(Reading time: 20 - 39 minutes)

யாரும் யார்ட்டயும் ஃப்ரெண்ட்டா இருக்கலாம்னு நீதான் சொன்ன…… சோ ஐ’ம் யுவர் ஃப்ரெண்ட்…அதுவும் பூர்விக்கா அளவு ஃப்ரெண்ட்…”  என டீலை முடித்து சைன் வைத்தான் விவன்.

“வில்ல பாண்டியன், விருமாண்டின்னு எனக்கு என்ன பேர்னாலும் வச்சுக்கோ ஆனா இதுதான் ஃபைனல்…” அடுத்ததாய் சொல்லிவிட்டு அவன் அகல…

வில்ல பாண்டியனா???!!!!! கனவப் பத்தியும் இவன்ட்ட  உளறிட்டமா?? அடுத்த கவலையை கடன் வாங்கினாள் பெண். கூடவே ஹஸ்பண்ட்ன்ற பெரிய ட்ராமாவே ஓடிகிட்டு இருக்கு…..இதுல இதென்ன ஃப்ரெண்டுன்னு சின்ன லெவல்ல ஆரம்பிக்கான்…? என்றும் தோன்றுகிறது…

சற்று நேரம் படுக்கையில் அவள் அப்படியே அமர்ந்திருக்க இப்போது மீண்டுமாய் இவளிடம் வந்தவன்….. ஃபர்ஸ்ட் எய்ட் பாக்‌ஸை பக்கத்தில் வைத்துவிட்டு….. “கைய க்ளீன் செய்து மெடிசின் போட்டுக்கோ……மெடிசின் யூஸ் செய்ய கூடாதுன்னு நினச்சா ஆலிவ் ஆயிலாவது போடு….அதுவும் இருக்குது…..பட் டேக் கேர்…..” என்றுவிட்டு போனான்.

‘எவ்ளவு நாள் இப்படி நல்லவனாவே ஆக்ட் செய்ய முடியும்னு நினைக்கிறான் இவன்?’ என கேள்வி தோன்றுகிறது அவளுள்.

றுநாள் காலை ரியா குளித்து கிளம்பி ப்ரெசண்டபிளாய் அவர்களுக்கான அறையைவிட்டு வெளியே வரும் போது ” குட் மார்னிங் அண்ணி, காஃபி எடுத்துட்டு வர சொல்றேன்….“ என்றபடி ரிசீவ் செய்தது கண்மணி…

“பிரவாயில்ல கண்மணி, கொஞ்சம் டைம் ஆகட்டும்… ப்ரேக் ஃபாஸ்ட்டோட சேர்த்து சாப்ட்டுப்பேன்…” இவளுக்கு எதோ உடல் குறிப்பாக வயிறு சரி இல்லாத உணர்வு அதில் மறுக்க…

கண்மணிக்கு அது என்னதாக தோன்றியதோ, அவள் முகத்தில் மலர்ச்சியோடு சின்னதாய் கனிவும் எட்டிப் பார்க்கிறது….

“ஓ அண்ணாக்காக வெயிட்டிங்கா…. அவன் இன்னுமா ரெடி ஆகல….?”

“அவங்க தூங்குறாங்க…” இங்கிருந்து பார்த்தால் தெரியாது எனினும், இவளோட கண் அதுவாக அறையின் கதவு நோக்கி போய் வருகிறது….

“ ஹான் இன்னும் தூங்குறானா?.....நீங்க எழுப்பலையா அண்ணி……?” கண்மணி குரலில் துள்ளல் வந்திருந்தது. அவளே போய் எழுப்பினாலும் எழுப்பிடுவாளா இருக்கும்.

“அவங்க தூங்க ரொம்ப லேட்டாகிட்டு கண்மணி…… அதான்..”

விவன் நேற்று இவள் மீண்டும் தூங்கும் வரை கூட தூங்கவில்லை…அடுத்து எப்ப தூங்கினானோ…அதைத்தான் இவள் சொன்னது.

ஆனால் கேட்டிருந்த கண்மணியின் முகத்தில் அப்படி ஒரு கனிவு மற்றும் பூரிப்பு… சட்டென இவள் கைகளை வந்து பற்றிக் கொண்டாள்…

“தேங்க்ஸ் அண்ணி…” சொன்னவள் கண்ணில் நீர் கோர்க்கிறதோ? ரியாவுக்கு என்ன ஏது என எதுவும் புரியவில்லை….

“ இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்ல கூடாதுதான்……ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்குது…அதை எப்படி எக்ஸ்‌ப்ரெஸ் செய்யனு தெரியலை…. “  கண்மணி முகத்தில் விம்மும் சந்தோஷத்தையே பார்த்திருந்தாள் ரியா.

 “எங்க அம்மா அப்பா பத்தி அண்ணா சொல்லி இருப்பான்ல…..சோ சின்னதுல இருந்தே என்னை அவன் பேம்பர் செய்துறுப்பான்…..ஆனா அவன யாரும் எப்பவும் எதுக்காகவும் பேம்பர் செய்துறுக்கவே மாட்டாங்க….. அவனுக்கு வர்றவங்களாவது அவனை கேரிங்கா பார்த்துகனும்னு தோணும் எனக்கு…..” ஒரு சின்ன பாஸ் விட்டாள் விவனின் தங்கை…

அவனைப் போய் இவ எப்படி எழுப்பன்னு எழுப்பாமவிட்டா…அத இந்தப் பொண்னு எதோ கேரிங்க் பேம்பர்னு என்னலாமோ நினைக்குதே எனதான் மற்ற நேரமா இருந்தா ரியாக்கு தோன்றி இருக்கும்…… ஆனால் அவள் விவன் பெற்றோரைப் பற்றி  குறிப்பிட்ட விதத்தில் இவளுக்கு மனதில் ஒரு பிசைதல்….

“உங்களோடது லவ் மேரேஜ்தான அண்ணி…?” அதற்குள்  இப்படியாய் ஒரு கேள்வி கண்மணியிடமிருந்து…..

இவள் பே என முழித்துவிட்டாள் போலும்…..

“அச்சோ தப்பா எதுவும் இல்ல அண்ணி…..உங்கள சொல்லலை…..அவன சொல்றேன்….எனக்கு புரிஞ்சவரை இது லவ் மேரேஜ்னு தான் தோணும்…..ஆனா அவன் இதெல்லாம் என்ட்ட பேச மாட்டான்….. அவன் எப்பவும் இப்படித்தான்…அவனுக்கு என்ன வேணும்னு பொதுவா எக்ஸ்‌ப்ரெஸ் செய்ய மாட்டான்….” என அவசர விளக்கம் கொடுத்த கண்மணி

 “எனக்கு மேரேஜ் ஃபிக்‌ஸானதுல இருந்து எனக்கு பிறகு அண்ணா இங்க தனியா இருப்பானேன்னு ரொம்ப கஷ்டமா இருந்துது…. உண்மையில் அழுது ஆர்பாட்டம் செய்துட்டேன்……நான் போறதுக்குள்ள நீ மேரேஜ் செய் இல்லனா நான் கல்யாணமே செய்ய மாட்டேன்னு…. அதுவரைக்கும் அவன் மேரேஜ பத்தி ப்ளான்லயே இருந்த மாதிரி எனக்கு தோனாது…..ஆனா நான் பிடிச்ச பிடிவாதத்துல தான் சரின்னு சொன்னவன்…..நான் பொண்ணு எப்படி எது மூலமா பார்க்கலாம்னு சொல்ல ஆரம்பிச்சப்ப….அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு நேர உங்க வீட்டத்தான் அப்ரோச் செய்தான்…. அப்பவே கேட்டேன் அவன்ட்ட எப்டிடா இவங்களத் தெரியும்னு…. அதெல்லாம் ரொம்ப காலமா தெரியும்னு ஒரு மகா விளக்கமான பதில்….. .” பொங்கும் பூரிப்பை சிரிப்பாய் முகத்தில் காண்பித்தவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.