்துப் பார்வதி எதைப்பற்றி யோசித்துகொண்டு இருக்கிறீர்கள் என கேட்டார்.

அதற்க்கு ஈஸவரன் என்னுடைய நண்பனின் மகனுக்கு நம் கவிழையாவைப் பெண்கேக்கிறார்கள் மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலைபார்க்கிறார் நல்லகுடும்பம் ,நான் மாப்பிள்ளைப்பையனை பார்த்திருக்கிறேன் நம்ம கவிக்கு பொருத்தமாக இருப்பான் என கூறினார்

.நல்ல இடம்என்றால் பேசிமுடித்து விடலாமே அதில் என்ன யோசனை என்றார் பார்வதி.

அதற்கு ஈஸவரன் நம் கவிழையாவிற்கு மிகப்பெரிய இடத்தில் வேலைகிடைத்திருக்கிறது மாப்பிள்ளை வெளிநாட்டில் வேளைபார்ப்பதால் இவ்வேளையில் சேர்வதில் கொஞ்சம் யோசனையாக உள்ளது. “மாப்பிள்ளையின் பெயர் தனுஷ்” அவர் போனவாரம் இந்தியா வந்திருக்கிறார்.

என்னுடன் மாலில் கவியைப் பார்த்திருக்கிறார் அவருக்கு நம் கவியை ரொம்ப பிடித்திருக்கிறது நம்மளைவிட வசதியானவர்கள் நல்லபடிப்பு, வேலை எல்லாம் நிறைவாய் உள்ளது.வரதட்சணையாக நம்மால் போடமுடிந்ததை செய்தால் போதும் என கூறுகிறார்கள். விடுப்புமுடிந்து அவர் அமெரிக்கா கிளம்ப பதினைந்து நாள்தான் உள்ளதாம் அதற்குள் குடும்பத்தில் கலந்து நல்ல முடிவு சொல்லச்சொல்கிறார்கள். தனுஷ் வெளிநாடு போவதற்குள் கல்யாணத்தை முடிவு செய்ய அவர்கள் ஆசைபடுகிறார்கள் என கூறினார்.

அதற்க்கு பார்வதி நம்மகவியிடம் நாளைக்கு பேசிவிட்டு முடிவை மாப்பிளை வீட்டில் சொல்லலாம் எல்லாம் நல்லபடியாக முடியும் நீங்கள் கண்ணமூடி நிம்மதியாக தூங்குங்கள் என்றார்.

Episode # 02

தொடரும்

{kunena_discuss:1081}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.