(Reading time: 35 - 69 minutes)

மேலும் ராகா வீட்டில் தனியாய் இருக்கும் ப்ரியாவைப் போய் பார்ப்பது பக்கத்து வீட்டினருக்கே கூட நன்றாய் தோன்றாமல் இருக்கலாம்….. எல்லாவற்றிற்கும் மேலாக இவனைப் பார்த்தால் எரிந்து விழுவாள் இவனது ரியா…பார்க்காவிட்டால் கொஞ்சம் நிம்மதியாய் இருப்பாள்  இல்லை எனில் அபூர்வத்திலும் அபூர்வமாக இவனை தேட கூட செய்யலாம்…

இப்படி பல காரணங்களால் இவன் அவளைப் பார்க்காமல் இருந்த நிலைக்கு அவள் இன்று இவனுடன் இவனுடையவளாக எனும் இந்த நிலை…..நிச்சய நிச்சயமாய் மகிழ்ச்சியானதுதான்….

தான் நின்ற இடத்தில் இருந்து தூரத்தில் படுக்கையில் படுத்திருப்பவளை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன்….

மெல்ல அவளருகில் சென்று ஒரு கணம் நின்றான்…. 

இப்போதும் ஒரு வித வெண் நிற புடவைதான் உடுத்தி இருந்தாள்…. அங்காங்கு கையகல வட்ட ஜரிகை வேலைப்பாடுடன் அழகாய் இருந்த அது….அவள் வெண் பாதங்களை மட்டும் தெரியவிட்டு அவளை மூடி இருந்தது….

பஞ்சு பொதிக்குள் படுத்திருக்கும் பால் நிலா போல் அவள்……

அவளது கண்களைப் பார்த்தான்….. தூங்கிவிட்டாளா இல்லையா என முடிவுக்கு வர முடியவில்லை…

 குளிர்கிறதோ அவளுக்கு? இப்படி சுருண்டிருக்கிறாளே என்றிருக்கிறது….. ஆனால் அதை கேட்கவென தூங்குபவளை எழுப்பி விடக் கூடாது….

சற்று நேரம் கண் இமைக்காமல் அவளையே பார்த்திருந்தவன்….இப்பொழுது மெல்ல அவள் பாதம் நோக்கி கை நீட்டினான்… கால் குளிர்ந்தால் அவளுக்கு குளிர்கிறதென அர்த்தம் தானே…

“தொடமாட்டேன்னு சொன்னது நியாபகம் இருக்குதானே…” வெட்டியது போல் கேட்டது அவன் வைஃப்தான்…

சட்டென தன் கையை நிறுத்திக் கொண்டவன், சின்ன சிரிப்புடன் அங்கிருந்து விலகிப் போனான். நேராக சென்று ஏசி ரிமோட்டை எடுத்து ஏசியை ஆஃப் செய்துவிட்டு….. அறையின் மறு கோடியில் கிடந்த ஒரு  சோஃபவில் போய் படுத்துவிட்டான்….

அவன் செயல்களை  கவனித்துக் கொண்டே படுத்திருந்தாள் ரியா…..

சற்று நேரம் செல்ல……எழுந்து அவன் படுத்திருந்த சோஃபா அருகிலேயே நடக்க ஆரம்பித்தான் விவன்.

அறை மிக விஸ்தாரமானது என்பதால் அங்குமிங்குமாக பல ஃபேன்ஸ் இருந்தாலும் இந்த சோஃபவுக்கு காற்று வரும் வண்ணம் எதுவும் இல்லை….. சோஃபாவின் சூடும் சேர்ந்து  அவனுக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது….

‘அதுவும்  இந்த நிம்முவோட பிடிவாதத்துல பட்டு வேஷ்டி சட்டை வேற…..’ இன்னும் சிறிது நேரம் சமாளித்துப் பார்த்தவன்…

அவன் நின்ற  இடத்திலிருந்தே ரியாவை கவனித்தான். அவ விழிச்சுறுக்கப்ப இவன் ஷர்ட்டை கழற்ற அதுக்கு வேற என்ன மாதிரி ரியாக்ட் செய்வாளோ?? அவளிடம் அசைவே இல்லை…… மெல்ல தன் ஷர்ட்டை  கழட்டிவிட்டு மீண்டும் சோஃபாவில் படுத்துக் கொண்டான்….

சில நிமிடங்கள் கழித்து இப்போதும் முதுகிலிருந்து மேலே ஏறியது சூடு….

இப்போது இவன் எழும் முன்னும் வெடு வெடு என எழுந்து போய் அவன் அருகிலிருந்த ரிமோட்டை வெடுக்கென எடுத்து ஏசியை ஆன் செய்துவிட்டு மீண்டுமாய் வந்து பெட்டில் படுத்துக் கொண்டாள் ரியா…..படுக்கையிலிருந்த குல்டால் தன்னை இழுத்து மூடினாள்…..

“ஹேய்…எனக்காக பார்க்காத ரியா….ஐ கேன் மேனேஜ்…. உனக்கு குளிருதுதான..?” இது விவன்…

“எனக்காக ஒன்னும் தியாகம் செய்ய வேண்டாம்…” மீண்டும் ஒரு வெடுக்  ரியாவிடமிருந்து…

“ப்ச்...என்ன ரியு இது…? உனக்கு கஷ்டமா இருக்கப்ப நான் எப்டி தூங்க….?”  அவன் இப்போது ஏசியை ஆஃப் செய்தான்…

“ஏன் இவ்ளவு நாள் தூங்கினீங்கல்ல அப்டிதான்….. ஏழு நாளும் கண்மணிய அனுப்பி என்ன பாடா படுத்திட்டு உங்களுக்கு தூங்க முடிஞ்சிதுல்ல…” பொரிந்தபடி போய் ஏசியை ஆன் செய்திருந்தாள்……

 சட்டென எழுந்து உட்கார்ந்துவிட்டான் விவன்…..  

அவன் தங்கையை ரியாவுக்கு பிடிக்கவில்லை என கேட்க அவனுக்கு எப்படி இருக்கிறதாம்…

அருகில் நின்றிருந்தாள் அல்லவா ரியா….அவளுக்கு அவன் முகபாவம் பார்க்கவும்தான் தன் வார்த்தை அவனுக்கு என்னதாய் புரிந்திருக்கும் என மெல்ல உறைக்கிறது…..

அவ்வளவுதான் கட கடவென அவள் சொல்ல வந்த அர்த்தத்தை….ஏழு நாளில் அவள் பயந்த பயத்தை…… கண்மணியின் மாமியாரின் கடுகடுப்பை…..இவன் எப்படிபட்ட வீட்டுக்கு தன் தங்கையை திருமணம் செய்து கொடுத்திறுக்கிறான் என்பதை…..கடைசியாக அந்த கார் கிஃப்ட் வரை எல்லாவற்றையும் சொல்லி….. இவனை திட்டி தீர்த்துவிட்டாள்….  இடையில் ஒரு வார்த்தை இவனை பேசவிடவில்லை

தன்னிடமே தன் தங்கைக்காக பொரிந்து கொண்டிருப்பவளை ரசிக்க ரசிக்க  பார்த்துக் கொண்டிருந்தான் விவன்….

புரிய புரிய இன்னுமாய் சுகிக்கும் இசை போல் இவள்….

ஓர் நிலைக்கு மேல் பேச்சை நிறுத்திவிட்டாள் ரியா…. பின்னே அவன் தீர்க்கமா தீர்மானமா சைட் அடிக்கான்னு இவளுக்கும் புரியுதே…

முறைத்தபடி உதடுக்குள் எதையோ முனங்கியபடி அவள் அங்கிருந்து அகன்று செல்ல….

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.