(Reading time: 23 - 45 minutes)

வளை பார்க்கும் எண்ணம் அவனிடம் இருந்தாலும் நேரம் தான் கிட்டாமல் போனது சில நாட்களுக்கு, அதே போல அப்படியே அவன் அவளை எங்காவது பார்த்தாள் கூட அவள் மேலும் முகத்தை திருப்பிக்கொண்டு போக துவங்கி இருந்தாள். ஓரிரு முறை அவளை கடை தெருக்களில் பார்த்துவிட்டு அழைத்து கொடுக்கலாம் என்று எடுப்பதற்குள் அவள் முன்பு நடந்த கசப்பான அனுபவத்தில் நிற்காமல் சென்றுவிடுவாள். அவனும் முயற்சி எடுத்துப் பார்த்து அவள் இப்படியே செய்துக்கொண்டிருக்க அவன் கொடுக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டான்.

இப்படிப்பட்ட அனுபவத்தில் அவளுக்கு என்னதான் விரேன் அவளுக்கு பரிந்து பேசவில்லை, ஷீலாவை தடுக்கவில்லை என்று நினைத்து கோவப்பட்டாலும் ஏனோ அவனை பார்க்கும் பொழுது ஒரு புரியாத உணர்வு ஏற்படும் அதை அவளால் தடுக்கவும் முடிவதில்லை.

“கீர்த்தி எல்லாம் எடுத்துகிட்டியா? ப்ரெஷ், டிரஸ், கிபிட் எல்லாம் எடுத்தாச்சா?”

“ஆச்சும்மா...”

“ம்ம்ம்ம் ஒழுங்கா பத்திரமாக போயிட்டுவா... எனக்கு ரீச் ஆனதும் கால் பண்ணு...”

“சரிம்மா...”

“ஊர் சுத்தாதடி... ஏதோ அந்த பொண்ணு 2 நாள் முன்னாடி வந்தால் ஹெல்பா இருக்கும்ன்னு சொன்னதால அனுப்புறேன். குடுத்த freedom ஒழுங்கா use பண்ணிக்கோ சரியா??”

இந்த ட்ரிப்க்கு இவ்வளவு அட்வைஸ் தேவையா என்று நினைத்துக்கொண்டு “சரிம்மா... பஸ் ஸ்டார்ட் ஆக போகுது நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க” என்று ஏதேதோ சமாதானம் செய்து  அனுப்பி வைத்தாள்.

முதல் முறை வீட்டில் காரணா காரியம் எல்லாம் கூறிவிட்டு தோழியின் திருமணத்திற்கு வந்திருக்கின்றனர். பின்னோடு நோட்டம் விடுவதற்கு யாரும் இல்லாததால் சுற்றுவது பற்றி யோசிக்க துவங்கினர். பெண்கள் கூட்டமாய் சென்றாலே பலரின் கண்கள் வந்த விழும் அதுவும் கத்தி சிரித்து அரட்டை அடித்து செல்லும் பெண்கள் மீது கண்கள் படத்தான் செய்தது. அதில் சில மோசமான கண்களும் அவர்கள் மேல் விழத்தான் செய்தது. அதெல்லாம் அந்த பெண்களின் மனதில் படியவே இல்லை. பேசிக்கொண்டே அரட்டை அடித்துக்கொண்டே தோழியிடம் முகவரி கேட்டு சென்றடைந்தனர்.

“ஹே... வாங்க வாங்க... ரேஸ்மா வரேன்னு சொன்னாலே காணம்...”

“அவளால வர முடியலைடி... கண்டிப்பா உன்கிட்ட பேசுறேன்னு சொன்னாள்பா....”

“ஹே என்னடி எல்லாரும் வருவீங்கன்னு தானே நினைச்சேன்...” என்று கொஞ்சம் முகம் சுருங்கி போனது.

“ஏய் கல்யாண பொண்ணு... இதெல்லாம் நடக்குறது தான்... பாரு கீர்த்தி எல்லாம் கல்யாணத்துக்கு அவங்க வீட்டுல விடுவாங்கன்னு நினைச்சுக்கூட பார்க்கலை. ஆனால் அவளே வந்துட்டாள் கடைசியில ரேஷ்மா வர முடியாமல் போயிடுச்சு..” என்று கிண்டலாக கூறினாள் மது.

தோழிகள் எல்லாம் சிறிது அரட்டை அடித்து மணப்பெண்ணை சிரிக்க வைக்க கீர்த்தியை கிண்டல் செய்து நேரத்தை கழித்தனர்.

“ஒய் என்ன நிறைய சடங்கா???” என்று கன்னத்தில் இருந்த மஞ்சளை தொட்டு மூக்கில் தடவி விளையாடினர்.

சிறிது நேரம் சென்ற பின்பு... அவர்கள் தங்கும் இடத்தை பற்றி சொன்னாள். “உங்க எல்லாருக்கும் ரூம் போற்றுக்கோம் தம்பி கூட்டிட்டு போவான் அங்க ஸ்டே பண்ணிக்கோங்க.. பிரெஷ் ஆனதும் அப்பாக்கு கால் பண்ணுங்க.. டின்னெர் இங்க தான்” என்று கூறினாள்.

“சரிங்க மேடம்... எங்க உன் ஆளு...” என்று கேட்டதும் எங்கிருந்து வந்ததோ அந்த வெட்கம், கன்னகுழித் தெரிய வெட்கத்தை மேலும் வெளிகாட்டாமல் “அவங்க இன்னொரு ஹோட்டெல இருக்காங்க...”

“அடேயப்பா... என்ன ஒரு வெட்கம்...” என்று கீர்த்தி கிண்டல் செய்யவும்..

“அதெல்லாம் நீயும் உனக்கு கல்யாணம் ஆகும் போது அப்படி தான் வெட்கபடுவ போடி...” என்று சமாளித்தாள்.

“யாரு... எனக்கா??? நடக்கும் போது பார்க்கலாம்...” என்று அலட்சியமாக கூறினாள் கீர்த்தி.

இப்படியே ஒருவித புது உணர்வோடு தங்களுக்கு கொடுத்த அறைக்கு சென்று குளித்துப் பேசி உறக்கம் போட்டுவிட்டு தோழி கூறியதுப் போல அவளது தந்தையை அழைத்தனர். என்னதான் மணபெண்ணின் தோழிகள் என்றாலும், எப்போதும் அவளோடு இருப்பது சாத்தியமாக இல்லை. ஏதோ தங்களுக்குலேயே பேசிக்கொண்டு அவ்வப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தான் பார்க்க முடிந்தது. அதுவும் மணப்பெண் நன்றாக உறங்கி எழுந்திரிக்க வேண்டும் என்று மறைமுகமாக உறவினர்கள் கூறிய பின்பு தோழிகளால் அங்கு இருக்க முடியவில்லை. உணவு முடிந்த பின்பு அங்கிருந்து தாங்கள் தங்கி இருந்த அறைக்கே திரும்பிவிட்டனர். முன்பே தூங்கிவிட்டதால் இப்போது என்ன பண்ணுவது என்றே புரியவில்லை அவர்களுக்கு.

“ஹே குல்பி சத்தம்....”

“ஆமா அதுக்கு என்ன???”

“வாங்கப்பா போய் வாங்கலாம்...”

“அடி பிச்சுருவேன், புது இடம் அதெல்லாம் எங்கயும் போக கூடாது எல்லாரும் தூங்குங்க” என்றாள் மது...

“ஏய் இதெல்லாம் அநியாயம், மணி இப்பதான் 12.3௦ ஆகுது. நான் வந்திட்டு தூங்கின தூக்கத்துக்கு நாளைக்கு வரைக்கும் எனக்கு தூக்கம் வராது... கீர்த்தி நீயாவது சொல்லேன்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.