(Reading time: 23 - 45 minutes)

வர்கள் இருவரும் தொலைவில் இருந்தே பார்த்துவிட்டதால் அவர்கள் நடக்க துவங்கினர்.

“ஹே நீ எங்க வர??”

“விரேன் கிட்ட கொஞ்சம் introduce பண்ணிவைடி ப்ளீஸ்...”

“நோ நோ அதெல்லாம் அவனுக்கு பிடிக்காது நீ கெளம்பு நானே போயிக்குறேன்” என்று கூறிவிட்டு நடக்க துவங்கினாள் ஷீலா.

வந்தவன் கீர்த்தியின் வண்டிக்கு அருகிலேயே பைக்கை நிறுத்தினான். ஹெல்மட் அணிந்திருந்ததால் கண்கள் உயர்த்தி அவனை பார்த்தவள் முகத்தில் எதுவும் காட்டிக்கொள்ளாமல் மீண்டும் மும்பரமாக எதையோ கைபேசியில் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“டேய் மாப்ள ரெண்டு பேருமே வந்துட்டாங்க போலடா...”

“ஆமா... இரு இரு அவங்க முதல்ல பேச ஆரம்பிக்கட்டும்...”

“டேய் பேசுறதே கேட்கலைடா...”

“டேய் எல்லாம் ஒரு மனக்கணக்கு தான்னு சொன்னேனேடா... எத்தனை முறை எத்தனை காதல் கதைகள் சொல்லிருக்கேன்... அனேகமா முதல் வார்த்தையே லவ் யூ னு சொன்னாலும் ஆச்சர்யப்படுரதுக்கு இல்லை... சோ நம்ம பேசுற சத்தம் கேட்ட உடனே கயிறை இழுக்கணும்.”

விரேன் ஹெல்மெட்டை கழட்டிவிட்டு தலையில் கட்டி இருந்த வெள்ளை கைக்குட்டையை அவிழ்த்து முடியை சிலுப்பிக்கொண்டான்.

“ச்சே... தூரத்துல இருந்து பார்க்கும் போதே என்ன ஸ்மார்ட்டா இருக்கான். பக்கத்துல வேற எவளோ நிக்குறாளே சீக்கரம் போகணும்” என்று விரைந்து ஓடிவந்தாள் ஷீலா.

மெல்லிய காற்று வந்து விரேன் கலட்டி வைத்திருந்த கைக்குட்டையை கீழே தள்ளிவிட, அதை கவனிக்காத விரேன் தூரத்தில் அழைத்து செல்ல வந்தவளை பார்த்துக்கொண்டு இருந்தான்.

தனது கால் அருகில் விழுந்த கைக்குட்டையை பார்த்தவள் எடுத்து அவனிடம் நீட்டி... “எக்ஸ்க்யூஸ் மீ... உங்க கற்சீப்" என்று நீட்டினாள். அப்போதுதான் அவனது முகத்தை பார்த்தவள் ஏற்பட்ட ஆச்சர்யத்தை முகத்தில் காட்டாமல் இருக்க பெரிதும் முயற்சித்தாள்.

“தேங்க்ஸ்” என்று அவளை ஒரு முறை பார்த்துவிட்டு மெல்லிய முறுவலோடு வாங்கிக்கொள்வதற்கும், பூக்கள் மரத்தில் இருந்து உதிர்வதற்கும் சரியாக இருந்தது. மெல்லிய காற்றுக்கும் அந்த பூக்களுக்கும் மெல்லிய உணர்வோடு அவள் அதை ரசிக்க, விரேனும் அதை தலை சிலுப்பி ரசித்தவண்ணம் அவள் புறம் திரும்பினான்.

ஏனோ ஒருவரை ஒருவர் பார்த்துகொண்ட தருணத்தில் அறிமுகம் இல்லாவிட்டாலும் நட்போடு ஒரு முறுவலை பகிர்ந்துக்கொண்டனர்.

“என்னடா சத்தமே இல்ல... நம்ம surpriseக்கு மதிப்பே இல்லாமல் போச்சே..” என்று நினைத்துக்கொண்டு இரு புத்திசாலிகளும் புதரில் இருந்து வெளியே வர, அங்கிருந்த இருவரையும் கண்டுவிட்டு அதிர்ச்சியில் “என்னடா இவ்வளவு நேரம் நம்ம பிளான் எல்லாம் யாரோ ஒருத்தருக்கு போயிருக்கே மாப்ள...” என்று வருத்தபட்டவனை, “டேய் மாப்ள அங்க நிக்குறது கீர்த்தி தானே, அவள் என்ன இன்னொரு பையன் கூட இருக்காள்???”

“ஹே அவனை தெரியலை மாடலிங் பண்ணுவானே விரேன், நம்ம காலேஜ் passed out சீனியர்டா.”

“ஒ... இவங்க எதுக்கு ஒன்னா நிக்குறாங்க??”

“யாருக்கு தெரியும், நம்ம பண்ணது இவங்களுக்கு use ஆனால் சரிதான்... என்னை ஏமாத்திட்டு அந்த ஜோடி புறாக்கள் எங்க போச்சுன்னு தெரியலை ஹ்ம்ம்... இருக்கட்டும்... வா மாப்ள போகலாம்” என்று இருவரும் சத்தம் போடாமல் இடத்தை விட்டு நகர்வதை அவர்கள் பார்த்தார்களோ இல்லையோ தூரத்தில் இருந்த ஒரு ஜீவன் பார்த்தது.

தூரத்தில் இருந்து பார்த்த ஷீலாவிற்கோ எரிந்தது. அங்கு வந்த மறு நொடியே... “என்ன கீர்த்தி  நீ தயாரிச்ச சீன் நல்லா முடிஞ்சுதா???” என்று அவள் கேட்கவும் ஒன்றுமே புரியாமல் இருவருமே அவளை பார்த்தனர்.

“என்ன சொல்ற?”

“எப்பபா என்ன ஒரு நடிப்பு... நீயே ஆளை வச்சு கயிறை கட்டி கிளைய இழுக்க சொல்லிட்டு எதுவும் தெரியாத பொண்ணு மாதிரி நிக்குற...”  என்று அவர்களுக்கு மேலே கட்டியிருந்த கயிறினை சுட்டி காட்டி கத்தினாள்.

“வாட்???” என்று மேலே பார்த்தவள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து தான் போனாள். இதையே அவனும் பார்த்துவிட, இப்போது கீர்த்திக்கு பெருத்த அவமானமாக இருந்தது, அவன் இப்போது என்ன நினைத்து கொள்வான், ஏதோ அவனுக்கு அலைவதாக அல்லவா நினைப்பான்.. யார் இதை கட்டினார்கள் என்று ஏதேதோ நினைத்துக்கொண்டு அவளிடம் “நிஜமா எனக்கு இதை யார் கட்டினதுன்னு தெரியாது ஷீலா...”

“போதும் போதும் நடிக்காத... ஆளு பார்க்க ஸ்மார்ட்டா இருக்கானே எப்படி மடக்குரதுன்னு யோச்சு பண்ணிருக்க...”

“உலராத ஷீலா, இந்நேரத்துல இவங்க வரது எனக்கு எப்படி தெரியும்??”

“எல்லாம் நான் இவன் கூட இன்னைக்கு ஷூட் பண்ண போறேன், என்ன கூட்டிட்டுப் போக இவன் வருவான்னு நியூஸ் தெரிஞ்சு தான் வந்திருக்க” என்று அடுக்கிக்கொண்டே போனாள்.

கீர்த்திக்கு இதை எப்படி அவனுக்கு அது அவள் செய்ய நினைத்த காரியம் இல்லை என்று புரியவைப்பது என்று புரியாமல் முழித்தாள். ஆனால் ஷீலா பேசிக்கொண்டே அந்த மனநிலையை விட அவளுக்கு கோவத்தை அதிகபடுத்திக்கொண்டேப் போனது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.