(Reading time: 12 - 23 minutes)

வாகள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்ட வனித்தா, ஆண்டி! நான் உங்கள் மகளை பத்திரமாக உங்களிடம் ஒப்படைத்துவிடுவேன் என கூறி கவிழையாவை வா சீக்கிரம் போகலாம். உனக்கு ஆண்டி கொடுத்திருக்கும் நேரம் கம்மியாக உள்ளது என்றாள். பின் கவியை கூட்டிக்கொண்ட்டு கவிழையாவின் ஸ்கூட்டியில் இருவரும் சென்றனர்.

 மாலின் முதல் தளத்தில் இருந்த “சவுத் ஸ்டைல் வுமன்ஸ்கலெக்சன்” 50% டிஸ்கவுன்ட் என்ற பலகை இருந்த கடையை சுட்டிகாட்டிய வனி ,கவி அந்த கடைக்கு போய் எனக்கு உடை பார்போமா என கேட்டாள்

 .கவிழையா அவள் சுட்டிக்காட்டிய பக்கம் பார்க்கும்போது எதிரில் வந்த ஜோடி கண்ணில்பட்டதும் கவிழையா முகம்சுளித்தாள். காரணம், அவ்வாலிபனின் கரம், “அவன் ஜோடியின் இடையில் பதிந்திருந்த விதம்”.

 அதனை ஒதுக்கி, வா! போகலாம் என வனியுடன் அக்கடைக்குச் சென்று உடைவாங்கி வரும்போது கவிழையா தரையில் கொட்டியிருந்த தண்ணீரில் காலைவைத்து வழுக்கி விழும்போது இரண்டு வலிமையான கரம் அவளைத் தாங்கிப் பிடித்தது.

 பிடித்தவன் அவள் கண்களைப் பார்த்ததும் கையை விலக்க மறந்து அக்கண்ணில் தோன்றிய பல பாவங்களை ரசிக்க ஆரம்பித்தான்.

 கவி விழப்போகும் அதிர்ச்சியில் கண்ணை இறுக்கமூடி விழவில்லை என்றுதெரிந்ததும் அப்பா தப்பித்தோம்! என்ற பாவனையை கண்களில் காட்டி நன்றியைசொல்லும் நோக்குடன் அவன் முகம் நோக்கி, அவன் முகம் கண்டதும் அதிர்ந்து! பின் சீற்றத்தை பிரதிபலித்தது அக்கண்கள்.

 கொஞ்சநேரம் முன் கவி பார்த்த ஜோடியின் ஆண் அவன். அச்ஜோடி மஹிந்தன்-ஐஸ்வர்யா தான் [நேற்று ஐஸ்வர்யா ஷாப்பிங் போகலாம் என்று கூப்பிட்டதும் மஹிந்தன் அதை பொய்காரணம் சொல்லி தட்டிகளித்துவிட்டான்].

 இன்று தட்டிக்கழிக்க வழியில்லாததால் அவள் உடன் வந்துள்ளான். கவிழையா அவன் பிடியிலிருந்து வெளிவர முயன்று முடியாமல் போனதால் ஹலோ மிஸ்டர் முதலில் என்னை விடுங்கள், என்று கோபமாகச் சொன்னாள்.

 அவளின் சாயம் பூசாத இளம்ரோசா உதடுகளைப் பார்த்துக்கொண்டே அவளை விடுவித்தான்.

 அப்பொழுது ரெஸ்ட்ரூம் சென்றுவிட்டு திரும்பிவந்த ஐஸ்வர்யா ‘வாட் ஹப்பென்ட் ஹியர் மஹிந்’ என கேட்டாள்.

 அதற்கு அவன் நத்திங் “லெட்ஸ் வி கோ” என்று கவிழையாவை மென்று தின்பவன் போல் பார்த்துக்கொண்டே “ஐஸ்வர்யாவை பழையபடி இடுப்பில் கைகோர்த்து அவ்விடத்தை விட்டுஅகன்றான்.” கவிழையாவிற்கு உடம்பே அவன் தொட்டதிலும், பார்த்ததிலும், கூசிப்போய் ‘சீ’ முதலில் வீட்டிற்கு போய் சோப்புபோட்டு தேய்த்து குளிக்கணும் என்று சத்தமாக மஹிந்தனின் காதில்விழுமாறு கூறினாள். ‘அதை கேட்ட மஹிந்தனுக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன’

 மஹிந்தன் முதலில், கவிழையா அவனை பார்க்கும்போதே அவள் கண்களைக் கவனித்துவிட்டான். “இரண்டு நாளாக அக்கண்கள் அவ்வப்பப்போது அவன் மனதில் தோன்றி மறைந்ததால்” பார்த்த உடனே அவள்தான் என்று மனம்சொன்னதை உறுதிசெய்ய அவளை பின்தொடர்ந்து கொண்டிட்ருந்தான்.

 இதுவரை அவன் எந்தபெண்களின் பின்னும் சென்றதில்லை. அவனைத்தேடி வருபவர்களை அவன் தொடாமல் விட்டதில்லை. அவனுக்கே அவன் செயல் புரியாமல் பின்பு , அவள் தான் பழகிய பெண்களைவிட வித்தியாசமான இயற்கை அழகில் அவள் இருப்பதால், வந்த ஈர்ப்பு ஒருதடவை அவளை நெருங்கிவிட்டால் இந்த ஈர்ப்பு மடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் அவளை பின்தொடர்தான். இப்பொழுது “சீ” என்ற கவிழையாவின் வார்த்தை அவனை சீண்டிவிட்டது.

 வரும்வழியில் முழுவதும் கவிழையா அவனை திட்டிக்கொண்டே வந்ததை பார்த்த வனிதா,அவளை சாந்தப்படுத்தும் நோக்குடன்,

 “கவி நீ இவவளவு அழகாக இருக்கக்கூடாதடி என்றாள்.”

 இப்ப எதுக்குடி அழகைப் பற்றிய பேச்சு வந்தது என காட்டமாக கேட்டாள் கவி.

 இல்ல எனக்கே உண்ண கட்டிக்கணும் போல உள்ளது என்று சொன்னதும், இப்படி பேசிட்டிருந்தேனா ஓடும்வன்டியில் இருந்த்து தள்ளி விட்டுவிடுவேன், என்றாள் கவிழையா.

 இல்ல கவி நீ திட்டுகிறாயே அந்த ஹேன்சம்மேன்.என்று சொன்னதும்

 கவிழையா கூறினாள், உனக்கு ஹேன்சமாக தெரிகிற அவன் எனக்கு விஷச்செடியாக தெரிகிறான். பக்கத்தில் உரிமையானவளை வைத்துக்கொண்டு மற்ற பெண்களை கண்களால் மேயும் இதுபோன்ற “வளர்ந்த மாடுகளை சாட்டையை வைத்து வெலாசித் தள்ளனும்” என்று கூறினாள்.

 அதற்கு தான் சொல்கிறேன் கவி. அவனைப்பார்த்தால் மிகப் பெரியஇடத்து மனிதன் போல தெரிகிறான் நீ எதற்கு அவன் காதிற்கு கேட்பதுபோல் திட்டினாய் கவி! என்றாள்.

 அதற்கு கவிழையா நீவேற “நான் அடிக்காமல் விட்டேனே” என்றாள் .

 அதற்கு வனித்தா அடியே கவி! நீ திட்டியதற்கே அவன் ரியாக்க்ஷனை பார்த்து நான் சினிமாவில் பார்ததுபோல் உன்னை பழிவாங்கும் என்னம் அவனுக்கு வந்துவிடக்கூடாது என கடவுளிடம் மனு போட நினைத்திருக்கிறேன் என்றாள்.

Episode # 01

Episode # 03

தொடரும்

{kunena_discuss:1081}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.