(Reading time: 23 - 45 minutes)

 02. அடையாளம்!!! - ப்ரீத்தி

Adaiyalam

யாரோ ஒருவனுக்காக ஏன் சிறியவள் கூறியதற்கு தனக்கு கோவம் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. அது அன்று நடந்த சம்பவத்தின் மூலம் அவன் மீது ஏற்பட்ட கோவமா அப்படி இருந்தால் ஏன் அவனுக்காக அவள் பரிந்துப் பேச வேண்டும் என்றும் மனம் குழம்பியது. பழைய நாள் ஞாபகம் என்றதும் மீண்டும் மனம் கோவத்தில் மூழ்கியது.

சிறியவள் அவன் யாரையும் திரும்பி பார்த்ததில்லை என்று கூறியதற்கு நேர்மாறாக அவள் உணர்ந்திருக்கிறாள். அவனை முதல் முறை சிறியவள் தூரத்தில் இருந்து காண்பித்த நாளில் இருந்து பல முறை அவனை வெளியே காணும் வகையில் ஆனது. இப்படி தான் ஆகும் போலும் என்று கீர்த்திக்கு மனதில் தோன்றியது, முன்பும் அவர்களை வெளியே பார்த்திருந்தால் கூட நமக்கு தெரியாது ஆனால் யாரேனும் சுட்டி காட்டியப்பின்பு என்னவோ அதற்கு பிறகுதான் அவர்களை அடிக்கடி பார்ப்பது போல உணர்வோம். இரண்டு முறை அவனை  கடை தெருக்களில் பார்த்திருக்கிறாள் அப்போதும் சிறியவள் கூறுவதுப் போல அவன் எந்த பெண்களையும் பார்க்கவில்லை தான், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தான். ஓரிரு முறை அவனை பார்த்தவள் பின்பு தன் வழக்கம் போல் அவனை கண்டுகொள்ளவே இல்லை.

“ஹே என்னடா எதுக்கு இப்ப இந்த பூ அலங்காரம் எல்லாம்...” என்று மரத்தின் மேலே ஏறி சில கிளைகளின் பூக்களை அடுக்கிக்கொண்டு இருந்தவனை பார்த்துக்கேட்டான் மற்றவன்.

“டேய் இன்னைக்கு valentine டே டா...”

“சரி அதுக்கு...”

“நம்ம கல்லூரில நிறைய சொல்லாத காதல்கள் இருக்கு... அதுல ஒரு ஜோடியையாவது இன்னைக்கு சேர்த்து வைக்காட்டி நம்மலாம் இந்த காலேஜ்ல படுச்சு என்னடா use” என்று காதல் ஜோடிகளை சேர்ப்பதே தனது கடமை என்பது போல ஒருவன் பேசினான்.

“நல்ல எண்ணம் மாப்ள... யாரு பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோடியா?”

“டேய் மாப்ள எப்படிடா கரெக்டா சொன்ன???”

“எல்லாம் ஒரு மன கணக்கு தான் மாப்ள” என்று பெருமையாக சிளிப்பிக்கொண்டு கூறவும் அவனை “நண்பன்டா” என்று அணைத்துக்கொண்டான் மற்றவன். “நம்ம சொன்னால் ஒத்துக்க மாட்டிங்குராங்க... கேட்டால் நண்பர்கள்ன்னு சொல்லிக்குறாங்க.. இன்னும் எத்தனை நாட்களுக்கு அப்படி இருப்பாங்கன்னு தெரியலை. அதுனால இன்னைக்கு அவங்கள இங்க தான் வர சொல்லிருக்கேன். அவங்க வந்ததும் இங்க கட்டிருக்கு பத்தியா கயிறு அதை அந்த புதருக்கு பின்னாடி நின்னு இழுத்துவிடுவோம்... ஒரு லவ் மூட் கொண்டு வந்து அவங்களை ப்ரோபோஸ் பண்ண வைக்குறோம்” என்று அவன் கூறுவதை பார்த்துவிட்டு “மாப்ள இதெல்லாம் கொஞ்சம் பழைய டெக்னிக் மாதிரி இருக்கே...” என்று இழுவையாக கூறினான்.

“என்னடா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட, நம்ம பல்லு வேலக்குறது கூடத்தான் பழைய விஷயம் அதெல்லாம்மா பார்க்க முடியும் கடைசியா அவங்க காதல் செருதா அதுதான் முக்கியம் மாப்ள” என்று தனது பழுதடைந்த யோசனைக்காக பரிந்து பேசினான்.

“அது சரிடா, அதெப்படிடா மறஞ்சு இருந்தா வரது தெரியும்”

“அதுவும் ஒரு மனக்கணக்கு தான் மாப்ள...” என்று அவன் தோளில் தட்டி சிரித்துக்கொண்டான்.

“சரி ஓகே... ஆனால் மாப்ள ஆளுங்க மாறி போயிடாதுல...”

“அதெல்லாம் இல்லடா, காலேஜ் முடிஞ்சு எல்லாம் கெளம்பியாச்சு பாரு, இடமே காத்து வாங்குது அவங்க மட்டும் தான் வருவாங்க... இரு ஒரு நிமிதம் போன் பண்ணி பேசிடுறேன் அவன்கிட்ட...”

“ஹலோ...”

...

“டேய் மச்சா... எங்க இருக்கீங்க...”

...

“என்னது வெளிய போயிருக்கீங்களா??”

...

“அதானே பார்த்தேன், வந்துட்டு இருக்கீங்களா... நான் சொன்ன எடத்துல வெயிட் பண்ணுங்க ஒரு முக்கியமான விஷயம் பேசணும் நானும் அங்க வந்திடுறேன்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான். அவன் பேசியதை வைத்தே ஜோடி இங்கே இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடும் என்று உணர்ந்துவிட்டு நம்பிக்கையோடு வேலையை துவங்கினர் இருவரும்.

“மச்சா... timing மிஸ் ஆக கூடாதுடா... கரெக்டா அவங்க வந்த உடனே... இந்த climateக்கு இந்த இடத்துக்கும் கொஞ்சம் கொஞ்சமா அவங்க மனசு மாறும், நம்ம கணக்குப்படி அவங்க மனசுல இருக்க காதல வெளிய சொல்ல துடிப்பாங்க... அவங்க முதல் வார்த்த பேசினதும் டக்குனு இழுக்கணும் புரியுதா... climate வேற இன்னைக்கு நல்லா இருக்கு கண்டிப்பா இன்னைக்கு நம்ம அவங்களை சேர்க்குறோம் சரியா??” என்று அவன் ஒரு தயாரிப்பாளர் எடுத்துரைப்பது போல உள்வாங்கி நடித்தெல்லாம் காட்டி நண்பனுக்கு புரியவைத்தான்.

அவன் பேசியதில் அந்த முட்டாள் தோழனும் உருகிவிட “சரிடா மாப்ள...” என்று கூறிவிட்டு “உன்ன நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா மாப்ள... நீ ரொம்ப நல்லவன்டா...” என்று இல்லாத கண்ணீரை துடைத்துக்கொண்டான் (இப்படி தேவையே இல்லாமல் தர்ம காரியம் செய்யும் இவங்க... சொல்லுற அளவுக்கு பெரிய ஆட்கள் இல்ல... மித்ரா, கீர்த்தி படிக்கும் அதே வகுப்பில் படிக்கும் ஒரு  வெட்டி guys அவ்வளவு தான்...)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.