(Reading time: 20 - 39 minutes)

வ அழுறது வெளிய கேட்குமோ….கண்மணி வீட்ல என்ன நினைப்பாங்க? அந்த நிலையிலும் அது நினைவு வர……தன் சத்தத்தை கட்டுப் படுத்த வழி தெரியாமல்….. அவளது கைகளும் இவன் கைகளுக்குள் இருந்ததால் சட்டென சரிந்து சைடிலிருந்த தலையணையில் முகம் புதைத்து கதற.…

மிகவுமே பாதிக்கப்பட்டான் விவன்…

அவள் கைகளை விட்டவன்…. சத்தத்தை எல்லாம் தலையணைக்குள் செலுத்தியபடி குலுங்கியவளை கசப்பை பருகியபடி சற்று நேரம் பார்த்திருந்தான்.

பின் பெட் அருகில் முழங்காலிட்டு அமர்ந்தவன் ஆறுதலாய் அவளது பின்தலையில் கை வைத்தான்….

வெடுக்கென வெட்டிக் கொண்டெல்லாம் விலகவில்லை அவள் இப்போது….

அப்படியே இன்னுமாய் சிறிது நேரம் அழுதவள்…… சற்று நேரத்திற்குப் பின் தலையணையிலிருந்து முகத்தை திருப்பி, கண்ணீர் ஏந்திய கண்களுடன் இவனைப் பார்த்து…

“ப்ளீஸ் விவன்….. ஸைக்கியட்ரிஸ்ட்ட பார்க்க என்ன பெர்மிட் செய்வீங்களா…ப்ளீஸ் கெஞ்சி கேட்டுகிறேன்….. வெளிய யார்க்கும் தெரியாம பார்த்துப்பேன்….. உங்க இமேஜையோ கண்மணியையோ எந்த வகையிலும் இது அஃபெக்ட் செய்யாம கவனமா இருப்பேன்… பட் நோன்னு மட்டும் சொல்லிடாதீங்க…..ப்ளீஸ்..”  மன்றாடினாள்.

“ப்ச்….ரியு உனக்கு ஒன்னும் இல்ல ரியுமா.…” இவன் ஆறுதலாக ஆரம்பிக்க….

சட்டென அவனை நோக்கி கை கூப்பி இருந்தாள் அவள்….

“ப்ளீஸ் விவன் சாகவும் முடியாது வாழவும் முடியாதுன்ற மாதிரி ஒரு நிலைல என்ன நிறுத்தாதீங்க….. தயவு செய்து பெர்மிஷன் கொடுங்க….” அவள் முகம் மொத்த உடல் என எல்லாவற்றிலும் எழுதப் பட்டிருந்தது கெஞ்சல்.

அதுவரையிலும் அவளைப் பார்த்து அவனும் தவித்துக் கொண்டிருந்தவன் தான்….ஆனால் அவளை இப்படிப் பார்க்க எப்படி இருக்கின்றதாம்? இப்போது சட்டென கோபம் வருகிறது இவனுக்கு….. ஆடு மாடு மாதிரி அவள இழுத்துட்டு வந்து அடச்சா வச்சிறுக்கான் இவன்? வெளிய போறதுக்கு கையெடுத்து கும்பிட்டு பெர்மிஷன் கேட்கா??

ஆனாலும் அதைக் காட்ட மனமின்றி….

“சரி ஆன் ஒன் கண்டிஷன் நான் இதுக்கு ஒத்துக்கிறேன்…” முடிந்தவரை முகத்தை இலகுவாக்கியே சொன்னான்.

படபடப்பும், பரிதவிப்பும், எதிர்பார்ப்பும், ஏக்கமுமாய் பார்த்தாள் அவள்.  எரிச்சலும் எச்சரிக்கையும் கூட… ஆனாலும் பொறுக்கித்தனமாய் எதுவும் சொல்ல மாட்டான் என முழு நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது….. அவன் கேம் ப்ளான் படி அவன் குட்பாயா நடிக்கிற மோட்ல இருக்கானே….

‘என்ன கண்டிஷன் போட போறான் இவன்…?’

“உன் பெஸ்ட் ப்ரெண்ட் யாரு…?”  கேட்டான் அவன்.

சற்றாய் எச்சில் விழுங்கியபடி பதில் சொன்னாள் இவள். “பூர்விக்கா…” அவங்கள இவனுக்கு பிடிக்காதே…..

“நான் ஃப்ரெண்ட கேட்டேன்….” நக்கலா கோபமா என்ன இருக்கிறது அவன் குரலில்..?

“நானும் ஃப்ரெண்ட தான் சொல்றேன்……அக்காதான் என் ஃப்ரெண்ட்…” உன் நக்கல் என்ன ஒன்னும் செய்யாது என்பது போல இவள். இப்ப ஏன் சண்டைக்கு இழுக்கான் இவன்?

“அவங்க உன்னவிட 10 வயசுக்கு மேல மூத்தவங்க ரியு….” அவங்கள தாண்டியும் வாழ்க்கையைப் பாரேன் என்பதுதான் இவனது ஆதங்கம்…. அவங்களோட ரிலடிவ் என்ற ஒரு காரணத்துக்காகத்தான் இந்த செபின மேரேஜ் செய்ய டிசைட் செய்துறுப்பா இவள் என்பது இவனது புரிதல்….அதுதான் இப்ப இப்படியாக வெளி வந்தது.

“14 இயர்ஸ் மூத்தவங்க… ” வெட்டு கத்தி குரலில் விளக்கினாள் இவள். 10க்கே ஃபீல் பண்றல்ல….குத்தட்டும் அவனுக்கு… அதென்ன அக்காவ இவன் எப்பவும் குறை சொல்றான்….?

“உங்க அம்மா உங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க கூடாதா?....” கான்ஃபிடென்ஸ் அன்ட் குட்டி கர்வம் அவள் குரலில்….அவனை பேச்சில் வளைத்துவிட்ட கர்வம்…

“யாரும் யார்கூடவும் ஃப்ரெண்டா இருக்க முடியும்…..எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்…” போடா நீயும் உன் ஃபிலாசஃபியும்…என்ற டோன் இங்கு…

அவள்  பதிலில் அவன் முகத்தில் மென்மை வந்து பாய்கிறது…. குட்டிப் புன்னகையும்…

“யாரும் யார்ட்டயும்….குட்…வெரிகுட்….” அவன் அவள் பதிலை பாராட்டிய விதத்தில்

இந்த வில்லன் என்ன ப்ளான் போடுறான்??? இவள் அல்டிமேட்டாய் அலர்ட்.

“நீ கேட்டபடி சைக்காலஜிஸ்ட்ட கூட்டிட்டுப் போறேன்….அதுக்கு..” அவன் அக்ரிமென்ட் ஃப்ரேசை ஆரம்பிக்க….

“நான் சைக்காலஜிஸ்ட்ட போகனும்னு சொல்லலை….அவங்களுக்கு மெடிசின் நாலட்ஜ் இருக்கும்னு சொல்ல முடியாது…சைக்கிக் தான் சரி…” எங்க அவன் புரியாம குழப்பிடுவானோ என சற்று அவசரமாய் இவள் விளக்க

“ஓகே உன் இஷ்டம்…. நீ கேட்கிற எதையும் செஞ்சு கொடுக்கிறேன்…..அதுக்கு நீ என்ன பூர்விக்கா மாதிரி உனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்டா நினச்சுக்கனும்…..” அவன் கண்டிஷனை கம்ளீட்டாய் சொல்லி வைத்தான்.

முடிந்த மட்டும் முறைத்தாள் இவள்…. பூர்விக்கா மாதிரி இவனையாமா??!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.