(Reading time: 7 - 14 minutes)

"நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது!சுப்ரியாவோட ரிலேஷன்ஸ்,ப்ரண்ட்ஸ்,காலேஜ் மேட்ஸ்,சீனியர்ஸ்,பிரப்பசர்ஸ் எல்லாரையும் விசாரிங்க!இரண்டு நாள் தான் டைம்,அவங்க மொத்த பேரோட வாக்குமூலமும் சி.டி.யில காப்பியாகி என் டேபிளுக்கு வரணும்!"

"ஓ.கே.மேடம்!"

"தயவுசெய்து அந்தப் பொண்ணை உங்க தங்கச்சி மாதிரி நினைத்து சீக்கிரம் ஆக்ஷன் எடுங்க சார்!"

"எஸ் மேடம்!"-நிர்பயா கோபமாக காரை கிளப்பினாள்.

"சுப்ரியாவோட கேஸை ஹேண்டல் பண்றவன் யாரு?"-மர்மமாக ஒலித்தது அந்தக்குரல்.

"இந்தியாஸ் லீடிங் அட்வகேட் ஜோசப் வில்மட்!"

"வாட்?அவனுக்கு பீஸ் கொடுக்கவே அந்த மதுசூதனன் தன் சொத்தை விற்கணும் போல!"-பலமாக சிரித்தது அந்தக்குரல்.

"இல்லை..அந்த லாயர் பத்து பைசா கூட அவளுக்காக வேணாம்னு சொல்லிட்டான்!தானே தன்னிச்சையா வந்து இந்த கேஸை எடுத்திருக்கான்."

"என்ன?அவளுக்கு அவன் என்ன வேணும்?இவ்வளவு உருகுறான்?"

"னக்கு ஒரு தங்கச்சி இருந்து அவளுக்கு இந்த நிலை வந்திருந்தா?நான் வேடிக்கை பார்த்துட்டு இருப்பேனா அம்மூ?"-நிர்பயாவிடம் எடுத்துரைத்தான் ஜோசப்.

"அந்த நியூஸை பார்த்ததும்,உயிரே ஒடுங்கிடுத்து!எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும் அவளுக்கு?போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட்டை படித்ததும் கதி கலங்கி போச்சு!"

"............."

"எனக்கும் ஒரு அம்மா இருந்தாங்க!ஒரு பொண்ணோட தாய்பாலை குடித்து வளர்ந்தவன் தான் நான்!நான் காதலிக்கிறவளும் ஒரு பொண்ணு தான்.ஒரு பொண்ணை எந்த அளவு மதிக்கணும்னு எனக்கு தெரியும்!அதான்,நானே இந்த கேஸை வாலட்டிரியரா எடுத்தேன்!"-அவனது பேச்சை கேட்டவளின் முகத்தில் பெருமிதம் பொங்கியது.

"ஆனா,எப்படி இந்த கேஸை முடிப்பீங்க?கொலையாளிக்கான ஆதாரமே கிடைக்கலையே!"

"என்னிக்கும் உண்மை தூங்காது.இதை நீதான் அடிக்கடி சொல்லுவ!அதையே நானும் இப்போ உன்கிட்ட சொல்லுறேன்!"-அவனிடம் தெரிந்த இந்த மாற்றம் உண்மையில் அவளை பிரமிக்க வைத்தது.

அதுவரையில் அப்பெண்ணிற்கு நியாயம் கிட்டும் என்ற நம்பிக்கை துளியும் நிர்பயாவிடம் இல்லை.ஆனால்,அக்கணம் அவனால் துளிர்க்கப்பட்ட நம்பிக்கை இனி அவளது நியாயத்தை யாரும் தளர்த்த இயலாது என்ற உறுதியை நல்கியது.

பார்வதியின கூற்று பல்லவியின் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது.

"நிர்பயா ஒருத்தனை காதலிக்கிறா!அவருக்கும் அந்த பையனை பிடித்துவிட்டது.அவர் பேசி முடிக்க ஆசைப்படுறார்!"-இவ்வார்த்தைகள் பல்லவிக்கு தான் ஈன்ற புதல்வியின் மேல் சினத்தையே தூண்டின.

"என்ன காரியம் செய்தாள் இவள்?அவருக்கு இச்செய்தி தெரிந்தால்??மனம் திருந்தி இருப்பவர் மீண்டும் பகை பாராட்ட வேண்டி வருமே!அதிலும் அவன் வேற்று மதத்தவன் அல்லவா?"-மனதில் ஒரு சறுக்கல்.

"பல்லவி?"

"ஆ...சொல்லுங்க அத்தை!"

"என்னாச்சு?"

"அம்மூவை நினைத்து வேதனைப்படுறேன்!அவ மாறிட்டா,அவ என் மகளாகவே இல்லை.அவ தன்னோட வாழ்க்கையை தானே முடிவு பண்ண ஆரம்பித்துவிட்டாள்!எனக்கு பயமா இருக்கு அத்தை!எங்கே அவ எனக்கு தூரமாகிவிடுவாளோன்னு பயமா இருக்கு!"

"அவ ஏன்மா தூரமாக போறா?என் பேத்தி திரும்பவும் வருவா பாரு!இந்த மொத்த ராஜ்ஜாங்கத்தை ஆள போறவ அவ தான்!"-பெருமையாக விசாலாட்சி கூற,குறுக்கிட்டு லட்சுமியின் குரல்.

"எல்லாத்தையும் அவ ஆள போறாளா?அப்போ என் பிள்ளைங்க என்ன அவளுக்கு எடுப்பிடி வேலை செய்வாங்களா?"

"ஏன் செய்தா என்ன தப்பு?உன் பசங்க நல்லப்படியா வாழணும்னா அதை தவிர வேற வழியில்லை.அவக்கிட்ட மனசார மன்னிப்பு கேட்டா,அவ உங்க பாவங்களை மன்னிப்பா!அப்போதாவது புண்ணியம் கிடைக்கட்டும்!"

"பார்டா!ம்..என் பையன் கஷ்டப்பட்டு உழைப்பான்.அதை நீ அவ காலடியில கொட்டுவியா?"

"இங்கே பாரும்மா!இது சங்கர் உழைத்தது.உன் பையன் இல்லை.அதே சமயத்துல இன்னொன்றையும் சொல்றேன்!இந்த சொத்து மொத்தம் வேதாச்சலம் ப்ராப்பர்டிஸோடது!அது என் கணவர் உருவாக்கினது.அது இப்போ என் பெயரில தான் இருக்கு!நான் யார் பெயருக்கு அதை மாற்றுகிறேனோ அது அவங்களை தான் அடையும்!சங்கருக்கோ,உனக்கோ இதில பத்து பைசாக்கூட சொந்தம் கொண்டாட முடியாது!"-பொறுமையாக அவர் எடுத்துரைக்க,ஆடி போனார் லட்சுமி.

"எனக்கு தைரியம் இல்லாம தான் இருந்தது.எப்போ நிர்பயா துணிந்து தன்னை நிரூபித்தாளோ,அப்போ எனக்கு தைரியம் வந்தது.நீ வேணும்னா நடக்கப்போறதை பாரேன்!"-ஏளனமாக கூறினார் விசாலாட்சி.

நிச்சயம் அது லட்சுமியின் மனதினில் சாட்டையை சொடுக்கிருக்கலாம்!!

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.