(Reading time: 12 - 23 minutes)

02. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

Penne en mel pizhai 

ரியாக 6மணிக்கு மாடிப்படி இறங்கிவந்த, தன்னுடைய மகனின் ஆறடி உயரத்தையும், அகண்ட தோள்களையும், சிக்ஸ்பேக் உடல்கட்டையும், வீட்டில் அணியும் உடையின் நேர்த்தியும், கண்களின் கூர்மையும் நிமிர்ந்த நடையையும், ரசித்த விஸ்வநாதனின் உள்ளம் தன் மகனிடம் மற்ற அப்பாக்கள் மாதிரி உரிமையாக பேசமுடியவில்லையே என்ற ஏக்கம் எழுந்தது.. “எப்போது இருந்து மகனுக்கும் தனக்கும் இடையில் இடைவெளி வந்தது என யோசனையாக” இருந்த போது.

 சுபத்திரா தனக்கு எதிரில் அமர்ந்த மஹிந்தனிற்கு தன் அருகில் இருந்த டீபாயில் இருந்த கெட்டிலில் இருந்து தேநீரை அழகிய வெள்ளிக் கப்பில் கலந்து கொடுத்தார்

 .கையில் வாங்கிய மஹிந்தன் ‘மாம்’ நான் பால் கலந்த தேநீரை குடிப்பதை நிறுத்தி ஐந்து வருடம் ஆகிவிட்டது என்று கூறினான்.தன் அருகிலிருந்த அலாரத்தின் மூலம் வரவழைத்த பணியாளரிடம் மணி, எனக்கு தேநீர் என கூறியவுடன். மணி அவனுக்கு பிடித்தது போல் தேநீரை உடனே கலந்துகொடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். சொல்லுங்க, என்னவிஷயம் என கேட்டான் தன்னை பெற்றவர்களிடம்.

 விஸ்வநாதன் தன் மகனிடன் நம்முடைய எஸ்.வி.என் மோட்டார் கம்பெனியின் பங்கில் 45% பங்கு நம்மிடம் உள்ளது. மீதம் 2௦0 % உன்தங்கை மதுராவிடம் உள்ளது.

 அவள் கல்யாணமாகி பார்த்தீபன் வீட்டிற்கு போய்விட்டதால் இனி அப்பங்கு பார்தீபன் குடும்பத்துடையது மீதி 35% பங்கு ஏற்கனவே பார்த்திபன் குடும்பவசம் உள்ளது.

 ஆதாலால் இப்பொழுது எஸ். வி .என் மோட்டார் கம்பெனியின் அதிக பங்குதாரர்கள் பார்த்தீபன் குடும்பத்தார். .அடுத்த பங்குதாரர் கூட்டத்தில் சேர்மன் பதவியில் இருந்து என்னை நீக்கக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது என்றார்.

 அதனை கேட்டு யோசனையாக மஹிந்தன் இதற்கு உங்களிடம் ஏதாவது உபாயம் உள்ளதா என கேட்டான்.

 அதர்க்கு அவர் பார்த்தீபனின் தங்கை (பார்த்தீபனின் பெரியப்ப்பா மகள்) ஐஸ்வர்யாவை உனக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க அவர்கள் வீட்டில் விரும்புகிறார்கள். கல்யாணத்திற்கு சீதனமாக அவர்களின் குடும்பப் பங்கில் 20%தை உனக்கு கொடுப்பதாக கூறுகிறார்கள். இக்கல்யாணம் உறுதியாகும் பட்சத்தில் அடுத்த பங்குதாரர் கூட்டத்தின் தேர்தலில் எப்பொழுதும் போல் சேர்மன் பதவியும், கம்பெனியும் நம்முடயதாகவே இருக்கும் என்றார்.

 சுபத்திரா தன் மகனிடன் நாளைக்கு இரவு உன் தங்கை மதுரா வீட்டில் நமக்காக விருந்திற்கு அழைத்திருக்கிறார்கள். அப்படியே ஐஸ்வர்யாவை பார்த்துவிட்டு உன்னுடைய முடிவைச்சொல் என கூறினார்

 .சிறிதுநேரம் யோசனைக்கு பிறகு, சரி மாம் எத்தனை மணிக்கு அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் என கேட்டான், மஹிந்தன். அவனுடைய பதிலில் மகிழ்ந்த பெற்றோர் இருவரும் எட்டு மணிக்கு அங்கு போகலாம் என முடிவெடுத்தனர்.

ஹிந்தனின் கார் அந்த நட்சத்திர விடுதியை அடைந்ததும் காரிலிருந்து இறங்கி அவனுக்காகவே காத்திருந்த பிரெஞ்ச் கிளையண்டை ரிசீவ் செய்து வியாபார ஒப்பந்தத்தை நல்லபடியாக முடித்துவிட்டு. அதனை கொண்டாட அவர்களுடன் அவ்விடுதியில் உள்ள பப்க்கு கூட்டிசென்றான்.

 உள்ளே சென்றதும் அவன் காதில் விழுந்த, “ஐஸ்வர்யா டார்லிங்” என்ற பெயரைக் கேட்டதும் தன்னையறியாமல் திரும்பிப்பார்த்தான். அங்கு கறுப்புநிற ஜீனும் இளம் ரோசாநிற கையில்லாத மேல் சட்டையுடுத்தி பக்கத்தில் நின்ற வாலிபனின் கைகோர்த்து பளிச்சென்ற வெண்மையான நிறத்துடன், அவள் உடுத்தியிருந்த சட்டை நிற ரோஸ் உதடுகள், திருத்தப்பட்ட புருவத்துடனும் மையிட்டக் கண்களை கண்டதும் [அவன் மனதில் அன்று தன் காரின் அருகில் நின்ற ஸ்கூட்டி பெண்ணின் கண்கள் தன் கண்ணுக்குள்ளே ஒரு நிமிடம் மின்னி மறைந்தது]. தன்னை சுதாரித்துக் கொண்டான்.

 அந்த ஐஸ்வர்யாவின் பின்புறம் இருந்த மேசையில் தன்னுடன் வந்த கிளையண்டை கூட்டிச்சென்று அமர்ந்துகொண்டு அவளின் செயலை நோட்டம் விடஆரம்பித்தான்.

 அவள் அவ்வாலிபனிடம் அஜய் இன்னைக்கு இரவு எஸ்.வி.என் மோட்டார்சின் வாரிசான மஹிந்தன் என்னை பெண்பார்க்க வருவதால் உனக்கு என்னால் மதியத்திற்குமேல் கம்பெனி கொடுக்க முடியாது ஒரு பெக் மேல் குடிப்பதற்கும் தடை போடப்பட்டுள்ளது என கூறினாள்.

 அதை கேட்ட அஜய் உனக்கு கல்யாணமா? ஜோக் அடிக்காதே, என கூறினான்.

 அதற்க்கு ஐஸ்வர்யா இந்த வாழ்க்கையை அனுபவிக்க எனக்கு பணம் வேண்டும். நான் அந்த மஹிந்தனை என் அண்ணன் கல்யாணத்தில் பார்த்திருக்கிறேன் செம ஹேன்சமான, பவர்புல் பெர்சன். அவனின் மனைவியாய் இருப்பது என்னுடைய ஸ்டேட்டஸ், நண்பர்கள் மத்தியில் அதிகரிக்கும். அதனால் நான் இந்த கல்யாணத்தை விரும்புகிறேன் என்றாள்.

 தன்னைமறைத்து அவள் பேசியதை கவனித்துக் கொண்டு இருக்கும்போது, ஐஸ்வர்யா அஜயுடன் பேசிக்கொண்டு வெளியேறிவிட்டாள்.

 மஹிந்தனுக்கு யோசனை செய்யவேண்டிஇருந்ததால். அக்கிளையண்டை தனது செக்ரட்டரி பொறுப்பில் விட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.