(Reading time: 23 - 45 minutes)

ப்படி பேசியவர்கள் ஒரு நினைப்பில் கயிறின் மறு முனையை பிடித்துக்கொண்டு ஒரு புதருக்கு பின்னால் ஒழிந்துக்கொண்டனர்.

“ஹே... செம ஹாட்டா இருக்க ஷீல்...” என்று ஒரு பெண் மற்றவளிடம் கூறவும் அந்த பெண்ணுக்கு அவ்வளவு பெருமை... களையாத முடியை கொஞ்சம் சரி செய்துக்கொண்டு “தேங்க்ஸ்டி... இன்னைக்கு என்ன பிக்கப் பண்ணிக்க யார் வரான்னு தெரியுமா...”

“யாரு...”

“மாடலிங் பண்றான்ல... விரேன் அவன் தான்...” என்றதும் மற்றவளின் கண்கள் ஆச்சர்யத்தில் பெரிதாகிவிட்டது...

“ஹே நிஜமாவா... அவனை உனக்கு எப்படி தெரியும்... எப்படி... சொல்லு...” என்று அவளை போட்டு உலுக்க துவங்கிவிட்டாள்

“இரு இரு.. நான் தான் படுசுட்டே மாடலிங் பண்றேன்ல... இப்போ பண்ண போற ஆட்க்கு(ad) அவன்கூட தான் நடிக்குறேன்...”

“ஹே பரவல்லாடி இப்ப தான் நடிக்கவே போற அதுக்குள்ள உன்னை கூட்டிட்டுப் போக அவனே வரானே” என்று இன்னும் அதிகமாக ஏற்றிவிட அந்த பெண் இன்னும் பெருமையில் குளிர்ந்துப் போனாள்.

“பின்ன என் போடோஸ் பார்த்துட்டு இவங்க தான் என்கூட சூட் பண்ணணும்னு டைரக்டர்ட சொன்னதே அவன் தானாம்” என்று இன்னும் அளந்துவிட்டாள்.

“அப்படியா??? சூப்பர்டி...” என்று அவள் இல்லாத கதையெல்லாம் கூறினாலும் அதையெல்லாம் ஒரு வியப்போடு கேட்டுக்கொண்டாள் மற்றவள். ஆனால் உண்மையிலேயே இப்படி கல்லூரியில் விளம்பரம் செய்து கொள்வதற்காகவே விரேன் டைரக்டர் பேச்சை கேட்பான் என்று அறிந்துக்கொண்டு அவரிடம் ஏதேதோ காரணம் கூறி இவனை அழைத்துப்போக வரும்படி செய்தாள் ஷீலா.

“ஆனால் அவனுக்கு பொண்ணுங்கன்னாலே பிடிக்காதுண்ணுல சொல்றாங்க”

“ச்சே ச்சே அப்படியெல்லாம் கிடையாது ஏதோ அவனை கரெக்ட் பண்ண முடியலைன்னு பொறாமைல சொல்லுறாங்க... அதோட அவன் இன்னும் என்ன மாதிரி ஒரு அழகியை பார்க்கல இல்ல.. அதான் அப்படி எந்த பெண்ணையும் பார்க்குறதே இல்லை” என்று மிடுக்காக சொல்லிக்கொண்டாள் அந்த மாடல் பெண் ஷீலா...

மற்றவளும் எதற்குடா கேட்டோம் என்று நினைத்துக்கொண்டு கல்லூரி வாசலில் ஓசியில் விரேனை பார்த்துவிடும் நோக்கத்தோடு அவளோடு நின்றுக்கொண்டு இருந்தாள்.

“ஹே மித்து எங்க இருக்க? கிளாஸ் முடிஞ்சு நான் ரொம்ப நேரமா உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.”

...

“என்ன இன்னும் 1௦ நிமிஷமா? அடி வாங்குவ ஒழுங்கா சீக்கரம் வா...”

...

“சரி.. நான் நம்ம காலேஜ் கான்டீன் வெளிய இருக்க மரத்தடியில இருக்கேன். சீக்கரம் வந்திரு...” என்று தங்கையிடம் பேசிவிட்டு கைபேசியை உள்ளே வைத்தவள், தன் இருசக்கர வாகனத்தை ஒரு அழுத்து அழுத்தி சொன்ன இடத்திற்கு சென்றாள். அந்த மரத்தடி அவளுக்கு மிகவும் பிடித்த இடம், படங்களில் வருவது போல பெரியதாக இருக்கும் அமர்வதற்கு ஏதுவாக. பொறுமையாக தனது வண்டியை நிறுத்தியவள் அதன் மேலே சாய்ந்துக்கொண்டு காத்திருந்தாள். அவள் தங்கை சொல்லிய 1௦ நிமிடம் இன்னும் 15 நிமிடமாக மாறவும், தனது கைக்குட்டையை எடுத்து பேனாவினால் அதில் வரைய துவங்கிவிட்டாள். எப்போதும் இருக்கும் குழப்பத்தில் கைகுட்டையில் கீர்த்தி ??? என்று எழுதி இருந்தாள், தனது கனவினை நினைத்துக்கொண்டு. அதை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தவளுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.

அந்த இரு புத்திசாலிகள் எதிர்பார்த்த இருவரும் வேறொரு வேலை காரணமாக அங்கு வராமலே போய்விட, எங்கே போனில் அழைத்து கூறினால் திட்டுவானோ என்று அவர்கள் குறிப்பிட்டு இருந்த ஜோடி அவனிடம் சொல்லாமலே கிளம்பிவிட்டனர். அதை அறியாத இந்த பொது சேவை நிபுணர்கள் காத்துக்கொண்டே இருந்தனர்.

“என்னடா மாப்ள இன்னமும் அவங்களை காணம்...”

“இருடா... காதல்ல பொறுமை வேணும்...”

“அவங்க காதலுக்கு நம்மளுக்கு எதுக்குடா பொறுமை வேணும்??”

“அதெல்லாம் நீ இந்த விஷயத்தில் சின்ன பையன், உனக்கு புரியாது. நான் சேர்த்துவைக்காத ஜோடிகளா...” என்று பெருமையாய் பேசிக்கொண்டான் கீர்த்தி அங்கு வரும் வரை.

வெகு நேரம் காத்திருந்தவர்களுக்கு கீர்த்தியின் வண்டி சத்தம் கேட்டதும், “சொன்னேனே கேட்டியா... அவள் வந்துட்டாள் பாரு, அவனும் கொஞ்ச நேரத்தில் வந்திருவான் பாரு...”

“எப்படிடா...”

“அதெல்லாம் அப்படிதான்... ஒன்னா சேர்ந்து வந்தால் நம்ம கிண்டல் பண்ணுவோம்னு தனி தனியா வராங்களாம். நம்மலாம் யாரு நம்மளை ஏமாத்த முடியுமா” என்று காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு பைக்கில் தூரத்தில் விரேன் வருவது தெரிந்ததும், சட்டென ஷீலா அவளது கைபையில் இருந்து தனது மேக்கப் செட்டை எடுத்து முக அலங்காரம் செய்ய துவங்கினாள். மற்றவளோ மிக ஆர்வமாக அவனை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.