மூச்சு வாங்க அவனை விட்டு விலகியவள்,”முடியல மாஸ்டர்.ஒரு மூணு நாள் தொடர்ந்து இந்த மாதிரி டான்ஸ் பண்ணேன்னா,எக்ஸசைஸ் பண்ணாமலையே வெயிட் லாஸ் பண்ணிடுவேன்.அப்புறம் பாவம் யஸ்வந்த்.ரொம்ப கஷ்டப்படுவார்”என்று தன்னையும் அறியாமல் யஸ்வந்த்தின் பெயரை உச்சரித்த பின்னரே,அவளுக்கு இன்று தனக்கு திருமணம் என்பதே உரைத்தது.
அதுவரை நிரேஷ் என்பவனின் மாயவலையில் சிக்குண்டிருந்தாள்.அவள் அப்படித்தான்.அவனிடம் மட்டும் அப்படித்தான்.அவனுடன் இருந்தால் அனைத்தையும் மறந்துவிடுவாள்.
இன்னும் சொல்லப் போனால் அதிகம் யோசிக்க மறந்து,அவன் சொல்லுவதற்கெல்லாம் தலையாட்டுவாள்.முட்டாள் பெண்ணல்ல.ஆனால் அவனிடம் மட்டும் அவள் முட்டாளாகவே இருந்தாள்.
யஷ்வந்த் என்னும் மாயவலையிலிருந்து உடனே அவளை காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாய்,”அந்த யஷ்வந்த் உன்னை ஏமாத்திட்டான் பேபி.உனக்கு தான் போலிஸ்,ஆர்மி லைன்ல இருக்கவங்களைக் கண்டாலே பிடிக்காதே.இவன் ஒரு சிபிசிஐடி ஆபிசர்.உன்னை நல்லா ஏமாத்திட்டான்.”என்றதும் அதிர்ந்து போனாள் தான்.
ஆனால் அதைவிட அவனை காதலித்துக் கொண்டிருந்தாளே!!
எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் பெண் என்பதால்,காதலனின் வேலையையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்,”நான் தான் மாஸ்டர் அவரை பஸ் கம்பெனி ஓனர்னு தப்பா நினைச்சிட்டேன்.அப்போ தப்பு என் பேர்ல தானே.அதனால மன்னிச்சு விட்டுடலாம்”என்றதும் இப்போது இவன் அதிர்ந்து போனான்.
அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இதுவல்ல என்பதை உணர்ந்தவன்,அவனது அலைபேசியை எடுத்து உயிர்ப்பித்து,அதிலிருந்த காணொளி காட்சியை உயிர்ப்பித்து அவளிடம் காட்டினான்.
அதில் கால,நேர,தேதிகளுடன் யஷ்வந்த் திருமண மண்டபத்தில் பேசிய காட்சியை மட்டும் காண்பித்தான்.
யஷ்வந்த் பேசிய விதத்தைக் கண்டதும் மனதிற்குள் உடைந்து போனாள்.
‘என்னுடைய காதலியாக வராவிட்டால்’-இதற்கு என்ன அர்த்தம்.
‘மெடிக்கல் செக்அப் செய்யனுமா’-இது என்ன மாதிரியான காதல்!
திருமணத்திற்குப் பின்பு இப்படி ஏதாவது அபாயகரமாக நடந்திருந்தால்,தூக்கி வீசிவிட்டு போய்விடுவானாமா!!
அவளையும் அறியாமல் கண்ணில் நீர் வழிந்துவிட,அதை துடைத்தெரிந்தவள்,நொடியில் கண்ணீருக்கு அணையும் போட்டுவிட்டாள்.
‘எனது காதலுக்கு இவன் தகுதியானவனும் இல்லை.இவனுக்காக இனி கண்ணீர் விடப் போவதும் இல்லை.ஏங்கி தவிக்கப் போவதும் இல்லை’
முடிவெடுத்த பின்னர் நிரேஷை பார்த்து சிரித்தாள்.
“அவன் போறான் மாஸ்டர்.சோடாபுட்டி கண்ணாடிக்கு ரொம்பத்தான் கொழுப்பு..ரொம்பத்தான் பேசறான்’என்றதும் பதிலுக்கு புன்னகைத்தவன்,
“இந்த வீடியோ பொய்யா இருக்குமோன்னு சந்தேகப்பட தோணலையா”என்றதும் சிரித்தாள்.
“பொய்யான வீடியோவுக்கும்,உண்மையான வீடியோவுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும் மாஸ்டர்.அதைவிட உங்க மேல எனக்கு நம்பிக்கையிருக்கு”
அவளது பேச்சைக் கேட்டவனுக்கு விரக்தி புன்னகை எழுந்தது.
இந்த அதீத நம்பிக்கையினால் தானே என்னைவிட்டுப் போனாய்!!
தன்னுடைய சோகத்தை வெளிக்காட்ட விரும்பாதவனாய்,”ஏதாவது சாப்பிடறியா.செய்து தரட்டுமா”என்று கேட்டான்.
“அத அப்புறம் பார்க்கலாம் மாஸ்டர்.வீட்டுல வேற யாருமே இல்லையா.இந்த சோடாபுட்டியோட குணத்தை நிரூபிக்கறதுக்காக,நீங்க இவ்வளவு ரிஸ்க் எடுத்து என்னை கடத்தியிருக்க வேண்டாம்.நீங்க ஒரு வார்த்தை அவன் நல்லவன் இல்லைன்னு சொல்லியிருந்தா,நான் நம்பியிருப்பேனே..நடந்ததெல்லாம் நடந்துடுச்சு.இனி பேசி ஒன்னும் ஆகப் போறதில்ல..ஆனால் கடத்தும் போது அப்பாவையும் சேர்த்து கடத்திட்டு வந்திருக்கலாம் இல்லையா மாஸ்டர்.என்னைக் காணோம்னு ரொம்ப கலங்கிப் போயிருப்பார்”எனக் கவலைப்பட்டாள்.
அதற்கு பதில் சொல்லாமல்,”நாம கல்யாணம் பண்ணிக்கலாமா”என்றதும் வெளிறிப்போனாள்.
அவளது கண்கள் அவனைத்தவிர,அறை முழுவதையும் நிலையில்லாமல் அலைபாய,
மீண்டும் விரக்திப் புன்னகையுடன்,”உன்னை எப்பவும்,எதுக்காகவும் கஷ்டப்படுத்தவும் மாட்டேன்.காயப்படுத்தவும் மாட்டேன்.என் மேல நம்பிக்கை இருக்குதானே”என்றதும் சற்றும் யோசிக்காமல்,உடனே மண்டையை உருட்டினாள்.
“தட்ஸ் மை அவந்தி”என்றவன் அவனது போனை எடுத்து அவளிடம் கொடுத்தவன்,
“அப்பாக்கு கூப்ட்டுப் பேசு.ஊருக்கு வர குறைஞ்சது பத்து நாளாவது ஆகும்னு சொல்லு.உன்னால எனக்கு சில காரியங்கள் ஆக வேண்டியிருக்கு.அதனால தான் சொல்றேன்.