(Reading time: 12 - 23 minutes)

காரில் உட்காந்து தன்னைபற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவனைப்போன்ற குடும்பத்தின் திருமணங்கள் அனைத்தும் தொழில் அடிப்படையில் தான் முடிவாகும் என்பதை அவன் பார்த்தும் கேட்டும் இருக்கிறான். “அவன் பெற்றோர்களின் திருமணம் தங்கள் வியாபாரத்தை பெருக்க நடந்தது, என தன் தாத்தா சொல்லி கேட்டிருக்கிறான்”. தன்னுடைய “தங்கை திருமணமும் அப்படித்தான் நடந்தது”. அவர்களைப் போன்ற பணக்கார சொசைட்டியில் உள்ள பெண்களில் அவன் அறிந்தவரை டிஸ்கோத்தே, பப், பாய்பிரண்ட் போன்றவை வெகுசாதாரணம்

 தனது தங்கை மட்டும் அதில் விதிவிலக்கு. காரணம் தனது தாத்தா. ஆனால் தான் தொழில், அறிவு இரண்டில் மட்டுமே தன் தாத்தாவையும், பெண்கள் விஷயத்திலும், மற்றபொழுதுபோக்கு விசயங்களில் தன் தந்தைபோலவும் இருப்பதை உணர்ந்தான்.

 மஹிந்தன் நினைத்தான், தன்னுடைய குணத்திற்கு தன்னை கட்டுப்படுத்தும் குணம் கொண்ட பெண்ணுடன் வாழ்க்கை அமைந்தால் போராட்டமாக இருக்கும் எனநினைத்து ஐஸ்வர்யாவுடன் தன்னுடைய கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ள முடிவெடுத்தான்

 தன் இருப்பிடத்தை அடைந்தவன், ”சரியாக இரவு எட்டுமணிக்கு” பார்த்தீபன் வீட்டில் காரில் தன் பெற்றோருடன் வந்திறங்கிய மஹிந்தனை கண்டு அண்ணா! என ஓடிவந்து கைபற்றிய மதுரா, தனது பெற்றோரையும் அணைத்து வீட்டின் உள்ளே அழைத்து சென்றாள். .

 வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் மஹிந்தனின் வீட்டவரை மரியாதையுடன் நடத்தினர் “ஹாலின் பக்கவாட்டு அறையில் இருந்து வந்த ஐஸ்வர்யா” அப்பொழுதும் ஜீன்பேன்ட் தொப்புள் தெரியுமாறு பனியனுடன் இருந்தவள் மஹிந்தனின் அருகில் சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தாள்.

 மஹிந்தனையும் அவனின் பெற்றோர்களையும் பார்த்து வெல்கம் டூ அவர் ஹோம் என கொஞ்சி பேசினாள்.

 “காரில் வரும்போதே மஹிந்தன் கல்யாணத்திற்கு சரி சொல்லி இருந்ததால்”. சுபத்திரா ஐஸ்வர்யாவை இனி நீ எங்கள் வீட்டுப் பெண் என்று கன்னம் தடவி, கல்யாண சம்மதத்தை தெருவித்தார்.

 அங்கு இருந்த மதுரா, தன் பெற்றோரை பார்த்து, அப்போ அண்ணண் இக்கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டானா? என கேட்டாள். ஆமாம்! என அவர்கள் சொன்னார்கள்.

 மஹி வாங்க சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு ஷாப்பிங் போகலாம் என கொஞசும் குரலில் கூறிகொண்டு உரிமையுடன் மஹிந்தனின் கைகோர்த்து நெருங்கி அமர்ந்தாள் ஐஸ்வர்யா. .அவள் அவ்வாறு தன் கைகோர்த்து அழைத்தது, மஹிந்தனுக்கு ஹோட்டலில் தான் பார்த்த [அஜய்யுடன் ஐஸ்வர்யா கை கோர்த்து நெருங்கி நின்ற காட்சி தோன்றியது] உடன் மஹிந்தனின் உதடுகள் ஒரு ஏலனச் சிரிப்பை உதிர்த்துவிட்டு மனதுக்குள்ளே எல்லா பெண்களும் இப்படித்தான் என்ற என்னத்தை விதைத்தது.

விழையாவிற்கு அன்று கல்லூரி விடுமுறை ஆதலால் காலையில் தாமதமாக எழுந்து குளித்துவிட்டு சாப்பிட வந்தாள்.

 அம்மா இன்று சாப்பாட்டில் என்ன ஸ்பெசல் நெய்வாசனை தூள் கிளப்புது, என்றாள்.

 அதற்கு பார்வதி கல்யாணம் முடிக்கும் வயதில் இருந்துகொண்டு அடுப்படி பக்கமே வந்துவிடாமல் இருந்தால் உன் வருங்கால புருஷனுக்கு எப்படி சாப்பாடு செய்து கொடுப்பாய் என கடிந்தார்.

 அதை கேட்டுக்கொண்டு வந்த ஈஸ்வரன் இப்ப எதற்கு அவளை திட்டுகிறாய் அதெல்லாம் என்மகள் அருமையாக சமைத்து மாப்பிள்ளையை அசத்திடுவாள் எனகூறினார்.

 மகளுக்கும் கணவனுக்கும் சாப்பாடு எடுத்து பரிமாறிக்கொண்டே ஈஸ்வரனிடம் மகளுடன் பேசச்சொல்லி கண்காமித்தார் உடனே தன் தட்டில் உள்ள வெண்பொங்கலை சாப்பிட்டுக்கொண்டே ஈஸவரன் மகளிடம் “கவி”, அப்பா, இன்னும் மூன்று மாதத்தில் உன் படிப்பு முடிந்ததும் உனக்கு கல்யாணம் முடிக்கலாம் என முடிவு செய்துள்ளேன். இதில் உனக்கும் எதுவும் ஆட்சேபனை இல்லையே! என்று கேட்டார்.

 அவர் கேட்டதும் கவிழையா ,அப்பா இப்ப என்ன கல்யாணத்திற்கு அவசரம், நான் என் படிப்பு முடிந்து அட்லீஸ்ட் ஒரு வருடமாவது எனக்கு கிடைத்துள்ள வேலையை எந்தவித இடையூறும் இல்லாமல் பார்க்க ஆசைப்படுகிறேன். ஒரு வருடம் கழித்து நீங்கள் யாரை திருமணம் செய்யச் சொன்னாலும் செய்துகொள்கிறேன் என்றாள்.

 அதனைக் கேட்ட பார்வதி அதெல்லாம் நீ வேலைக்குப் போய் ஒண்ணும் சாதிக்க வேண்டாம் “மூன்று மாதம் முடிந்ததும் உனக்கு கல்யாணம்” அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டார் என்றார்.

 அதனை கேட்டதும் கவிழையாவின் கண்களில் கண்ணீர் ததும்பிவிட்டது. மகள் கண்கலங்குவதை பார்த்த தந்தை, என் மகளுக்கு இன்னும் ஒருவருடம் சென்றபின் தான் கல்யாணப் பேச்சை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக என் நண்பனிடம் நான் சொல்லிக்கொள்கிறேன் என அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். “பாவம் கவிழையாவிற்கு இன்னும் ஐந்துமாதத்தில் அவர்களின் அனுமதியில்லாமல் கல்யாணம் முடியும்” என்பதை அவர் அறியவில்லை.

 வெளியில் போவதற்கு கிளம்பிவந்த கவிழையா. அம்மா, என் தோழி வனிதாவுடன் நான் நூலகம் போய்விட்டு வரும்போது வனித்தாவின் பிறந்தநாளுக்கு கடைக்குச்சென்று உடை எடுத்துவிட்டு இருட்டுவதற்க்கு முன் வந்துவிடுவேன், என கூறினாள். “மகளைப் பார்த்து பத்திரமாக போய்வரவேண்டும் கவி”. ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடவேண்டும் என்றுகூறினாள் பார்வதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.