(Reading time: 23 - 45 minutes)

முதலில் இருந்து ஷீலாவை தடுக்க முயற்சி செய்தவண்ணமே கீர்த்தியை பார்த்தவனுக்கு பாவமாக இருந்தது. எனவே எதுவும் பேசாமல் “ஷீலா வா போகலாம் டைம் ஆச்சு” என்று கொஞ்சம் கடினமாக கூறினான்.

அவன் தனது பெயரை கூப்பிடவும் கோவமெல்லாம் குறைந்துப் போக, “ம்ம்ம்ம் சரி சரி ஏதோ தெரியாம மத்தவங்க மாதிரி முயற்சி பண்ணிருக்க பொழச்சுப்போ... அடுத்த முறை உன் தகுதிக்கு ஆசை படு” என்று ஒரு ஏளன முறுவல் பூத்தாள்.

அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தவள், கடைசி வாக்கியத்தில் “ஹலோ... என்னை என்ன உன்னை மாதிரி அலையுற டைப்ன்னு நினைச்சியா? எப்போ பாரு வழிஞ்சுகிட்டு உரசிகிட்டு நிக்குறதுக்கு, விழுந்து விழுந்து முயற்சி பண்ணுற அளவுக்கு அங்க ஒன்னும் இல்லை, தேவை இல்லாமல் பேசாத” என்று அவனை குறிப்பிடும் இடத்தில் அவனை நோக்கி முறைத்துவிட்டு சட்டென தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

அவளுக்கோ தன்னை அவன் முன்னால் கேவல படுத்திவிட்டாளே என்று ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் இவனும் அவளை தடுத்து நிருத்தவில்லையே அப்போது அவனுக்கும் அதே ஏளன நினைப்பு தானே இருக்கும் என்று கீர்த்தியின் மனதில் தோன்றிக்கொண்டு இருந்தது.

அவள் பேசியது ஷீலாவை படுக்கோவத்தில் ஆழ்த்தியது என்றாள், விரேனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவள் போன திசையையே மெல்லிய முறுவலோடு பார்த்தவனுக்கு நம்பவே முடியவில்லை, அவனை சுற்றி எப்போதும் கண்ணெடுக்காமல் பார்க்கும் பெண்கள் தான் அதிகம், முதலில் அவள் கண்டுகொள்ளாமல் இருந்ததே அதிசயமாக இருந்தது அதுவும் கடைசி வரியில், பார்க்கும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்று தன்னை நோக்கி கூறிவிட்டு சென்றது அவனுக்கு ஆச்சர்யத்தின் உச்சகட்டம். அவளை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தவனுக்கு அப்போதும் அதை நினைத்து ஷீலா கத்திக்கொண்டு இருந்தது காதில் விழவே இல்லை. நிகழ்காலம் வந்தவன் ஒருவழியாக அவளை சமாதானம் செய்துவிட்டு கிளம்ப எத்தனித்தான். கைக்குட்டையை தேடியவன் அது அடித்திருந்த காற்றில் தூரமாக பறந்து சென்றிருந்ததை பார்த்துவிட்டு, எடுத்துக்கொண்டு ஷீலாவை சமாதானம் செய்த வண்ணம் இடத்தைவிட்டு நகர்ந்தனர்.

ஷூட்டிங் எல்லாம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் நேரத்தில் அவசரமாக வந்து ஒட்டிக்கொண்டாள் ஷீலா.

“விரேன்...”

“ம்ம்ம்ம்...”

“இப்போ நீ ப்ரீயா??? வெளிய டின்னெர் போலாமா???" என்று பைக்கில் ஏறி அமர்ந்திருந்தவன் மேலே உரசிய வண்ணம் அருகே நின்று வழிந்தாள். அவளை ஒரு முறை பார்த்தவன் அவள் எதற்காக முயற்சிக்குறாள் என்று தெரியாமலும் இல்லை, அவன் பார்க்காததும் இல்லை. அவன் மீது இருந்த அவளது கையை எடுத்துவிட்டு “இல்லை ஷீலா எனக்கு இன்னொரு ஷூட்டிங் இருக்கு நான் போகணும் அப்பறம் முடிஞ்சா பார்க்கலாம்” என்று முறுவலோடேயே கூறினான்.

அவன் கூறியதால் போய் விடுவாள் என்று நினைத்தவனுக்கு அவள் மீண்டும் பேசியது தான் ஆச்சர்யம். “ஓ... வேணும்னா என்னை உன்னோட வீட்ல ட்ரோப் பண்ணிட்டு நீ ஷூட்டிங் போ.. நான் அங்க உனக்காக கேண்டில் லைட் டின்னெர் ரெடி பண்றேன்” என்று கண்ணெலாம் அடித்து வழிய துவங்கிவிட்டாள்.

அவனுக்கு அந்த வாக்கியங்கள் புதிதல்ல ஆனால் முதல் நாள் பழக்கத்திலேயே இவளின் குணத்தை நினைத்து அருவருப்படைந்து நாசுக்காய் நகர நினைத்தான்.

“இல்ல ஷீலா அதுக்கு அப்பறம் நான் வெளிய போகிற வேலை இருக்கு.. டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என்று அவளின் பதிலுக்கு கூட காத்திராமல் கிளம்பிவிட்டான். போகும் வழியெல்லாம் அவள் நடந்துக்கொண்ட விதம் அவனை அருவருப்படைய செய்தது. அவளை பற்றி யோசித்தாலே இலவச இணைப்பாக மற்றொன்றும் நினைவில் வந்தது. அது கீர்த்தியின் வாக்கியம்..

விழுந்து விழுந்து முயற்சி பண்ணுற அளவுக்கு அங்க ஒன்னும் இல்லை... அவள் பேசியது கோவத்தை தராமல் சிரிப்பை தான் தந்தது அவனுக்கு. மெல்லிய முறுவலோடு மனநிலை மாறிவிட தான் தங்கி இருக்கும் அறைக்கு வந்துவிட்டான். பைக்கை  நிறுத்திவிட்டு அதில் சொருகி இருந்த கைக்குட்டை எடுக்கும் பொழுது தான் அதில் சிக்கி இருந்த மற்றொரு கைக்குட்டையை பார்த்தான்.

எடுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றவன் குப்பை தொட்டியில் போட எத்தனிக்கும்  பொழுது தான் அதில் ஏதோ எழுதி இருப்பதை பார்த்தான். அதில் கீர்த்தி ??? என்று எழுதிருக்க, யாராக இருக்கும் என்று அவனுக்கு புரியவே இல்லை.

“இது என்ன புதுவித ப்ரொபோசலா யாரு இதை என்னுடைய பைக்ல வச்சது?? காலைல இருந்து எங்கெல்லாம் போனோம்” என்று பொறுமையாக யோசித்தவனுக்கு அப்போது தான் ஷீலா தன்னை பார்த்து சண்டை போட்ட பெண்ணை கீர்த்தி என்று குறிப்பிட்டது நினைவிற்கு வந்தது.

“அடடா... சண்டகாரியோட கற்சீப்பா” என்று சிரித்துக்கொண்டவன் அதில் இருக்கும் “கீர்த்தி ??? என்னவாக இருக்கும் ஒருவேளை அவனோட லவர் பேரை அந்த இடத்தில் போடுறதுக்கு பதில் இப்படி போட்டிருக்களோ... அப்படிதான் இருக்கும்... லவ் பண்றாளா மேடம்... அதான் இவ்வளவு வீராவேசமா...” என்று மீண்டும் ஒரு புன்னகை பூத்துவிட்டு மீண்டும் அந்த கைக்குட்டையை அவளிடம் கொடுத்துவிடும் எண்ணத்தோடு மடித்து மேசையில் வைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.