(Reading time: 9 - 18 minutes)

03. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்
Penne en mel pizhai

ஹிந்தனுக்கு தூக்கம் வரமறுத்தது. கண்மூடினால் மாலில் பார்த்த அவள் உருவமே கண்களுக்குள் வந்தது. அதனால், அவள் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது யார்டீ நீ? என்றவன், எழுந்து தன் ஐபோனை எடுத்து மாலில் இருக்கும்போது அவள் அறியாமல் எடுத்த அவளின் நிழல்படத்தை தன்னுடைய விசுவாசியும் நண்பனுமான கதிருக்கு அப்புகைப்படத்தை அனுப்பினான்.

மணியைப் பார்த்தான் இரவு 11:15 என்றது இருந்தாலும் கதிரின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.

தூக்கக் கலக்கத்தில் தன் காதில் தொலைபேசியை வைத்தவன் மஹிந்தனின் குரல்கேட்டதும் தூக்கம் சட்டென விலகி சொல்லு மஹிந், என்ன செய்யனும் என்று கேட்டான்.

அவனது பதிலில் எப்பொழுதும் போல மகிழ்ந்து, உன் மெயிலுக்கு ஒரு பெண்ணின் புகைப்படம் அனுப்பியிருக்கிறேன் அவளைப்பற்றி அணைத்து விபரமும் எனக்கு இரண்டு நாளைக்குள் வேண்டும் என்றான்.

அவளை நேற்று மாலில் மாலை 5 மணிக்கு எடுத்த புகைப் படத்தைத்தான் உனக்கு அனுப்பியுள்ளேன். “மாலில் இருக்கும் கண்காணிப்புக் கேமரா கன்ரோலிங் அறையில் இருந்து உன் தேடலை துவங்கு” என சொல்லி,தொலைபேசியை வைத்தான் மஹிந்தன்.

ஒரு பெண்னை தேடச்சொல்வது இதுவே முதல் முறை. அவ்விசயம் கதிருக்கு விருப்பமானதாக இல்லாவிட்டிலும் அவன் சாகச்சொன்னால் கூட உடனே எப்படிச்சாகனும் என்றுதான் கேட்பேன், என்பதை உணர்ந்த கதிர் அந்த நேரத்தில் தன் தேடலை அந்த மாலில் துவங்க கிளம்பிச் சென்றான்.

மஹிந்தனின் நிழல் போன்றவன் கதிர் என்பதை மஹிந்தனின் அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து இடத்தில் இருப்பவரும் அறிவர். அம்மாலின் பெரும்பான்மையான தளங்களின் ஏக போக உரிமையாளர் மஹிந்தன்

எனவே கதிரை பார்த்த கண்காணிப்பு கண்றோலிங் அறையில் வேலைபார்ப்பவன் மரியாதையாக எழுந்து கதிர் கேட்ட விபரத்தை தேடி கவிழையா ஸ்கூட்டியை பார்க்கிங்கில் இருந்து வெளிக்கொண்டுவரும் போது தெரிந்த அவள் வண்டி நம்பரைக் குறித்துக் கொண்டு வந்தான் கதிர்.

மறுநாள் மதியமே மஹிந்தனின் மேசையில் கவிழையாவின் அத்தனை விபரங்களையும் வைத்தான்.

அதனை எடுத்து பார்த்த மஹிந்தன் முன் பக்கத்தில் இருந்த அவள் புகைப்படத்தின் அடியிலிருந்த கவிழையா என்ற அவள் பெயரை உச்சரித்துக் கொண்டே விரல்களால் படத்தில் இருந்த முகவடிவை தடவினான்..

அவள் கண்கள் அவனைப்பார்து சிரிப்பதுபோல இருந்தது. “ரொம்ப அழகாகத்தான் இருக்கிறாள்” ஆனால் இந்தவாய் என்னை திட்டியதற்கு என்ன தண்டணை கொடுக்கலாம் என்று கூறிக்கொண்டு மற்ற விபரங்களைப் பார்த்தவன் அவள் தன்னுடைய நிறுவனத்தில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவள் என்பதை அறிந்தவுடன் அவன் முகத்தில் ஒரு வெற்றிச்சிரிப்பு தோன்றியது. அவன் உதடுகள் “வீ வில் மீட் அகைன் சூன் பேபி” என்று உச்சரித்தது

ஹிந்தனின் பேலஸ் அன்று மிக அழகாக அழங்கரிக்கப்பட்டிருந்தது வீட்டின் மிக நெருங்கிய சொந்தங்கள் மட்டும் கூடிஇருந்தனர் பணியாளர்கள் அனைவரும் உற்சாகமாக பரபரப்புடன் பணிபுரிந்து கொண்டு இருந்தனர் .

மஹிந்தனின் நிச்சயதார்த்ததுக்கு ஐஸ்வர்யாவின் இல்லம் நோக்கிசெல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தனர். மஹிநதனின் செக்ரட்டரி அந்த நிச்சயதார்த்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சரிபார்த்து தேவையான உத்தரவுகளைப் பணியாளர்களுக்கு பிறப்பித்துக்கொண்டு இருந்தாள்.

மஹிந்தன் கண்ணாடிமுன் நின்று தன் தோற்றத்தை சரிபார்த்துக் கொண்டிருந்தான். அவனை பொருத்தவரையில் அவ்வைபவம் தனது அந்தஸ்த்தை மற்றவர்களுக்கு பறைசாற்றும் ஒரு நிகழ்வாக மட்டுமே உணரமுடிந்தது. அதனால், அதன் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தான்.

அவனாக இதுவரையில் ஐஸ்வர்யாவிடம் பேசியதில்லை. அதற்காக கோபித்துக் கொண்டு ஐஸ்வர்யா இருந்ததில்லை. ஐஸ்வர்யாவே அவனைப்பார்க்க அவன் இருக்கும் இடத்திற்கு வந்துவிடுவாள். ஆனாள் மஹிந்தன் அன்று மாலுக்கு கூட்டிப்போனதற்குப் பின் வேறு எங்கும் அவளை வெளியே கூட்டிச் செல்லவில்லை.

அதை அவள் வன்மமாக மனதில் பதித்திருந்தாள். கல்யாணத்திற்க்குப் பிறகு அதனை ஈடுகட்ட முடிவுசெய்திருந்தாள். அன்று அவனுடன் சென்றபோது கிட்டிய மரியாதையும் கிடைத்த பரிசுப்பொருட்களும் அவள் நண்பர்களின் இடத்தில் அதிகரித்த அவளுடைய அந்தஸ்த்தும் அவளை போதை கொள்ள வைத்திருந்தது.

பார்த்தீபன் வீட்டின் மேல் தளம் முழுவதும் ஆடம்பரமாக அழகாக அழங்கரிகப்பட்டிருந்தது. இன்னும் நிச்சயதார்த்தம் ஆரம்பிக்கக்கூடிய நேரம் வர அரைமணிநேரம் இருக்கும்போது மஹிந்தனின் கார் அங்கு வந்துசேர்ந்தது காரிலிருந்து இறங்கிய மஹிந்தனை ஆராத்தி எடுத்து அழைத்துவந்தனர் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.