(Reading time: 35 - 69 minutes)

ன் வாள் நுனியால் சடுதியாய் அதை அழித்துப் போட்டவன்…

“ருயமரே மன்னிக்கவும்…ஒரு உதவி….நம்மவர் அனைவரும் போஜனத்திற்காய் மேல் தளம் சென்றிருக்கின்றனர்….அழைத்து வருமளவு அவகாசம் தராது இவ் விஷக் கடி….” அவனது   அதரங்களுக்கு இடையில் மரண வலியை மறைத்துப் போட்டபடி அவன் பேசுவது  இவளுக்கு புரியாமலில்லை….

இவள் புறமாய் முதுகு திருப்பி……தன் மேல் வஸ்திரமான அந்த நீண்ட துகிலை தளர்த்தினான்…. கவசமற்ற அவனது வெற்று முதுகில்…. ஒரு விரல்கிடை அளவில் சதை பிளவு…..இவள் பார்த்துக் கொண்டிருக்கும் இவ்வினாடி கூட அது இன்னுமாய் இரு புறமாய் நீண்டு கொண்டு போக….. அப் பூச்சியின் வீரியம் இவளுக்கு புரிகிறது…

“காயத்தில் சடுதியாய் உமது உமிழ் நீரை வையும் ருயமரே…. அது ஒன்றுதான் இதை உடனடியாக நிறுத்தும்….”

உமிழ் நீரையா…? ஆடவன் உடலை தீண்டவா…? என்றெல்லாம் இவளுக்கு எண்ணம் தோன்றவில்லை என்றாலும்….. அவளால் மானகவசனை நெருங்கவோ தீண்டவோ இயலவில்லை….

பெண்மை பிரளயம் செய்தது….

“ருயமரே இது மருத்துவம்….உதவிகோருகிறேன் நான்…” அவன் ஊக்கினான்..

இவளும் மருத்துவம் பயின்றதுண்டு…. சீன மருத்துவத்தில் இதற்கான மருத்துவம் அப்படித்தான் சொல்லப் பட்டிருக்கிறது என அறிந்திருக்கிறாள்….

முயன்று வருவித்து உமிழ்நீரை தன் விரலில் எடுக்க முயன்றாள்….

வெகு நேரமாய் நீரின்றி உணவின்றி அமர்ந்திருந்தவள் அல்லவா…..மேலும் தற்போதைய சூழ்நிலையின் தவிப்பு… காய்ந்திருந்தன அவள் வாயும் அதரங்களும்….

“உமது நாவை இடக் கன்னம் தொடங்கி  மேல் அதரத்தின் அடியாக சுழற்றி வலக்கன்னம் கொண்டு வாரும்…” மானகாவசன் இவள் நிலை புரிந்து சீன மருத்துவத்தில் உமிழ்நீர் சுரப்பை தூண்ட என்ன செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளதோ அதை கூறிக் கொண்டு போனான்..

“தாமதியாதேயும் ருயமரே….”

கண்முன் வெகு வேகமாய் தோல் பிரிய பிரிய நீண்டு கொண்டு போகும் காயத்தை காணவும்…

இவளும் வேக வேகமாக முயன்றாள்….

ஆனாலும் உலர்ந்திருந்த வாய் ஒத்துழைக்கவில்லை…

“முடிந்ததை நேரடியாய் உமிழும்….விரலில் எடுத்தெல்லாம் விரயம் செய்யாதீர்…. நீண்ட நேரம் உணவருந்தா நபரின் உமிழ்நீரின் மருத்துவ குணம் அதிகம் என்று சொல்லி இருக்கிறார்கள்….இருப்பது போதும்…” இவள் முகம் காணாமல் இவளுக்கு முதுகு காட்டி நின்றாலும்….

இவள் நிலையை முற்றிலும் அறிந்து  பேசினான் மானகவசன்.

உமிழவா????!!!

ஆனால் காயம் பரவுகிறதே….!!!

அவன் பரந்த முதுகில் தன் இடக்கையை ஊன்றி…. அவன் இறுகி இருந்த முதுகுப் பரப்புக்கு வெகு வெகு அருகாக குனிந்து…..இவள் உமிழ முயல….

அந்த அளவிற்கு நீராக வாயில் எதுவும் இல்லை என்ற வகையில்…..ஏன் எப்படி தோன்றியது என தெரியவில்லை…. அவன் மீது இவள் இதழ் பதிக்க அவளையும் அறியாது முடிவு செய்து குனிந்தாள்…..

ஸ்ஸ்ஸ்…. ஆ “ இந்நேரம் இப்படி ஒரு சத்தத்தில் விழிப்பு வந்துவிட்டது ப்ரியாவுக்கு…. நடப்பது எதுவும் புரியவில்லை…அரை முழுவதும் இருட்டு….மானகவசரை எங்கே….? அவர் காயம் என்னவாயிற்று? மரணகாயமாயிற்றே அது!!!!

 இவள் பெட் பக்கத்தில் நின்று கொண்டிருந்த விவன் கண்ணில் பட்டான். அவன் முகத்தில் மறைக்கப்பட்ட வலியின் முழு அடையாளம்…. இவள் கண்களில் மானகவசரின் விரிந்து பரவும் காயம்….

விவனைப் பார்த்தால்…..அவன் உதடிலிருந்து எதையோ பிரித்தெடுக்க முயன்று கொண்டிருந்தான்….ஏதோ ஒரு சிறு பூச்சி….இறுக கடித்து பற்றி இருந்தது அவன் கீழ் உதடை… ட்ரைப் பண்ணி விவன் அதை எடுத்துப் போட…..புஸ் என கண்முன் அவ்விடம் வீங்கிக் கொண்டு போக…

வெகு அருகில் நின்று அக்காயத்தைப் பார்த்தவள்….ஏதென்று புரியும் முன் அவன் இதழ்களில் இறங்கி இருந்தாள்…..

விவனுக்கு ஒரு கணம் நடப்பது ஒன்றும் புரியவில்லை….. அனிச்சை செயலை அவளை வேகமாக தள்ள முயன்றவன்…..அடுத்து நடப்பது புரிய ஸ்தம்பித்துப் போனான்…… கூடவே மறு கணம் அவன் மனைவி சற்று நேரத்தில் அவளுடைய இதே செயலுக்காய் எப்படி தவிப்பாள் என உறைக்க அவளை மெல்லமாய் விலக்கி நிறுத்த நினைத்தான்…..

விஷயம் புரியும் நேரம் துடிக்கமட்டும்தான் செய்வாளா? உங்களை பிடிச்சுறுக்கு விவன்னு சொல்லிட்டு அடுத்து அது நியாபகம் வரவும் பீச்சில் நடந்தது போல் கண்மண் தெரியாமல்  இந்த இருட்டு ரூமில் ஓடினால் ??? எதுல விழுந்து வைப்பாளோ?

எப்படியும் அழத்தான் போகிறாள்……அது இவனது கைகளுக்குள் இருக்கட்டும்….

ஒற்றைக்கையால் மென்மையாய் அவளை அணைத்தான்.

அவன் மனைவி….அவனவள்!!!

சற்று நேரத்தில் மெல்ல அவனை விலகியவள்….அவன் நினைத்தது போல் ஆர்பாட்டம் எதுவும் செய்யாமல்…..அவன் மார்பில் புதைந்தாள்…..

இருகைகளாலும் அவளை பொதிந்து கொண்டான் விவன்.

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1063}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.