"கண்ணா!"-ஆறுதலான அம்மொழியை கேட்டதும் அவன் முகத்தில் அவ்வளவு தாபம்!!எதைக் குறித்தும் சிந்திக்காமல் ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.அவன் மனம் துணுக்குற்றது.அவனது அணைப்பினில் தெரிந்த ஏக்கம்,அச்சிறுவன் மீது தனி அன்பினை பொழிய தூண்டியது.
"மா!நீ என்னை விட்டு எங்கேம்மா போன?அப்பா என் கூட பேசவே மாட்றார்மா!"-அவள் அதிர்ந்துப் போனாள்.
"மா..!பேசும்மா!"-இல்லை...தற்சமயம் அவனுக்கு மருத்துவம் அவசியம்!!ஆதலால்,தன் தனிப்பட்ட இச்சையை கட்டுப்படுத்துவது அவசியம்!!
"இதோ கண்ணா!அம்மா எங்கே போயிட்டேன்!இங்கே தான் உன் கூட தான் இருக்கேன்!"
"இல்லை...நீ இப்போ தான் என் கூட பேசுற?"
"என் செல்லமே..நீ பயந்துப் போயிருக்க!அதான் இப்படி பேசுற!"
"அம்மா!அப்பா என் கூட பேசவே மாட்றார்மா!"-அவன் கூற கூற,அ்த கல் நெஞ்சக்கார தந்தை யாரென்ற ஐயம் எழுந்தது அவள் இதயத்துள்!!
"அப்பா என்னடா செல்லம் பண்றார்?"
"பிசினஸ் விஷயமா போயிருக்காரும்மா!"
"ஓ...சரி அம்மா ஒரு கேள்வி கேட்கட்டாப்பா?"
"ம்..."
"அப்பா பெயர் சொல்லு பார்ப்போம்!"
"ருத்ரா!"-அவள் முகம் இறுகியது.
"எனக்கு அப்பா ஆபிஸ் பெயர் கூட தெரியும்மா!"
"அப்படியா கண்ணா?எங்கே அம்மாக்கு சொல்லு பார்ப்போம்?"
"ருத்ரா என்டர்பிரைசஸ்!"
"ஓ..சூப்பர் கண்ணா!என் செல்லம் ரொம்ப புத்திசாலி!"-அவனது நெற்றியில் முத்தமிட்டாள் கீதா.
"பரத்!"-நடந்து முடிந்ததை எண்ணிக் கொண்டிருந்தவள்,தன்னை மீறி கத்திவிட்டாள்.
மனம் முழுதும் அவ்வளவு வேதனை!!நொடிந்துப் போனவள்,கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.
"கடவுளே..!நான் என்ன செய்வேன்?ஏன் இப்படி என் வாழ்க்கையோட விளையாடுற?நான் என்ன பாவம் செய்தேன்?"-மனம் நொடிந்தாள் அவள்.
அதிகாலை பொழுதினில் ஆதவ உதயமானது,மனதின் அனைத்து அச்சங்களையும் போக்க வல்லது.இருள் சூழ்ந்த நிலையில் சூரிய ஔியானது,மனதிற்கு நம்பிக்கையை நல்குகிறது. வாழ்வினில் இன்னலானது சூழும் சமயம் மனமானது நம்பிக்கை என்னும் சூரிய ஔிக்காக ஏக்கம் கொள்கிறது!!மனம் கொள்ளும் அவ்வித ஏக்கம்,நம்மாளும் அறிய இயலாத ஒன்றே!!நான் எதையும் தாங்குவேன் என்பது,வலிகளின் வார்த்தை!அது நம்பிக்கைக்கு உரியது அல்ல!!மனம் ஒடுங்கும் சமயம் கண்ணீர் விட்டு கதறி அழும் மனிதரே இறுதியில் மனவுறுதியை தனதாக்குகிறார்.வேதனை சூழும் சமயம் கண்ணீர் விடாமல் மனதினை காயம் செய்யும் செயல்,மனதிலை பலவீனமாக்குமே அன்றி,அதனை தேற்றாது என்பதே நிதர்சனம்!!!
தொடரும்
{kunena_discuss:1070}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.