(Reading time: 7 - 14 minutes)

03. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

"வி!"

"..........."

"பவி!"

"..........."

"பவி!"

"தாத்தா!பாட்டி தூங்கிட்டாங்க!"-வெறுப்பானவள் கூறினாள்.

"தூங்கிட்டாளா?என்ன இதுக்குள்ள தூக்கம்?"

"உன் தொல்லை தாங்க முடியலையாம் அதான்!"

"என்ன பேபி சொல்ற?"-அதிர்ச்சியாக கேட்டார் அவர்.

"கண்றாவி..!நீ ரொம்ப மொக்கை போடுறீயாம் அதான் போய் தூங்கிட்டாங்க!"

"அப்படியா?ஆமா...கீதா எங்கே?"

"அக்கா இன்னும் வீட்டுக்கு வரலை!"

"வரலையா?என்ன இவ்வளவு நேரமாகுது?"

"பனி ஓவரா இருக்குதுல்ல,அதான் அக்காவால கார் ஓட்ட முடியலையாம்!ஹாஸ்பிட்டல்ல தங்கிட்டா!"

"அதுக்கு?குழந்தை சாப்பிட்டாளான்னு தெரியலையே!"

"ஆமால்ல!நான் அதை யோசிக்கவே இல்லை!"

"மூளைன்னு ஒண்ணு தலைக்குள்ள எதுக்கு தான் உனக்கு இருக்கோ!லைப்ல கொஞ்சமாவது அதை யூஸ் பண்ணு பேபி!"

"வேஸ்ட் ஆயிடும் தாத்தா!"

"உங்கப்பா புத்தி!"

"அப்பாவா?ஐயயோ..சொல்ல மறந்துட்டேன்!அக்கா!நிரந்தரமா ஊருக்கே போக சம்மதித்துவிட்டாள்.அவளே போன் பண்ணி அப்பாக்கிட்ட சொன்னாளாம்!"

"நிஜமாவா?எப்படி உங்கக்கா அந்த கிளினிக்கை விட்டு வர சம்மதித்தாள்?"

"தாத்தா?"

"நான் நினைக்கிறது தான் நீயும் நினைக்கிறீயா பேபி?"

"ஆமா தாத்தா!"-ஒருவரை ஒருவர் சில நேரம் பார்த்தவர்கள்,பின்,வாய்விட்டு சிரித்தனர்.

"நாராயணா!இப்படி அர்த்த ஜாமத்துல இரண்டுப்பேரும் பேய் மாதிரி சிரிக்கிறீங்களே!உங்களுக்கே நியாயமா?"-என்று கரித்தப்படி வந்தார் பவித்ரா.

"ஏன் செல்லம்?நீ இன்னும் தூங்கலை?"

"நீங்க பேசுறது தான் 7 தெருக்கு கேட்குதே!எனக்கு கேட்காதா?"-என்றப்படி நாற்காலியில் அமர்ந்து,நீரை அருந்தினார்.

"ஹலோ!"-அங்கே அமர்ந்திருந்த இளம் கன்னிகைக்கு அழைப்பு வர அவள் அதில் கவனம் செலுத்தினாள்.

மனதில் ஏதோ உறுத்த தன் கணவனை நிமிர்ந்து பார்த்தார் பவித்ரா.அதுவரையில் அவரது முகத்தையே பார்த்திருந்தவர்,சட்டென கண்ணடிக்க,பொறை ஏறிவிட்டது பவித்ராவிற்கு!!

"ஏ..ஏ..நான் இங்கே இருக்கேன்!"-என்று விஷமமாக புன்னகை பூத்தப்படி அங்கிருந்து நகர்ந்தாள் ஆராத்யா.

"லோ!என்ன மாமா இந்த நேரத்துல போன் பண்ணிருக்க?"-மெல்லிய குரலில் பேசினாள் அவள்.

"இந்த நேரத்திலா?மை டியர் ஸ்வீட் ஹார்ட்!மணி இங்கே 9 தான் ஆகுது!"

"இங்கே நைட் மாமா!"

"பரவாயில்லை செல்லம்!நீ பேசு!!"

"என்ன இன்னிக்கு ரொம்ப ஐஸ் வைக்கிற?"

"நீ எப்போடி ஊருக்கு வருவ?"

"ஏன்?என்னை பார்க்காம ஏங்கிப் போயிருக்கியா?"

"ரொம்ப...6 வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது!"

"ம்...ரொம்ப தான்!"

"போடி!மாமா சொன்னார்!கீதா ஊருக்கு வராங்களாமே!"

"ஆமா மாமா!எனக்கு இப்போ தான் சந்தோஷமா இருக்கு!ஒரு வழியா அவ எல்லாத்தையும் மறந்துட்டா!ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!"

"வீட்டில யாருக்கும் இது தெரியாது தானே!"

"தெரியாது மாமா!ஆதி தாத்தா இதைப்பற்றி யார்கிட்டயும் பேச வேணாம்னு சொல்லிட்டார்!"

"சந்தோஷம்...எங்கே நீ உளறிடுவியோன்னு பயந்தேன்!"

"எது?நானா?"

"ம்...பொண்ணுங்க எந்த விஷயத்தை ரகசியமா வைத்திருக்காங்க சொல்லு!"

"ஓவரா பேசுற?போனை வைத்திடுவேன்!"

"ஏ..அதை கொடுத்துட்டு வைடி!"

"எது?"

"அதான்...அது!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.