(Reading time: 7 - 14 minutes)

"தான் எது?"

"மரமண்டை!"

"மாமா!"

"கொடும்மா!ரொம்ப நாளாச்சு ப்ளீஸ்!"

"ம்..."-எதேர்ச்சையாக அவள் திரும்ப,அவள் செவிக்கருகே செவி வைத்து,எதையோ கேட்க முயன்று கொண்டிருந்த நிரஞ்சனை கவனித்தாள்.

"தாத்தா!"-அதிர்ச்சியோடு இணைப்பைத் துண்டித்தாள்.

"பவி...இங்கே கொசு தொல்லை தாங்க முடியலை!சீக்கிரமே ஊருக்கு போயிடலாம்!"-என்றப்படி அங்கிருந்து புறப்பட்டார் அவர்.

"ஐயோ!"-முகத்தில் நாணம் வழிய,தன் அறைக்குள் ஓடினாள் அவள்.

"துதான் நீங்க குழந்தையை வளர்க்கிற லட்சணமா?ஹி இஸ் ஸப்பரிங் ஃப்ரம் ஸைக்கிக் டிஸ்ஸாடர்!"-அக்னி பார்வையோடு கலந்த தீப்போன்ற சொற்கள் அவனது மனதினை வெகுவாக பலமிழக்க வைத்தன.

தனதருகே அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த தான் ஈன்ற புதல்வனை கண்டான் ருத்ரா.

"இவன் என்ன செய்தான்?ஆயிரம் இருந்தாலும்,இவன் எனது புதல்வன்!இவன் தாய் செய்த தவறுக்காய் இவனை நான் ஏன் தண்டிக்கிறேன்!"-மனம் சுருக்கென்று தைத்தது.

"இது ரொம்ப கொடுமையான மனநோய்!இது சின்ன வயசுல யாரையும் தாக்காது!ஆனா,உங்க பையனுக்கு வந்திருக்கு!அதுக்கு காரணம் யாரு?இது தற்கொலை அளவுக்கு கூட்டிப் போய் விடும்!"-அவள் கூறியது கன்னத்தில் அறைவதாய் தோன்றியது அவனுக்கு!!

அவன் மௌனமாக எழுந்து,பலகனி வழியே வான் நிலவை கண்டான்.

"எப்படி உங்களுக்கு இந்தக் காரியம் பண்ண தோணுச்சு?இதுதான் உங்க காதலா?"

"என் காதல் செத்துப்போச்சு!இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை!இனி எந்த சூழலிலும் என் முன்னாடி வந்துவிடாதீங்க!உங்களைப் பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்கு!"-மனிதனான் நான் மிருகமாகியதன் காரணம்,என் தாய்!!

என்ன பிராப்தம் கண்டார்??இன்று ஒருவரும் நிம்மதியாய் இல்லை...தவறேதும் இழைக்காத,இம்மழலையும் தண்டனை அனுபவிக்கின்றான்!!

இப்போது நான் என்ன செய்வேன்??

என் புதல்வனை எவ்வாறு காப்பேன்??

இதற்கான வழியை அவன் தேடி அலைந்த சமயம்,புலப்பட்டது ஒன்றே...!

"மனோ!"

"..........."

"மனோ!"-அவசரமாக மனோவை அழைத்தான் அவன்.

"ச்சீப்?"

"இந்தியாவுக்கு போகணும்!டிக்கெட் புக் பண்ணு!இனி அமெரிக்கா வர போறதில்லை!என் பழைய வீட்டை ரெனவேட் பண்ண ஏற்பாடு பண்ணு!"

"ஆனா ச்சீப்!நம்ம கம்பெனி டீல்?"

"எல்லாத்தையும் கேன்சல் பண்ணு!"

"ஆனா,இதனால் நிறைய லாஸ் ஆகும்!"

"எவன் வேணும்னாலும் சாகட்டும்!நான் பழி வாங்கி கிழித்ததெல்லாம் போதும்!எனக்கு என் பையன் முக்கியம்!"-மனோவின் முகம் பிரகாசித்தது.

"எல்லா ஏற்பாடையும் உடனே செய்யுறேன் ச்சீப்!"-உற்சாகமாய் சென்றான் அவன்.

தனிமையில் உழன்றவன் தான் ஈன்ற புதல்வனின் அருகே அமர்ந்தான்.தன்னிச்சையாக அவன் கண்கள் கசிந்தன.

"ஐ ஆம் ஸாரி..!ஐ ஆம் ஸாரி விஷ்வா!"-தன் புதல்வனை இறுக அணைத்து அவனது நெற்றியில் முத்தமிட்டான் அவன்.

னது மருத்துவ தனியறையில் நிம்மதியின்றி உழன்றுக் கொண்டிருந்தாள் கீதா.மனம் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

"மேடம்!இவன் என் பாஸோட பையன்!கொஞ்ச நாளா தனிமையில ஏதேதோ பேசிட்டு இருக்கான்.சம்பந்தமே இல்லாம அழுகிறான்!இ..இன்னிக்கு திடீரென்று மாடியில இருந்து குதிக்க போயிட்டான்!"

"வாட்?இவன் அப்பாம்மா எங்கே?"

".............."

"சொல்லுங்க மிஸ்டர்!"

"அவனுக்கு அம்மா கிடையாது!அப்பா வரலை மேடம்!"

"வரலையா?"

"ம்..!"

"ஓ.கே.நீங்க வெளியே இருங்க!நான் குழந்தைக்கிட்ட தனியா பேசணும்!"

"ஓ.கே!"-மனோ வெளியே சென்றதும்,எங்கோ வெறித்திருந்த அப்பிஞ்சு முகத்தினை கண்டாள் கீதா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.